இமாச்சலில் காங்கிரஸ் வெற்றி எதிரொலி: பதவியை ராஜினாமா செய்தார் பாஜக முதல்வர் ஜெய்ராம் தாக்கூர்

சிம்லா: இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், அங்கு தோல்வியை சந்தித்த ஆளும் பாஜக அரசின் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான 35 இடங்களை பாஜக கைப்பற்றத் தவறியதால், முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 68 இடங்களைக்கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற்றது. இந்த வாக்குகள் கடந்த … Read more

நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தல்

சென்னை: நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. மெழுகுவர்த்தி, டார்ச் லைட், தீப்பெட்டி, மின்கலங்கள், குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. 

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சாக்லேட் கொடுத்த நபர்; வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படவிருப்பதால், அதற்கான முன்னேற்பாடுகள் தமிழகமெங்கும் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சேலத்தில் மர்ம நபர் ஒருவர் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சேலம், அஸ்தம்பட்டி டி.வி.எஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராணி. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, இரவு நேரத்தில் தன் வீட்டிலிருந்தபோது கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த ஒருவர் தெருவில் இருந்தவர்களுக்கு சாக்லேட் கொடுத்து வந்திருக்கிறார். அப்போது … Read more

குஜராத்தின் முதலமைச்சராக பூபேந்திர பட்டேல் மீண்டும் தேர்வு – 12ந்தேதி பதவி ஏற்பு…

காந்திநகர்: குஜராத்தின் முதலமைச்சராக பூபேந்திர பட்டேல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்  12ந்தேதி பதவி ஏற்பார், பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜக தலைவர்கள் கலந்துகொள்வார்கள்  பாஜக மாநில தலைவர்  சி.ஆர்.பட்டில் தெரிவித்துள்ளார். 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது.  இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக தொடர்ந்து முன்னிலையில் … Read more

மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்தது

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்தது. நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைந்துள்ளது

திருவனந்தபுரத்தில் சர்வதேச திரைப்பட விழா : நாளை கோலாகலமாக துவங்குகிறது| Dinamalar

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் மாநில அரசே நடத்தும் 27வது சர்வதேச திரைப்பட விழா நாளை (டிச.,9) கோலாகலமாக துவங்கி டிச.,16 வரை நடக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கியதால் இந்தாண்டு விழா கூடுதலாக களைகட்டும். அகில இந்திய அளவில் கோவாவிற்கு அடுத்து திருவனந்தபுரம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு உலகளவில் உள்ள திரை கலைஞர்களும், ரசிகர்களும் அதிகளவில் முக்கியத்துவம் கொடுப்பர். தமிழ், மலையாளம் உட்பட பல மொழி திரைப்பட வல்லுனர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் பங்கேற்பர். வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் … Read more

`பாஜக-வை எதிர்த்தவர்; இன்று அந்தக் கட்சியின் எம்எல்ஏ!' – ஹர்திக் படேலின் வெற்றி சாத்தியமானது எப்படி?

நரேந்திர மோடி பிரதமரான அடுத்த ஓராண்டில் குஜராத் பா.ஜ.க ஆட்சிக்கு பெரும் தலைவலியாக இருந்தவர் ஹர்திக் படேல். 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்துக்குப் பிறகு தேசிய ஊடகங்கள் குஜராத் பற்றி பேசியதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர். அவர் முன்னெடுத்த பட்டிதர் சமூகத்துக்கான இட ஒதுக்கீடு பிரச்னை பேசுபொருளானது. இதன் விளைவாக அப்போதைய முதலமைச்சரான ஆனந்திபென் பட்டேல்  தன் பதவியை ராஜினாமா செய்தார். இவ்வாறு பா.ஜ.க ஆட்சிக்குப் பெரும் குடைச்சல் கொடுத்தவரான ஹர்திக், தற்போது பா.ஜ.க சார்பாகப் போட்டியிட்டு … Read more

புயல் தொடர்பான அவசர கால உதவிக்கு 1913ஐ அழைக்கலாம் – கடற்கரைக்கு செல்ல வேண்டாம்! சென்னை மாநகராட்சி

சென்னை: மாண்டஸ் புயல் பாதிப்பு, அவசர கால உதவிக்கு 1913க்கு அழைக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது. மேலும், 044 25619206, 25619207, 25619208, 9445477205 என்ற எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுமண்டலம், மாண்டஸ் புயலாக வலுப்பெற்று மணிக்கு 12கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி … Read more

FIFA உலகக்கோப்பை கத்தார்: காலிறுதி போட்டிக்கு நுழைந்த அணிக்கு அபராதம்

கனேடிய கோல்கீப்பரை ரசிகர்கள் துஷ்பிரயோகம் செய்ததற்காக குரோஷியாவுக்கு FIFA அபராதம் விதித்துள்ளது. குரோஷியாவுக்கு ஃபிஃபா அபராதம் கடந்த மாதம் கத்தாரில் நடந்த இரு நாடுகளின் குரூப்-ஸ்டேஜ் மோதலின் போது, ​​கனடாவின் கோல்கீப்பரை குரோஷியா ஆதரவாளர்கள் துஷ்பிரயோகம் செய்ததற்காக உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியாளர்களான குரோஷியாவுக்கு ஃபிஃபா அபராதம் விதித்துள்ளது. நவம்பர் 27 அன்று நடந்த ஆட்டத்தில் குரோஷியாவின் ரசிகர்களின் நடத்தை தொடர்பாக குரோஷிய கால்பந்து கூட்டமைப்புக்கு 50,000 சுவிஸ் பிராங்குகள் ($53,000) அபராதம் விதித்துள்ளதாக உலக கால்பந்து … Read more

செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர் மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர் மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக இதுவரை 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.