தலைப்பு செய்திகள்
சென்செக்ஸ், நிஃப்டி இன்று எப்படியிருக்கும்.. கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன?
தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்திய பங்கு சந்தையானது கடந்த வெள்ளிக்கிழமையன்று சரிவில் காணப்பட்டது. இந்த சரிவானது இன்றும் தொடரலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் தலா 2% சரிவினைக் கண்டிருந்தது. குறிப்பாக சென்செக்ஸ் 1020.80 புள்ளிகள் அல்லது 1.73% சரிவினைக் கண்டு, 58,098.92 புள்ளிகளாகவும் முடிவடைந்திருந்தது. இதே நிஃப்டி 302.45 புள்ளிகள் அல்லது 1.72% சரிவினைக் கண்டு. 17,327.35 புள்ளிகளாகவும் முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் பிஎஸ்இ-யில் 588 … Read more
7.5 சதவீத தள்ளுபடி விலையில் தங்கம் வேண்டுமா.. டாடா வழங்கும் சிறப்பு சலுகை!
தங்கம் வாங்குவதில் இந்தியர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் என்பதும் சேமிப்புக்காக மட்டுமின்றி ஆபரணங்களுக்காகவும் தங்கம் வாங்குவது வழக்கமாக உள்ளது என்றும் தெரிந்ததே. இந்த நிலையில் சலுகை விலையில் தங்கம் கிடைத்தால் அதை வாங்குவதில் இந்தியர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் டாடாவின் தனிஷ்க் நிறுவனம் 7.5 சதவீத சலுகை விலையில் தங்கம் வாங்க ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது தனிஷ்க் தங்கநகை தங்கநகை விற்பனை பிராண்டான டாடாவின் தனிஷ்க் நாடு முழுவதும் 350க்கும் மேற்பட்ட … Read more
சென்னை: மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு வந்த சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை – நடந்தது என்ன?
சென்னை அருகிலுள்ள மாங்காடு பரணிபுத்தூர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டுவருகிறது. ரவிக்குமார் என்பவருக்குச் சொந்தமான இந்த மறுவாழ்வு மையத்தில் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த மையத்தில், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மனநல பாதிப்பு காரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். மறுவாழ்வு மையம் இந்த மையத்துக்கு வந்த சில தினங்களிலேயே, அந்த மையத்திலிருந்து சிறுவன் தப்பித்து தனது வீட்டுக்குச் சென்றிருக்கிறார். மையத்தில், … Read more
காவல் நிலையத்தில் கவனக்குறைவாக இருந்த காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள்: திருச்சி மாவட்ட எஸ்.பி. சுஜித்குமார்
திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களிடம் செல்போன் திருட முயன்ற வழக்கில் முருகானந்தம் என்பவர் கைது செய்யப்பட்டார். சமயபுரம் காவல் நிலைய கழிப்பறையில் முருகானந்தம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் விவகாரம், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மண்டல ஐ.ஜி சரவணசுந்தர் தெரிவித்துள்ளார். காவல் நிலையத்தில் கவனக்குறைவாக இருந்த காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் திருச்சி மாவட்ட எஸ்.பி. சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு இடைக்கால ஜாமின்
புதுடில்லி :பணப்பரிமாற்ற மோசடி வழக்கில், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு, புதுடில்லி நீதிமன்றம் இடைக்கால ‘ஜாமின்’ வழங்கி நேற்று உத்தரவிட்டது.தமிழகத்தைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், புதுடில்லி தொழிலதிபர்களின் குடும்பத்தினரை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். மோசடி செய்த பணத்தில், பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா பதேகி ஆகியோருக்கு சொகுசு கார்கள் உட்பட பல விலை உயர்ந்த பொருட்களை இவர் வாங்கிக் கொடுத்ததாக, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு … Read more
பெரும் சரிவுடன் துவங்கிய சென்செக்ஸ்.. மீண்டும் வரலாற்றுச் சரிவில் ரூபாய் மதிப்பு..!
சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்கள் பங்கு விற்பனையை நிறுத்தாத காரணத்தால் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தை பெரிய அளவிலான சரிவுடன் துவங்கி முதலீட்டாளர்களைப் பயமுறுத்தியுள்ளது. இன்றைய வர்த்தகம் துவங்கும் போதே சென்செக்ஸ் 1.27 சதவீத சரிவுடன் வர்த்தகத்தைப் பதிவு செய்தது. சென்செக்ஸ், நிஃப்டி இன்று எப்படியிருக்கும்.. கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? சென்செக்ஸ் குறியீடு சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகம் துவக்கத்தில் 1.27 சதவீதம் வரையில் சரிந்து அதிகப்படியாக 57,282.20 புள்ளிகளை … Read more
27.09.22 செவ்வாய்க்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | September – 27 | இன்றைய ராசிபலன்
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link
மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவை ஏற்பாடு செய்யும் இளவரசருக்கு வாகனம் ஓட்ட தடை விதிப்பு!
ராணியின் இறுதிச் சடங்கை ஏற்பாடு செய்வதற்கு இளவரசர் ஏர்ல் மார்ஷல் பொறுப்பேற்றார். இளவரசர் ஏர்ல் மார்ஷலுக்கு இப்போது ஆறு மாதங்களுக்கு வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. ராணியின் இறுதிச் சடங்கை ஏற்பாடு செய்த இளவரசரான Edward Fitzalan-Howard, தனது காரை ஓட்டும்போது தொலைபேசியை பயன்படுத்தியதற்காக வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. Edward Fitzalan-Howard 2002-ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவின் ஏர்ல் மார்ஷலாக உள்ளார், மேலும் அவர் நார்போக்கின் 18 வது டியூக் ஆவார். அவர் லண்டனில் Battersea … Read more
ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அமைச்சரவை ஒப்புதல்; ஆளுநரின் ஒப்புதல் பெற்று விரைவில் சட்டமாக்கப்படும்: தமிழக அரசு
சென்னை: ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆளுநரின் ஒப்புதல் பெற்று விரைவில் சட்டமாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இணையவழி சூதாட்டத்தினை தடை செய்வதற்கான சட்டம் இயற்றுவது தொடர்பாக நீதிபதி சந்துரு குழு ஆய்வு செய்து அரசிற்கு அறிக்கை அளித்தது.