தொடர் சரிவில் தங்கம் விலை.. விழாக்கால பருவத்தில் வாங்க செம சான்ஸ்..!

Gold price today: தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து தடுமாற்றத்தில் இருந்து வருகின்றது. குறிப்பாக இந்திய பங்கு சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சரிவில் காணப்பட்டது. இது மேற்கொண்டு சரிவினைக் காணுமா? இது வாங்க சரியான வாய்ப்பா? அக்டோபர் மாத கான்ட்ராக்டில் 10 கிராமுக்கு 49,399 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 6 மாத குறைந்தபட்ச விலை 49,250 ரூபாயாகும். இதே சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 2 வருட சரிவான 1643 என்ற லெவலில் முடிவடைந்தது. இது … Read more

சக விடுதி பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பிய கல்லூரி மாணவி! – இருவரும் கைது

விடுதியில் தங்கியிருக்கும் சக பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பிவந்த கல்லூரி மாணவி கைதுசெய்யப்பட்டிருக்கும் சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உமா ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்தவர் உமா (மாற்றப்பட்டிருக்கிறது). இவர் மதுரை அண்ணா நகரிலுள்ள பெண்கள் விடுதி ஒன்றில் தங்கியிருந்து பி.எட் படித்து வருகிறார். இவர் கமுதியிலிருந்தபோது அங்கு கிளினிக் வைத்திருக்கும் டாக்டர் ஆசிக் என்பவருடன் பழகி வந்துள்ளார். மதுரை வந்த பின்பும் இருவரும் மொபைலில் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். டாக்டர் ஆசிக் … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பன்றிகளை வேட்டையாட வைத்திருந்த 5 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்தி கோயில் பகுதியில் பன்றிகளை வேட்டையாட வைத்திருந்த 5 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காட்டுப்பன்றிகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்த கார்த்திக், டேனியல் ராஜ்குமார், தேவராஜ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருமலை திருப்பதி குடை ஊர்வலம்; அறிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்கள்!

ஒவ்வோர் ஆண்டு திருமலை திருப்பதியில் நடைபெறும் புரட்டாசி பிரம்மோற்சவ நிகழ்வின் போது சென்னையில் இருந்து வண்ன வண்ணக் குடைகள் செய்து எடுத்துச் சென்று சமர்ப்பிக்கும் வழக்கம் பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இப்படிக் குடைகள் சமர்ப்பிப்பதன் தாத்பர்யம் மற்றும் அவற்றின் சிறப்புகள் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்வோம். திருப்பதி குடை ஊர்வலம் 1. கோயில் திருவிழாக்களில் சுவாமி புறப்பாட்டின் போது சுவாமிக்குக் குடைப்பிடிக்கும் வழக்கம் பல ஆயிரம் ஆண்டுகளாக நம் மண்ணில் உள்ளது. அப்படிப்பட்ட குடையை இறைவனுக்கு … Read more

கரூரில் ஊராட்சி மன்ற தலைவி மீது சாதி பாகுபாடு காட்டியதாக புகார்

கரூர்: கரூரில் ஊராட்சி மன்ற தலைவி மீது சாதி பாகுபாடு காட்டியதாக புகார் எழுந்துள்ளது. கரூரில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஊராட்சி தலைவரை சாதிய பாகுபாடு காட்டி பணி செய்யவிடாமல் தடுத்ததாக புகார் எழுந்ததுள்ளது. இதையடுத்து இந்த புகாரின்பேரில் ஊராட்சி செயலாளர் நளினியை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் பிரபு சங்கர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பெட்ரோல் குண்டு வீச்சில் தொடர்புடைய குற்றவாளிகள் இன்று மாலைக்குள் \கைது செய்யபடுவார்கள்: டிஜிபி

கோவை: தமிழகத்தில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளக்கூடிய அளவுக்கு சூழல் இல்லை என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். பெட்ரோல் குண்டு வீச்சில் தொடர்புடைய குற்றவாளிகள் இன்று மாலைக்குள் கைது செய்யபடுவார்கள் என அவர் தெரிவித்தார்.

கப்சிப் ஆன பெய்ஜிங்.. விமானங்கள், ரயில்கள் ரத்து?.. என்னதான் நடக்கிறது சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள்?

International oi-Halley Karthik பெய்ஜிங்: சீனாவில் ஆட்சி கவிழ்ப்பு நடந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்துள்ள நிலையில், தற்போது சில விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக உள்ள ஜி ஜிங்பிங்தான் தற்போது அந்நாட்டின் அதிபராக இருக்கிறார். இங்கு சமூக வலைத்தளங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் நிலவி வருகிறது. இவ்வாறு இருக்கையில், தற்போது சீனாவில் அந்நாட்டு ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், அதிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் வதந்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. … Read more

கிரீன் கார்டை விரைவில் எளிதில் பெறலாம்.. இந்தியர்களுக்கு ஹேப்பி நியூஸ் தான்!

அமெரிக்காவில் நிரந்தரமான வசிப்பதற்காக கிரீன் கார்டுகள் வேண்டும் என விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்கள் மீது, ஆறு மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும். ஏப்ரல் 2023க்குள் நிலுவையில் இருக்கும் விண்ணப்பங்களை ஆய்வு செய்யவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கை இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த குடும்பங்களுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய ஐடி துறை சார்ந்த பொறியாளர்களுக்கு இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் கிரீன் ஹைட்ரஜன், … Read more

Moto GP Bharat:`க்ராண்ட் ப்ரீ ஆஃப் பாரத்' – இந்தியாவிற்கு வரும் மோட்டோ ஜிபி ரேஸ்!

புகழ்பெற்ற மோட்டார் ரேஸான `மோடோ ஜிபி’ அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் நடக்கவிருக்கிறது. டோர்னா ஸ்போர்ட்ஸ் மற்றும் ஃபேர்ஸ்டிரீட் ஸ்போர்ட்ஸ் நிறுவனங்களுக்கு இடையே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கிறது. 2023-24 சீசன் முதல் 2030-31 வரை மொத்தம் 7 ஆண்டுகள் இந்தத் தொடர் இந்தியாவில் நடக்கவிருக்கிறது. ஃபார்முலா 1 ரேஸ்கள் நடந்த புத் சர்வதேச ரேஸிங் சர்கியூட்டில் நடக்கும் இந்த ரேஸ்களுக்கு, `கிராண்ட் ப்ரீ ஆஃப் பாரத்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. Bharat GP கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச … Read more

தமிழ்நாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச்செயலில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்: டிஜிபி சைலேந்திர பாபு

சென்னை: தமிழ்நாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச்செயலில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். பெட்ரோல் குண்டு வீசியவர்களை கண்டறிந்து கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.