தனுஷ்கோடிவரை புதிய ரயில் பாதை; ரூ.90 கோடி செலவில் புத்துயிர் பெறவிருக்கும் ராமேஸ்வரம் ரயில் நிலையம்!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் – ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் பாம்பனில் கடலின் நடுவே 1914-ம் ஆண்டு ரயில் பாலம் கட்டப்பட்டது. 105 ஆண்டுகள் பழைய ரயில் பாலத்தில் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டு வந்தன. அதனால் ரயில்கள் மிக மிகக் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில்களை விரைவாக இயக்கவும் அதன் மூலம் புதிய ரயில்களை அறிமுகப்படுத்தவும் புதிய பாலம் கட்ட ரயில்வே அமைச்சகம் முடிவு எடுத்தது. தற்போது புதிய ரயில் பாலம் 2.05 கி.மீ தூரத்திற்கு … Read more

பொது திருமண சட்டத்தை கொண்டு வருவது குறித்து மத்தியஅரசு தீவிரமாக ஆலோசிக்க வேண்டும்! கேரள உயர்நீதிமன்றம்

திருவனந்தபுரம்: நாடு முழுவதும் ஒரே வகையான பொது திருமண சட்டத்தை கொண்டு வருவது குறித்து மத்தியஅரசு தீவிரமாக ஆலோசிக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. பல்வேறு மதம் தொடர்பான திருமண சட்டங்களால் குடும்ப நீதிமன்றங்கள் மற்றொரு போர்க்களமாக மாறியுள்ளன என்றும் கருத்து தெரிவித்து உள்ளது. மத்தியஅரசு தற்போது நாடு முழுவதும் ஒரே வகையான சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், பொதுசிவில் சட்ட வரைவு மசோதாவை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி களின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தாக்கல் … Read more

திமுகவில் இணைந்தார் அதிமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயன்

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கோவை அதிமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயன் திமுகவில் இணைந்தார். கோவை வடக்கு மாவட்ட அதிமுக இளைஞர் அணி செயலாளராக செந்தில் கார்த்திகேயன் பொறுப்பு வகித்தார்.

FIFA World Cup 2022 – NED v ARG: 19 மஞ்சள் அட்டைகள்; ரணகளத்துக்கு நடுவே வென்ற அர்ஜெண்டினா!

அர்ஜெண்டினாவின் மெஸ்ஸிக்கு இதுவே கடைசி உலகக் கோப்பைத் தொடர். எனவே அவர் இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பிலிருக்கிறார். ஏற்கெனவே தனது கடைசி கோபா அமெரிக்க தொடரில் கோப்பையை வென்று, ஒரு சாதனையைக் கைவசப்படுத்தியிருக்கிறார். இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் அதிர்ச்சிகரமாக சவூதி அரேபியாவிடம் தோற்றிருந்தாலும், அதன் பிறகான ஆட்டங்களில் சுதாரித்துக்கொண்ட அர்ஜெண்டினா அணி, தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆடி, தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது. இதுவரை கோப்பையை வென்றிடாவிட்டாலும், களத்தில் வெல்வதற்கு மிகக் … Read more

திருச்செந்தூர் கோயிலில் தங்குவதற்கான தடை நீட்டிப்பு! உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

மதுரை: திருச்செந்தூர் கோயிலில் தங்குவதற்கான தடையை நீட்டிப்பு செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. திருவிழா உட்பட எந்த நேரத்திலும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்திற்குள் பக்தர்களை தங்க அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தி உள்ளது. கந்த சஷ்டியின்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் மேற்கொள்ள அனுமதி கோரி பொதுநல மனு ஒன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண … Read more

தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது: டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி

சென்னை: தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளது; சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டு 15% கொலைக்குற்றங்கள் குறைந்துள்ளது. குற்றங்களைத் தடுக்க பழைய குற்றவாளிகளின் 75 ஆயிரம் புகைப்படங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

வீட்டில் கஞ்சா செடி… நண்பர்களை கொண்டு மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ – இன்ஜினியர் கைது

கர்நாடக மாநிலம் பெங்களூரில், 34 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர், 30 வயதான பெண்ணை கடந்த, 2011ல் திருமணம் செய்து ஒரு குழந்தையுடன், பெங்களூரின் சம்பிகேஹல்லி பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அப்பெண் நேற்று, சம்பிகேஹல்லி போலீஸ் ஸ்டேஷனில் கணவர் மீது பரபரப்பு புகாரளித்துள்ளார். அவர் கூறிய புகாரில், ‘‘என் கணவர் என்னை அவரின் நண்பர்கள் இருவருடன் செக்ஸ் வைத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தி, என்னை அடிக்கிறார். அவரின் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்து அவர்களுடன் என்னை சேர்த்து பலவந்தமாக … Read more

வங்க தேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ருத்ர தாண்டவமாடிய இந்திய வீரர்கள்! இஷான் கிஷான் இரட்டை சதம், கோலி ஒற்றை சதம்!

டாக்கா: வங்க தேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில்  இந்திய வீரர்கள் ருத்ர தாண்டம் அடியுள்ளனர்.  இஷான் கிஷான் இரட்டை சதம், கோலி ஒற்றை சதம் அடித்து சாதனைகளை செய்துள்ளனர். இதன் காரணமாக,  இஷான் கிஷன் உலக சாதனை வரிசையில் இடம் பிடித்துள்ளார். அதுபோல, ஒருநாள் போட்டியில் 400 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. மிர்புரில் நடந்த முதலாவது … Read more

புயல் வரும் நாளில் சாலையில் பாஜக கொடி கட்டிய விவகாரம்: அண்ணாமலை வருத்தம்..!

சென்னை: புயல் வரும் நாள் அன்று நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் வைத்திருந்த பாஜக கொடி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து டிவிட்டரில் கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலருக்கு பதிலளித்த பாஜக தலைவர் அண்ணாமலை; உங்களுடைய கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன். இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரிடம் இது குறித்து அறிவுறுத்தியுள்ளோம். அடுத்த முறை நடக்காதவாறு பார்த்துக் கொள்கிறோம். நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

தஞ்சாவூர் பெரிய கோயில் மகா நந்தி சிலை மீது விரிசல் – அதிகாரிகள் சொல்வதென்ன?!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது தஞ்சாவூர் பெரிய கோயில். உலக மக்களை கவர்ந்திருக்கும் பெரிய கோயிலின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் பெரிய நந்தி இருந்து வருகிறது. கோயிலுக்கு வருபவர்கள் நந்தியை தவறாமல் தரிசித்து செல்வார்கள். இந்த நிலையில் நந்தி சிலை மீது இரண்டு அடி நீளத்துக்கு ஏற்பட்டிருக்கும் விரிசல் பெரிய கோயில் ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. தஞ்சாவூர் பெரிய கோயில் நந்தி மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய … Read more