உலகளவில் 60.91 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 60.91 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 60.91 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 65 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 58.55 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் 3-வது சுற்றில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி

அமெரிக்கா: அமெரிக்கா ஓபன் டென்னிஸ் 3-வது சுற்றில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறினார். ஆஸ்திரேலிய வீராங்கனை அஜ்லாவிடம் போராடி தோல்வியடைந்தார்.

அமித்ஷா தான் மிகப்பெரிய 'பப்பு'.. நிலக்கரி ஊழல் வழக்கில் சிக்கிய மம்தா பானர்ஜி மருமகன் விளாசல்

India oi-Mani Singh S கொல்கத்தா: அமித்ஷா தான் மிகப்பெரிய பப்பு என்றும், மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் இன்றி அமித்ஷாவால் அரசியல் செய்ய இயலாது என்றும் நிலக்கரி ஊழல் வழக்கில் சிக்கிய மம்தா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி.. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான இவர் மீது நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அபிஷேக் பானர்ஜியிடம் ஏற்கனவே இரண்டு … Read more

இந்தியாவில் எலக்டிரிக் கார் விற்பனையில் நம்பர் இடத்தை டாடா மோட்டார்ஸ் பெற்றுள்ளது.

டாடா நிறுவனத்தின் நெக்சான் இவி, டாட டைகோர் இவி போன்றவை அதில் முக்கியமானவை. அண்மையில் டாடா நிறுவனம் தங்களது டாடா நெக்சான் இவி மாடலை அப்கிரேட் செய்து டாடா நெக்சான் இவி மேக்ஸ் என அறிமுகம் செயதது. இப்போது டாடா நெக்சான் ஜெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. டாடா நெக்சான் ஈவி ஜெட் டாடா நெக்ஸான் இவி ஜெட் பதிப்பானது மண்ணின் வெண்கலம் மற்றும் பிளாட்டினம் சில்வர் ஆகிய இரண்டு-டோன் வெளிப்புற வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உட்புறம் … Read more

“ராமநாதபுரம் மாதிரி பணக்கார மாவட்டம் எதுவுமே கிடையாது..!" – சொல்கிறார் அமைச்சர் கே.என்.நேரு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சி நிர்வாகத்துறையின் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று (02.09.2022) நடைபெற்றது. அமைச்சர்கள் கூட்டத்திற்கு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில், உள்ளாட்சி … Read more

சீனாவில் உச்சம் தொட்ட முட்டை விலை: வெளியான காரணம்

வழக்கத்தை விட வெப்பமான கோடையில் கோழிகள் குறைவாகவே முட்டை இடுகின்றன சீனாவின் பல முக்கிய நகரங்கள் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வெப்பமான நாட்களை பதிவு செய்துள்ளன கொளுத்தும் வெயில் காரணமாக சீனாவில் முட்டை விலையில் கடும் ஏற்றம் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கத்தை விட வெப்பமான கோடையில் கோழிகள் குறைவாகவே முட்டை இடுகின்றன என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காலநிலை மாற்றம் காரணமாக தீவிர வானிலை அடிக்கடி மாறிவருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வெப்பநிலை அதிகரிக்கும் போது … Read more

செப்டம்பர் 3: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 105-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 105-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை:  தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பொய் செய்தி வழக்குகள் பதிவு; மேற்கு வங்கத்துக்கு முதலிடம்| Dinamalar

கோல்கட்டா : சமூக வலைதளங்களில் வெளியான பொய் செய்திகள் தொடர்பாக, நாட்டிலேயே மிக அதிகமாக மேற்கு வங்கத்தில், 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களில் கடந்தாண்டு வெளியான பொய் செய்திகள் தொடர்பாக பதிவான வழக்குகள் குறித்து, தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்தாண்டு மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பா.ஜ., பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை எட்டியது. இத்தேர்தலையொட்டி … Read more

குஜராத்: “ஆம் ஆத்மிக்கு வாக்களித்தால் விவசாயிகளின் ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடி” – கெஜ்ரிவால் தாராளம்

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில், சட்டமன்றத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முழுவேகத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை கவனிக்க ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்துள்ளார். துவாரகா மாவட்டத்தில் நடந்த விவசாயிகளின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார். “ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தால் விவசாயத்துக்கு 12 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்படும். விவசாயிகளின் விலைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டு கொள்முதல் … Read more