Serial Rewind 2025: தீராத ரங்கராஜ் – ஜாய் பஞ்சாயத்து; கைமாறிய பிக்பாஸ் வீடு!

சமையலை ஓவர்டேக் செய்த பர்சனல்! மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் எவ்வளவு பேசப்படுமோ அதை விட அதிகமாக இந்தாண்டு பேசுபொருளானது, அவரது பர்சனல் விவகாரம். ரங்கராஜிடம் ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர் ஜாய் கிறிசில்டா. இவர் திடீரென ஒரு நாள் ரங்கராஜுடன் மணக்கோலத்திலிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தங்களுக்குத் திருமணமாகிவிட்டதாக அறிவித்தார். அத்துடன் ரங்கராஜின் குழந்தை தன் வயிற்றில் வளர்வதாகவும் குறிப்பிட்டார். ரங்கராஜ் ஏற்கனவே ஸ்ருதி என்பவரை மணம் முடித்து இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் இந்தத் தகவல் … Read more

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதிகளை வெளியிட்டது சிபிஎஸ்இ கல்வி வாரியம்….

டெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026ஆம் ஆண்டு நடைபெறவிருந்த 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் கால அட்டவணையில் மாற்றம் செய்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக மார்ச் 3ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ வாரியத் தேர்வுகள் 2026 திருத்தப்பட்ட தேதிகள் அனுமதிச் சீட்டுகளிலும் பிரதிபலிக்கும் என்றும், பள்ளிகள் அதற்கேற்ப தங்கள் உள் தேர்வு அட்டவணைகளைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. சி.பி.எஸ்.இ.   பள்ளிகளில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த   12ஆம் … Read more

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தவெக நிர்வாகிகளிடம் நாளை மீண்டும் சிபிஐ விசாரணை

புதுடெல்லி, கரூரில் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்தினார். அப்போது நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதனையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையை, ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு குழு கண்காணித்து வருகிறது. இந்த குழுவினரிடம் … Read more

"என்னோடு நின்ற தம்பி இளமகிழன்" – உசிலம்பட்டி விழாவில் வேட்பாளரை அடையாளம் காட்டினாரா கனிமொழி?

“வாழ்க்கையிலே எனக்கு எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள், சோதனைகள் வந்த காலகட்டத்திலும் என்னோடு நின்ற ஒரு தம்பி இளமகிழன்” என்று, கனிமொழி எம்.பி பேசியதன் மூலம் உசிலம்பட்டி வேட்பாளரை அடையாளம் காட்டியுள்ளார் என்று திமுகவினர் பேசி வருகிறார்கள். நலத்திட்ட விழா மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் உசிலம்பட்டி வித்தியாசமான தொகுதி. இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பார்வர்ட் பிளாக் கட்சி 9 முறையும், அ.தி.மு.க 4 முறையும், தி.மு.க 1 முறையும், சுயேட்சைகள் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். … Read more

மும்பையில் பின்னோக்கி சென்ற பஸ் மோதி 4 பேர் பலி; 9 பேர் படுகாயம்

மும்பை, மும்பை பாண்டுப்பில் உள்ள ரயில் நிலையம் அருகே பஸ் நிறுத்தத்தில் ஏராளமான பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது மாநகர பஸ் ஒன்று அங்கு வந்தது. அந்த பஸ்சை டிரைவர் சந்தோஷ் ரமேஷ் சாவந்த் (52) ஓட்டினார். பகவான் பாவ் கரே (47) கண்டக்டராக பணியில் இருந்தார்.பஸ் நிறுத்தம் அருகே வந்ததும், எதிர்பாராத விதமாக பஸ் கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி சென்றது. அப்போது அந்த வழியே நடந்து சென்று கொண்டிருந்த 13 பேர் மீது பஸ் மோதி … Read more

கிணற்றுக்குள் விழுந்த புலி: மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை

திருவனந்தபுரம், கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் வில்லோனிபரா கிராமத்தில் உள்ள தோட்டத்தில் கிணறு உள்ளது. இந்த கிணற்றுக்குள் இன்று புலி விழுந்துள்ளது. கிணற்றுக்குள் தண்ணீர் இருந்த நிலையில் அந்த தண்ணீரில் புலி தத்தளித்துள்ளது. கிணற்றுக்குள் விழுந்த புலி உறுமியுள்ளது. புலியின் உறுமல் சத்தம் கேட்டு அந்த கிராமத்தினர் சிலர் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது , புலி கிணற்றில் உள்ள தண்ணீர் தத்தளித்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்ற … Read more

குறைவான மைலேஜ் கொடுத்ததால் விரக்தி: ஷோரூம் வாசலில் மின்சார ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய நபர்

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன் சோலங்கி. இவர் கடந்த ஆண்டு ரூ. 5 லட்சத்திற்கு மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோவை (இ-ஆட்டோ) வாங்கியுள்ளார். இதற்கான முன்பணமாக ரூ. 70 ஆயிரம் கொடுத்துள்ளார். மேலும், மாத இ.எம்.ஐ. தொகையாக ரூ. 10,655 செலுத்தி வந்தார். மின்சார ஆட்டோவை ஒருமுறை ஜார்ஜ் செய்தால் 180 கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்கும் என்று ஷோரூம் ஊழியர்கள் கூறியுள்ளனர். இதை நம்பி மோகன் ஆட்டோவை வாங்கியுள்ளார். தொடக்கத்தில் ஆட்டோ ஒருமுறை … Read more

மீண்டும் போராட்டத்தை தொடங்கிய தூய்மைப் பணியாளர்கள் – ரிப்பன் மாளிகை அருகே பரபரப்பு!

தனியார்மயமக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் ரிப்பன் மாளிகைக்கு வெளியே அமர்ந்து போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர். இன்று காலை அறிவாலயத்தை முற்றுகையிட்டவர்கள், மதியத்துக்கு மேல் கருணாநிதி நினைவிடத்தை முற்றுகையிட்டு கைதாகினர். பின்னர் அண்ணா சாலையில் அமர்ந்து போராடி கைதாகினர். கைது செய்தவர்களை மாலைக்கு மேல் காவல்துறையினர் விடுவித்தனர். சென்ட்ரல் அருகே கூடிய தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கைகள் நிறைவேறாமல் வீட்டுக்கு செல்லக்கூடாது என தீர்மானித்து, மீண்டும் ரிப்பன் பில்டிங் முன்பு … Read more

கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

கோவை : கோவையில்   கட்டப்பட்டுள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்தை  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, ஹாக்கி விளையாடினார். கோவையில் ஆர்.எஸ்.புரத்தில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் 6,500 சதுர அடி பரப்பிலான சர்வதேச ஹாக்கி மைதானம் கட்டப்பட்டுள்ளது. இந்த தைதானத்தை  இன்று திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.  இந்த மைதானத்தில் ஹாக்கி விளையாடியஉதயநிதி, பிஎஸ்ஜி – கேஜி அணிகள் பங்கேற்கும் போட்டியை தொடங்கி வைத்தார். இந்த ஹாக்கி மைதானத்தில் இரவிலும் போட்டிகள் … Read more