அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு: 4 பேரிடம் சிறப்பு தனிப்படை போலீசார் விசாரணை

சென்னை: அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு: 4 பேரிடம் சிறப்பு தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திண்டுக்கல் கணேசன், புதுக்கோட்டை செந்தில்குமார் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்

2வது ரவுண்ட் ரெய்டு; 8 மாநிலங்களில் 100 க்கும் மேற்பட்டோர் கைது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: வெளிநாட்டு பண பரிமாற்றம், மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக வந்த புகாரை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தேசிய புலனாய்வு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக 2 வது ரவுண்ட் 8 மாநிலங்களில் இந்த ரெய்டு இன்று (செப்.27) துவங்கியது. கடந்த வாரம் தமிழகம், கேரளா , புதுடில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் 110 பாப்புலர் பிரண்ட் ஆப் … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

திருமலை, கொரோனா தொற்று பரவலால் 2 ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா வாகன சேவை நான்கு மாட வீதிகளில் நடத்தவில்லை. கோவில் உள்ளேயே பக்தர்களுக்கு அனுமதியின்றி வாகன சேவை நடத்தப்பட்டது. இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி 4 மாடவீதிகளில் வாகன சேவை நடக்கிறது. முதல் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.45 மணியில் இருந்து மாலை 6.15 மணிவரை மீன லக்னத்தில் பிரம்மோற்சவ விழா கருட கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பின்னர் பெரிய சேஷ வாகனத்தில் … Read more

Doctor Vikatan: கொரோனா தடுப்பூசி, ஃப்ளு தடுப்பூசிக்கு இடையே எத்தனை மாத இடைவெளி இருக்க வேண்டும்?

Doctor Vikatan: இதுவரை தடுப்பூசி பற்றியே நினைக்காத பலரும், கொரோனா காலத்தில் அது குறித்து யோசிக்க ஆரம்பித்தார்கள். ஒன்றுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்பட்டார்கள். இந்நிலையில் அடுத்து ஃப்ளு தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். கொரோனா தடுப்பூசிக்கும் ஃப்ளு தடுப்பூசிக்கும் இடையில் எத்தனை மாத இடைவெளி இருக்க வேண்டும்? யாருக்கெல்லாம் இந்தத் தடுப்பூசி அவசியம்? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ் பொது … Read more

கனமழை: திருவாரூர் பள்ளிகளுக்கு விடுமுறை

திருவாரூர்: கனமழை காரணமாக திருவாரூர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக இன்று (27.9.2022) திருவாரூர் தாலுக்கா மற்றும் நன்னிலம் தாலுக்காவிற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருவாரூர் மற்றும் நன்னிலம் தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து

திருவாரூர்: கனமழை காரணமாக திருவாரூர் மற்றும் நன்னிலம் தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று (27.09.2022) அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் சற்றுமுன் அறிவிக்கப்பட்ட விடுமுறையை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்தார்.

திரவுபதி முர்மு வருகை எதிரொலி: பெங்களூருவில் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை

பெங்களூரு, உலக புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழாவை தொடங்கி வைப்பதற்காக இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு கர்நாடகத்திற்கு வருகை தந்துள்ளார். 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில் பெங்களூருவுக்கு ஜனாதிபதி வருகை தர உள்ளதால், பெங்களூருவில் முக்கிய சாலைகளில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த தகவல் பின்வருமாறு:- பெங்களூரு கப்பன் பூங்கா மற்றும் அசோக்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை (இன்று) … Read more

புதிர்ப் போட்டி கொண்டாட்டம் – 48 – பரிசு ரூ.5,000

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு புதிர்ப் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், ‘‘இன்று வருடம் முழுவதும் ஆடைகள் வாங்குகிறோம். தீபாவளிக்கு மட்டுமே புத்தாடை வாங்கிக்கொடுக்கப்பட்ட காலத்தில், உங்களுக்கு மிகப் பிடித்ததாக அமைந்த … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா இன்று தொடக்கம்

திருமலை: உலகப்பிரசித்தி பெற்ற திருமலை பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி அக் 5-ந்தேதி முடிவடைகிறது. நாளை இரவு 7 மணிக்கு தங்க கொடிமரத்தில் கருட கொடி ஏற்றப்படுகிறது. திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி 5-ந்தேதி முடிவடைகிறது. இதனையொட்டி கோவில் மற்றும் கோவில் வெளிப்புறங்களில் பல்வேறு ண்ண மலர்கள், அரியவகையான பழ வகைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மேலும் வண்ண மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால் திருமலை முழுவதும் மின்னொளியில் ஜொலிக்கிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி … Read more

சென்னை ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடத்தில் விபத்து

சென்னை: சென்னை ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடத்தில்30 அடி நீளத்திற்கு கட்டப்பட்டிருந்த கம்பிகளை லாரியில் இருந்து தூக்கியபோது கிரேன் கவிழ்ந்து  விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் அய்யாதுரை, கண்டெய்னர் லாரி ஓட்டுநர் ரஞ்சித் குமார் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.