பெருகிவரும் மக்கள் தொகைக்கும் நகர விரிவாக்கத்திற்கும் ஏற்ப போக்குவரத்து வசதிகளை பெருக்க வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: பெருகிவரும் மக்கள் தொகைக்கும் நகர விரிவாக்கத்திற்கும் ஏற்ப நாம் போக்கு வரத்து வசதிகளை பெருக்க வேண்டும் என  சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் குழுமக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழ்நாடு முதலமைச்சரும், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் குழுமக் கூட்டம் நடைபெற்றது. ல் குழுமக் கூட்டத்தில் ஆற்றிய உரை  சென்னை, நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ இரயில் … Read more

சேலத்தில் நடக்கும் புத்தக காட்சியை ஒரு லட்சம் மாணவ, மாணவிகள் காணும் வகையில் ஏற்பாடு

சேலம் : சேலத்தில் நவம்பர் 20 முதல் 30-ம் தேதி வரை நடக்கும் புத்தக காட்சியை ஒரு லட்சம் மாணவ, மாணவிகள் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தக காட்சியை காண வரும் மாணவ, மாணவிகளுக்கு இலவச போக்குவரத்திற்கு ஏற்படு செய்யப்பட்டுள்ளதாக சேலம் ஆட்சியர் அறிவித்துள்ளார். சேலம் மாநகராட்சி திடலில் நடைபெறும் புத்தக காட்சியில் 210 அரங்குகளில் ஒரு லட்சம் புத்தகங்கள் இடம் பெறுகின்றன. 11 நாட்கள் நடைபெறவுள்ள சேலம் புத்தக காட்சியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி … Read more

நேபாள தேர்தலில் சர்வதேச பார்வையாளராக பங்கேற்க இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அழைப்பு!

புதுடெல்லி, நேபாளத்தில் நவம்பர் 20 அன்று நாடாளுமன்றம் மற்றும் மாகாணத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. 275 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், ஏழு மாகாண சட்டசபைகளில் 550 உறுப்பினர் இடங்களையும் தேர்ந்தெடுப்பதற்கு இந்தத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், நேபாளத்தின் நாடாளுமன்ற மற்றும் மாகாண சட்டமன்றங்களுக்கு நடைபெறவிருக்கும் தேர்தல்களுக்கான சர்வதேச பார்வையாளராக பங்கேற்க இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு நேபாள தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இதனை ஏற்று, நவம்பர் 18 முதல் 22 வரை ராஜீவ் குமார் … Read more

FIFA World Cup 2022 : சில உடைகள் அணிய பெண் ரசிகர்களுக்குத் தடை; மீறினால் சிறை தண்டனை!

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்  உலகக் கோப்பை கால்பந்து போட்டி(FIFA), கத்தாரில் நவம்பர் 20-ம் தேதி தொடங்கி  டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கின்றன. கத்தாரில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியைக்  காண ஏராளமான ரசிகர்கள்  காத்துக்கொண்டிருக்கும் நிலையில், பெண் ரசிகர்களுக்கு என்று கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது.  FIFA World Cup 2022 பொதுவாக எல்லா நாடுகளிலும் போட்டியைக் காண செல்லும் ரசிகர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது. … Read more

காற்றழுத்த தாழ்வு பகுதி: 20ந்தேதி 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் 19ந்தேதி மிதமான மழையும், 20ந்தேதி கடலோர 9மாவட்டங்களில்  கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறிதுத சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (நவ. 17) காலை உருவாகியுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து … Read more

உடல் எடை கடகடனு குறையனுமா? 7 நாட்கள் இந்த 7 பானத்தை மறக்கமால் குடிங்க போதும்

இன்றைக்கு பலரும் உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். உடலில் கொழுப்பு மற்றும் பிற கழிவுகள் தேங்கியிருப்பது கூட உடல் பருமன் பிரச்சினை அதிகரிக்கும். இதனை எளியமுறையில் கரைக்க முடியும். இதற்கு ஒரு சில இயற்கை பானங்கள் பெரிதும் உதவுகின்றது. அதில் சிலவற்றை தொடர்ந்து 7 நாட்கள் எடுத்து கொள்வது இன்னும் நன்மையே தரும். இவை என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.   தண்ணீரில் கொத்தமல்லி விதைகளைப் போட்டு நன்கு கொதிக்க விட்டு , நீரை வடிகட்டி வெதுவெதுப்பான … Read more

மறைந்த பிரியா பெயரில் மிகப்பெரிய கால்பந்தாட்ட போட்டி பாஜக சார்பில் நடத்தப்படும்: அண்ணாமலை பேட்டி

சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மறைந்த பிரியா பெயரில் சென்னை மிகப்பெரிய கால்பந்தாட்ட போட்டி பாஜக சார்பில் நடத்தப்படும் என அண்ணாமலை தெரிவித்தார்.

“கோ பேக் மோடினு கறுப்புக்கொடி பிடிச்சவங்க, இப்ப கறுப்புக்குடை பிடிக்கவே பயப்படுறாங்க!" – தினகரன்

`தி.மு.க-வை வீழ்த்த அ.தி.மு.க-வுடன் கூட்டணிக்கு வைக்கத் தயார்’ என்று அ.ம.மு.க தலைவர் டி.டி.வி.தினகரன் முன்னதாகக் கூறியிருந்த நிலையில் தற்போது, `அ.தி.மு.க இன்று தலையில்லாத முண்டமாக, செயல்படாத நிலையில் இருக்கிறது’ என்று தெரிவித்திருக்கிறார். சென்னையில் அ.ம.மு.க அலுவலகத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய தினகரன், “அ.தி.மு.க இன்று செயல்படாத கட்சியாக இருக்கிறது. என்னைத் தேவையில்லாமல் இழுத்ததனால் சொல்ல வேண்டியிருக்கிறது. எனக்குத் தெரிந்தவரை பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். அவர்கள் ஏன் மெகா கூட்டணி என்ற வார்த்தையைச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது … Read more

சபரிமலைக்கு பெண்கள் வருவதில் முந்தையே நடைமுறையே தொடரும்! தேவசம் போர்டு விளக்கம்..

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு பெண்கள் வருவதில் முந்தையே நடைமுறையே தொடரும் என தேவசம் போர்டு விளக்கம் அளித்துள்ளது. சபரிமலையில் 41நாள் மண்டல பூஜைக்கான கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்றுமுதல் பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.  டிசம்பர் 27-ம் தேதி  மண்டல பூஜை நிறைவுபெறுகிறது. மண்டல பூஜையையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருவார்கள். இதற்கான ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி உள்ளது. ஏராளமானோர் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். இதற்கிடையில் சபரிமலையில் அய்யப்பன் பிரம்மச்சாரியாக இருப்பதால், அங்கு … Read more

அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே பாரதம்: ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு

சென்னை: அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே பாரதம் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆளுநர் ரவி, தமிழ்நாட்டு மக்கள் காசிக்கும், காசி மக்கள் தமிழ்நாட்டிற்கும் வர வேண்டும் என்பதே பாரதம் என தெரிவித்தார்.