அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே பாரதம்: ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

சென்னை: அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே பாரதம் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆளுநர் ரவி, தமிழ்நாட்டு மக்கள் காசிக்கும், காசி மக்கள் தமிழ்நாட்டிற்கும் வர வேண்டும் என்பதே பாரதம் என தெரிவித்தார்.

பாலியல் சீண்டலிலிருந்து தப்பிக்க ஓடும் ஆட்டோவிலிருந்து குதித்த சிறுமி – வெளியான அதிர்ச்சி வீடியோ!

மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தில் வேகமாகச் சென்ற ஆட்டோவிலிருந்து 17 வயது சிறுமி கீழே விழுந்தார். உடனே சாலையில் சென்றவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து காவல்துறையிலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதையடுத்து காயமடைந்த அந்தச் சிறுமியை போலீஸார் விசாரித்தபோது, “நான் டியூஷன் முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்ப ஆட்டோவில் ஏறினேன். அப்போது ஓட்டுநர் என்னிடம் பேசத் தொடங்கினார். ஆரம்பத்தில் சாதாரண கேள்விகளைத்தான் கேட்டுக்கொண்டு வந்தார். Video: Maharashtra Girl Jumps Out Of Auto To Escape Harassment … Read more

இந்த விடயங்களுக்காக நீங்கள் சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேற்றப்படலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அரசால் கூறப்படுவது பயங்கரமான ஒரு அனுபவமாக இருந்தாலும், சில நேரங்களில் அப்படி நடந்துவிடுகிறது. எத்தகைய சூழ்நிலைகள் இப்படி ஒரு அதிரடி நடவடிக்கையை எடுக்க சுவிஸ் அதிகாரிகளைத் தூண்டுகின்றன? சமீபத்தில் ஆஸ்திரிய நாட்டவரான ஓய்வு பெற்ற ஒருவர் சுவிட்சர்லாந்தைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. இத்தனைக்கும் அவர் பல ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருந்தார். தனக்கு அரசின் உதவிகள் ஏதாவது கிடைக்குமா என அவர் கேட்கப் போக, அவரை நாட்டைவிட்டு வெளியேற அதிகாரிகள் உத்தரவிட்டார்கள். … Read more

ஊராட்சித்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்கு வாகனங்கள், 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்கு வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்களை திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு அலுவலர்களின் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்களை முதல்வர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்கு ரூ. 6.63 கோடி மதிப்பீட்டிலான 81 பொலிரோ … Read more

தமிழ்நாட்டில் நவம்பர் 20-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை : தமிழ்நாட்டில் நவம்பர் 20-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசியும், தமிழகமும் ஒன்னுதான் : சொல்கிறார் யோகி ஆதித்யநாத்| Dinamalar

லக்னோ: காசியாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும் சரி, நமது கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான் என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி காசிக்கும், தமிழகத்திற்கும் இடையே தொன்மையான நாகரீக பிணைப்பையும் பல நூற்றாண்டு கால அறிவுப் பிணைப்பையும் மீட்டுருவாக்கம் செய்வதற்காக ஒருமாத கால ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி வாரணாசியில் நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி, பனாரஸ் … Read more

“ஆமாம் நான்தான் சிவசேனாவை உடைத்தேன்; எனக்கு துரோகம் செய்தால் பழிவாங்குவேன்!" – தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் சிவசேனா கடந்த ஜூன் மாதம் இரண்டாக உடைந்தது. உத்தவ் தாக்கரே தலைமையில் ஓர் அணியாகவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஓர் அணியாகவும் இப்போது செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சிவசேனா இரண்டாக உடைவதில் தேவேந்திர பட்னாவிஸ் முக்கிய பங்காற்றினார் என்று அனைத்து தரப்பினரும் தெரிவித்தனர். ஆனால் சிவசேனாவில் நிலவிய உட்கட்சிப்பூசல் காரணமாகவே கட்சி இரண்டாக உடைந்தது என்று பா.ஜ.க கூறிக்கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக முதல்வர் பதவியைக்கூட வெறும் 40 எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கும் ஏக்நாத் … Read more

பிரித்தானிய மன்னர் சார்லசின் முழுப்பெயர் உங்களுக்குத் தெரியுமா?

ராஜ குடும்ப உறுப்பினர்களைப் பொருத்தவரை, அவர்களுடைய பட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அத்துடன், சில ராஜ குடும்ப உறுப்பினர்களுக்கு ஒன்றல்ல, பல பட்டங்கள் உள்ளன. மன்னர் சார்லசின் முழுப்பெயர் அவ்வகையில், பட்டங்களுடன் மன்னர் சார்லசின் முழுப்பெயரைக் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். ஆம், மன்னர் சார்லசின் முழுப்பெயர், Charles III, by the Grace of God, of the United Kingdom of Great Britain and Northern Ireland and of his other realms and … Read more

சரவணபவன் ஹோட்டல் உரிமையாளருக்கு ரூ. 18 கோடி அபராதம்… அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், ஓவர்டைம் மற்றும் இதர படிகள் ஒழுங்காக வழங்கப்படாதை கண்டித்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மூன்று சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. 2.2 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ள நீதிமன்றம் இதனை 317 ஊழியர்களுக்கு தலா 7000 டாலர் பிரித்து தர உத்தரவிட்டுள்ளது. ஹோட்டல் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் டிப்ஸ் தொகையையும் அவர்களுக்கு வழங்காமல் உரிமையாளர்களே எடுத்துக்கொண்டதை கண்டித்த நீதிமன்றம். ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்க அறிவுறுத்தியுள்ளது. “ஊதிய திருட்டு தொழிலாளர்களை … Read more

திருப்பூரில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில் சரிவு

திருப்பூர்: திருப்பூரில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில் சரிவைச் சந்தித்துள்ளது. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் படி கடந்த செப்டம்பர், அக்டோபரை விட இந்த ஆண்டு ஆயத்த ஆடை ஏற்றுமதி சரிவடைந்துள்ளது.