எரிபொருள் விலை கட்டுக்குள் வரும்:| Dinamalar

மங்களூரு : ”பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு காரணம் அல்ல. விரைவில் விலை கட்டுக்குள் வரும்,” என்று பா.ஜ.,வின் முன்னாள் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறினார்.இது குறித்து மங்களூரில் அவர் கூறியதாவது:பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசின் பங்களிப்பு எதுவும் இல்லை. இதற்கு முந்தைய அரசு தான் காரணம்.முந்தைய அரசின் தவறான கொள்கையால் எண்ணெய் நிறுவனங்கள் தன் இஷ்டத்துக்கு விலையை நிர்ணயித்து கொள்கின்றன.ரஷ்யா – உக்ரைன் போரும் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது. … Read more

இந்தியாவுக்கு நல்ல காலம்.. இனி ஏறுமுகம் தான்.. தமிழ்நாட்டின் நிலை என்ன தெரியுமா..?!

இந்திய மக்களையும், இந்திய பொருளாதாரத்தையும் ஆட்டிப்படைத்து வந்த கொரோனா, ஒமிக்ரான் தொற்றுப் பாதிப்புகள் கடந்த 6 மாதத்தில் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் நாட்டின் வர்த்தகம், உற்பத்தி, ஏற்றுமதி ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவின் வேவைவாய்ப்பின்மை அளவு குறைந்து தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது என CMIE தரவுகள் கூறுகிறது. சென்னை மக்களுக்கு ஜாக்பாட்..! 300 ஏக்கரில் சிப் தொழிற்சாலை.. பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு..! CMIE அமைப்பு இந்திய வேலைவாய்ப்பு சந்தையைக் … Read more

“8 ஆண்டுகளில் 26,51,919 கோடி ரூபாய் எரிபொருள் வரி வசூலிப்பு, ஆனால்…!" – ப.சிதம்பரம் தாக்கு

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்புவரை ஏறத்தாழ 100 நாள்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. ரஷ்யா உக்ரைன் போர் சூழலில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபோது கூட, பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது தொடர்ந்து 13 நாள்களில் 11 முறை பெட்ரோல் – டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று … Read more

கோட்டாபய முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு! வெளியான முக்கிய தகவல்

 இலங்கையில் புதிதாக  4 அமைச்சர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சர்கள் 4 பேரும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். நிரந்தர அமைச்சரவை நியமிக்கப்படும் வரை தற்காலிக நடவடிக்கையாக நான்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அரசாங்கத்தின் மூத்த வட்டாரம் தெரிவித்துள்ளது. உக்ரேனிய மேயரை குடும்பத்துடன் கொன்று குழியில் வீசிய ரஷ்யா துருப்புகள்! வெளியான புகைப்படம்  தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு அமைச்சர்களின் விவரம்: அலி சப்ரி – நிதி அமைச்சர் தினேஷ் குணவர்தன – கல்வி அமைச்சர் … Read more

திமுக பிரமுகர் சவுந்தராஜன் கொலை வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் சரண்…

சென்னை: சென்னை பாரிமுனையில் திமுக பிரமுகர் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். தண்ணீர் பந்தல் அமைப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளது. சென்னை பாரிமுனையில் திமுக பிரமுகர் சௌந்தரராஜன் வெட்டி கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடைபெற்ற சம்பவவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை செய்யப்பட்ட சவுந்தரராஜன் சென்னை வியாசர்பாடியில் 59-வது வட்ட கழக செயலாளராக இருந்தவர் என்பது தெரிய வந்தது. இவர்  பிராட்வே பேருந்து … Read more

எஸ்.பி.வேலுமணி மேல்முறையீடு மனு- முதல் கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு

புதுடெல்லி: கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான விசாரணையை 10 வாரங்களில் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கில் … Read more

இலங்கை விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்கக்கோரி விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. நோட்டீஸ்

டெல்லி: இலங்கை விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்கக்கோரி விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. நோட்டீஸ் அளித்தார். இலங்கை பொருளாதார பிரச்சனை குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என மாணிக்கம் தாக்கூர் கூறினார்.

சுரங்க தொழிலாளர் குடும்பங்களுக்கு சொந்த வீடுகள்| Dinamalar

தங்கவயல் : ”பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் தங்கச் சுரங்க தொழிலாளர்கள் வசித்து வரும் வீடுகளை அவரகளுக்கே சொந்தமாக்க வேண்டும்,” என்று கர்நாடக மாநில தி.மு.க., அமைப்பாளர் ராமசாமி வலியுறுத்தினார். தங்கவயல் தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் மாநில அமைப்பாளர் ராமசாமி தலைமையில், மாநில துணை அமைப்பாளர்கள் ராஜேந்திரன், ராமலிங்கம், பொருளாளர் தட்சிணாமூர்த்தி முன்னிலையில் ராபர்ட்சன்பேட்டை கிங் ஜார்ஜ் அரங்கில்நடந்தது.தங்கவயல் நகர பொறுப்புக்குழு உறுப்பினர் முனிரத்தினம் வரவேற்றார். அவர் பேசுகையில், ” தங்கவயல் நகர பிரச்னைகளில் தி.மு.க., … Read more

முகேஷ் அம்பானிக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் டாடா நியூ.. கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமங்களில் ஒன்றாக இருந்து வரும் டாடா குழுமம், ஏற்கனவே உணவில் போடும் உப்பு முதல் விலையுயர்ந்த கார்கள், ஆபரணங்கள் என பல வணிகங்களிலும் வெற்றிகரமாக கோலோச்சி வருகின்றது. எனினும் எதிர்காலத்தின் தேவையறிந்து தனது வணிகத்தினை டிஜிட்டல்மயமாக்கியும் வருகின்றது. அந்த வகையில் தற்போது அம்பானியின் ஜியோமார்ட், அமேசான், பிளிப்கார்ட்டுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது டாடா. டாடா குழுமம் தனது சூப்பர் செயலியான டாடா நியூவினை (TATA neu) ஏப்ரல் 7ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. … Read more

“இலங்கையில் அனைத்துக் கட்சி அமைச்சரவை..!" – அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு

இலங்கையில் கடந்த சில வாரமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அதனால் அத்தியாவசியப் பொருள்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர், மக்கள் தெருவில் இறங்கிப் போராடி வருகிறார்கள். மக்களின் கடும் கொந்தளிப்பால் ஊரடங்கும் போடப்பட்டு ராணுவம் தீவிர ரோந்து பணியில் உள்ளது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு நடந்த இலங்கையின் அமைச்சரவை அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்து விவாதித்த பின்னர், அதிபர் கோத்தபய ராஜபக்சே, அவரின் சகோதரரும் … Read more