வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று நீலகிரி, கோவை, தேனி, தென்காசியிலும், நாளை நீலகிரி, கோவையிலும் மிக கனமழை பெய்யலாம். விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

அஸ்ஸாம்:அல்கொய்தாவுக்கு ஆட் சேர்ப்பு- மேலும் ஒரு மதராசா புல்டோசர் மூலம் இடிப்பு

India oi-Mathivanan Maran குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் அல்கொய்தா கிளை அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான மேலும் ஒரு மதராசா புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி ஆளும் உ.பி, அஸ்ஸாம் மாநிலங்களில் அரசுக்கு எதிராக செயல்படுவோரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்டவைகள் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்படுகிறது. பாஜக அரசுகளின் இந்த புல்டோசர் கலாசாரம் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்கள் புகலிடங்களாக உருமாற்றி வருகின்றன என … Read more

பஞ்சாபில் தேவாலயம் மீது தாக்குதல்: காருக்கு தீவைப்பு| Dinamalar

அமிர்தசரஸ்: சீக்கியர்கள் மற்றும் ஹிந்துக்கள் மோசடி செய்து மதமாற்றம் செய்யப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, பஞ்சாபின் டர்ன்டாரன் மாவட்டத்தில் உள்ள தேவாலயத்தில் இருந்த சிலைகள் சேதப்படுத்தப்பட்டதுடன், பாதிரியார் காரும் தீவைத்து எரிக்கப்பட்டது. அகல் தக்த் ஜதேதர் என்ற சீக்கிய அமைப்பின் தலைவர் ஹர்பரீத் சிங் வெளியிட்ட அறிக்கையில், கிறிஸ்தவ மிஷனரிகள், சீக்கியர்களிடம் மோசடி செய்து மதமாற்றம் செய்து வருகின்றன. சீக்கியர்கள் மற்றும் ஹிந்துக்கள் ஏமாற்றப்பட்டு மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றன. அரசின் ஆதரவுடன் இது செயல்படுகிறது. ஓட்டு வங்கி … Read more

டாடா குழுமத்தில் பெரும் மாற்றம்.. சந்திரசேகரன் நிலை என்ன..?

டாடா சன்ஸ் தனது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (ஏஜிஎம்) செவ்வாயன்று அனைத்து தீர்மானங்களையும் ஒருமனதாக நிறைவேற்றியது. இந்தப் புதிய முடிவுகள் மூலம் சந்திரசேகரன் டாடா சன்ஸ் நிறுவனத்தில் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும், டாடா டிராஸ்ட் நிர்வாகத்திற்குள் நுழைய முடியாத வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இது மட்டும் அல்லாமல் டாடா சன்ஸ் டாடா குழுமத்தின் நிர்வாகக் கட்டுப்பாடுகள் மட்டுமே என்றும், டாடா டிராஸ்ட்-க்கு தான் மொத்த பங்குதாரர்கள் அதிகாரம், பங்குகள் அதிகாரம் கிடைக்கும் என … Read more

ஜூ.வி செய்தி எதிரொலி: பள்ளி, காவல் நிலையம் அருகே இருந்த டாஸ்மாக் கடைகள் மூடல்!

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு அருகே டாஸ்மாக் கடைகள் இயங்கக்கூடாது என சில கட்டுப்பாடுகள் தமிழ்நாட்டில் அமலில் வருகின்றன. ஆனால், விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய நகரமாக திகழும் திண்டிவனத்தில்… அரசு உதவிப்பெறும் பள்ளிக்கு 150 மீட்டருக்குள்ளாகவே டாஸ்மாக் கடை இயங்கி வருவது பற்றியும், பரபரபான பகுதியில் அமைந்திருக்கும் காவல் நிலையத்துக்கு எதிரிலேயே இயங்கும் டாஸ்மார்க் கடையால் மூச்சுமுட்ட குடித்துவிட்டு காவல் நிலைய வாசலிலேயே மதுப்பிரியர்கள் விழுந்து கிடப்பது பற்றியும் சுருக்கமாக, 13.07.2022 தேதியிட்ட … Read more

2006, 2007ம் ஆண்டுகளில் அரசுத்துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 4,500 பேரின் பட்டியலை சமர்ப்பிக்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: 2006, 2007ம் ஆண்டுகளில் அரசுத்துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 4,500 பேரின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. ஒவ்வொரு துறைக்கும் எத்தனை பேர் நியமிக்கப்பட்டனர் என்ற தகவலை தர தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 7வது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில் ஊதிய உயர்வு கோரி வேளாண்துறை தட்டச்சர், சுருக்கெழுத்தர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். எத்தனை பேருக்கு ஊதிய உயர்வு சலுகை வழங்கப்பட்டது என்ற விவரத்தை தர உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

\"எங்களையே ஃபெயில் ஆக்குவியா\" – ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து வெளுத்த மாணவர்கள்.. கொடுமை

India oi-Jackson Singh டும்கா: தேர்வில் தோல்வி அடைந்ததால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள், தங்களை ஃபெயில் ஆக்கிய ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த சம்பவம் ஜார்க்கண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களை ஒப்பிடும் போது இன்றைக்கு இருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் மிகுந்த கவலை அளிப்பதாகவே உள்ளன. தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்த காலம் மலையேறி, தற்போது ஆசிரியர்களை மாணவர்கள் அடிக்கும் போதாத காலம் வந்திருக்கிறது. பெற்றோர்களின் அளவுக்கு … Read more

பூஸ்டர் டோஸ் செலுத்தியோர் எண்ணிக்கை மிக குறைவு

புதுடில்லி : ‘பூஸ்டர் டோஸ்’ எனப்படும், முன் எச்சரிக்கை டோஸ் செலுத்தியவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டன. இந்நிலையில் நோயின் தாக்கத்தை குறைக்கும் வகையில், இரண்ட டோஸ் செலுத்தியவர்களுக்கு, கூடுதலாக பூஸ்டர் டோஸ் செலுத்த முடிவு செய்யப்பட்டது.இதன்படி, முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டது.இரண்டாம் கட்டமாக, 18 – 59 வயது வரையுள்ள, 77 … Read more

ஐடி ஊழியர்களே எச்சரிக்கை.. 2வது வேலை குறித்து நிறுவனங்களின் கண்டிசனை தெரிஞ்சுகோங்க!

ஐடி துறையில் சமீபத்திய தினங்களாகவே மூன்லைட்டிங் குறித்த விவாதம் இருந்து வருகின்றது. ஒரு தரப்பு இது காலத்தின் தேவை என்றாலும், மற்றொரு தரப்பு இது நிறுவனத்திற்கு எதிரானது என கூறுகின்றது. இது குறித்து இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், முக்கிய தரப்புகள் சொல்வதை சமீபத்திய நாட்களாகவே பார்த்து வருகிறோம். எனினும் முன்னணி ஐடி நிறுவனங்கள் பலவும் அதனதன் அப்பாயின்மெண்ட் ஆர்டரில், இது குறித்து என்ன கூறியிருக்கின்றன என்பதை யாரேனும் கவனித்தது உண்டா? ஐடி பங்குகள் … Read more

தொடர் இன்ஜின் கோளாறு; சினூக் ரக ஹெலிகாப்டர்களின் பயன்பாட்டை நிறுத்தியதா அமெரிக்கா?

அமெரிக்கா 1960-ம் ஆண்டிலிருந்து போர்க்களத்தில் பயன்படுத்திவரும் சினூக் ஹெலிகாப்டர்களை முழுமையாக தரையிறக்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இன்ஜினில் அடிக்கடி கோளாறு காரணமாக தீப்பிடிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்கர் தனது சினூக் ரக ஹெலிகாப்டர்களை தரையிறக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவிடம் மொத்தம் 400 சினூக் ரக ஹெலிகாப்டர்கள் இருக்கின்றன. அதே சமயம் இந்தியாவிடம் 15 CH-47 சினூக் ஹெலிகாப்டர்கள் இருக்கின்றன. இந்தியாவில் சினூக் ஹெலிகாப்டர்களின் பயன்பாடு சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. சினூக் ஹெலிகாப்டர் லடாக், சியாச்சின் பனிப்பாறை போன்ற இடங்களில், விமானப் போக்குவரத்து … Read more