வெள்ளையர்தான் பிரதமராகவேண்டும்: இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் மீது இனவெறுப்பு விமர்சனம்

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் சில வெள்ளையர்களுடைய மனதிலிருந்து இனவெறுப்பை மட்டும் அகற்றவே முடியாது போலிருக்கிறது. பிரதமர் போட்டியில் களமிறங்கியுள்ள இந்திய வம்சாவளியினர் ரிஷி சுனக் மீது இனரீதியான விமர்சனம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பிரபல வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஒருவர், இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் பிரித்தானிய பிரதமருக்கான போட்டியில் மீண்டும் களமிறங்கியுள்ள நிலையில், அவரது தோலின் நிறத்தை மேற்கோள் காட்டி, அவர் பிரித்தானியரே அல்ல என்னும் வகையில் பேசிய விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. LBC … Read more

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவு – இஸ்ரோ தலைவர் சோம்நாத்

ஸ்ரீஹரிகோட்டா, வெற்றிகரமாக பறந்தது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்துள்ள பிரமாண்டமான ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 (எல்.வி.எம்.3-எம்2), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து நேற்று அதிகாலையில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இங்கிலாந்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒன்வெப் இந்தியா-1 நிறுவனத்தின் 36 தகவல் தொடர்பு செயற்கைகோள்களை இந்த ராக்கெட் விண்ணில் நிலை நிறுத்தி உள்ளது. அந்தவகையில் இந்த வகை ராக்கெட்டின் முதல் வணிக பயணம் இதுவாகும். இந்த நிகழ்ச்சிக்குப்பின், … Read more

பிக் பாஸ் 6 நாள் 14 : நடந்தது முதல் எவிக்ஷன்; `அசிம் டு அசல்' வாத்தி ரெய்டு நடத்திய கமல்!

இந்த சீசனின் முதல் எவிக்ஷன் நிகழ்ந்து விட்டது. முத்து தானாக வெளியேறி விட்டதால் ஒருவேளை ‘எவிக்ஷன் இல்லை’ என்று டிவிஸ்டுடன் சொல்வார்களோ என்று கூட மெலிதாக தோன்றியது. இல்லை. சாந்தி மாஸ்டர் முதல் எவிக்ஷனாக வெளியேறியிருக்கிறார். அவரை விடவும் சுமாரான போட்டியாளர்கள் உள்ளே இருக்க, சாந்தி வெளியேறுவது ஒருவகையில் துரதிர்ஷ்டம்தான். (தினமும் மூன்று வேளை உப்புமா செய்து தந்த பாவம்தான், அவரை பலி வாங்கிடுச்சோ?!) குவின்சி நாள் 14-ல் நடந்தது என்ன? ‘சாமி சரணம்..ஐயப்பா..’ என்று பளபளா … Read more

பிரிட்டன் அடுத்த பிரதமராகிறார் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுனக்… போரிஸ் ஜான்சன் போட்டியிடப்போவதில்லை

பிரிட்னின் அடுத்த பிரதமராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்தெடுக்கப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. கட்சித் தலைமைக்கான போட்டியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகப்போவதாக அறிவித்துள்ளதை அடுத்து ரிஷி சுனக் பிரதமராவது உறுதி எனக் கூறப்படுகிறது. லிஸ் ட்ரஸ் பதவி விலகியதை அடுத்து பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டி எழுந்த நிலையில் கரிபியன் தீவில் விடுமுறையை அனுபவித்து வந்த ஜான்சன் சனிக்கிழமையன்று லண்டன் திரும்பினார். ஜான்சன் மீண்டும் பிரதமராவதற்கு 100 க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர் … Read more

`ஹேப்பி தீபாவளி' – A Film by `கிங்' கோலி!

ஒரு பெரும் பிம்பமுடைய நாயகனும் அவனது எழுச்சியும் இங்கே எப்படி எடுத்தாளப்படுகிறது? கதைகளின் ஆரம்பப்புள்ளியிலேயே அவன் அசாத்தியங்களை நிகழ்த்தி விடுவானா? நிச்சயமாக இல்லை. நாயகனுக்கென்றே சில குறைகள் இருக்கும், அதை நோண்டும் வகையில் எதிர்த் தரப்பிலிருந்து பிரச்னைகள் உண்டாக்கப்படும். நாயகன் தடுமாறுவான், வீழ்வான். எதிராளிகளின் கை ஓங்கும். ஆனால், கதை அத்தோடு முடிந்துவிடாது. நாயகன் கம்பேக் கொடுப்பான். மீண்டெழுவான், சண்டை செய்வான். உச்சக்கட்ட இறுதிக்காட்சியில் இதுவரை வெளிக்காட்டாத உக்கிரத்தை வெளிப்படுத்தி எதிராளிகளை வீழ்த்துவான். இதுபோன்று அவரவர் சிந்தைக்கு … Read more

தமிழ் சினிமாவின் முக்கிய கலை இயக்குனர் மரணம்

தமிழ் சினிமாவின் முக்கிய கலை இயக்குனர்களின் ஒருவரான சந்தானம் மாரடைப்பால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியவர் சந்தானம். தொடர்ந்து தெய்வ திருமகள், இறுதிச்சுற்று படங்களுக்கும் பணியாற்றினார், ரஜினியின் தர்பார், விஜய்யின் சர்கார் படங்களுக்கும் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இதுமட்டுமின்றி ப்ரொடக்ஷன் டிசைனராகவும் பணியாற்றியுள்ள சந்தானம் திடீர் மாரடைப்பால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் இரங்கல் … Read more

பரிமள ரங்கநாதர் கோயில், திருஇந்தளூர்

மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து மாப்படுகை சாலையில் 2 கி.மீ. தொலைவில் பரிமள ரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 26வது திருத்தலம். காவிரியின் வடகரையில் மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம் பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. பஞ்சரங்க தலங்களில் பஞ்சரங்கம் மற்றும் அந்தரங்கம் என்று சொல்லப்படுகிறது. வேதசக்ர விமானத்தின் கீழ் பரிமளரங்கநாதர் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார். பெருமாள் சந்நிதியின் கால்மாட்டில் ஸ்ரீதேவி கங்கையாகவும், … Read more

“உச்ச நீதிமன்ற தீர்ப்பு தவறு என்று வாதம் செய்வது அவமதிப்பாகாது” – முன்னாள் நீதிபதி ஏ.கே ராஜன்

சென்னை பல்கலைக்கழகத்தில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே ராஜனின் “Constitution of India Is Not What Is it “ என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. ஏ.கே ராஜன் முன்னாள் நீதிபதி மட்டுமல்லாமல் நீட் தேர்வினால் ஏற்படும் சவால்கள் குறித்து ஆய்வு செய்யும் கமிட்டியின் தலைவரும் ஆவார். இந்த புத்தக வெளியீட்டு விழாவில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி துரைசாமி ராஜு, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் … Read more

ரூ.1350 கோடியில் சொகுசு பங்களா! கடற்கரையுடன் .. இன்னும் பல வசதிகள்

துபாயில் இந்திய மதிப்பி்ன் படி ரூ.1347 கோடியில் சொகுசு பங்களாவை வாங்கியிருக்கிறார் முகேஷ் அம்பானி. துபாயின் பாம் ஜீமேரா தீவில் அமைந்துள்ள பங்களா சொந்தமாக்கி இருக்கிறார் முகேஷ் அம்பானி. குவைத் தொழிலதிபரிடமிருந்து வாங்கப்பட்ட இந்த சொத்து தான், அதிகபட்ச விலையுயர்ந்ததாக கருதப்படுகிறது. செயற்கையாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட இந்த தீவில் சொத்துக்களை வாங்கி குவிக்க தொழிலதிபர்கள், பிரபலங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் முகேஷ் அம்பானி வாங்கியுள்ள வீட்டின் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம். அழகான இயற்கை சூழ் தீவின் … Read more