தலைப்பு செய்திகள்
பிரித்தானியா நோக்கி வந்த விமானத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்: போர் விமானங்கள் சீறிப் புறப்பட்டதால் பரபரப்பு…
துருக்கியிலிருந்து பிரித்தானியா நோக்கி வந்த விமானம் ஒன்றிற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. விமானப்படை விமானங்கள் இரண்டு சீறிப் புறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துருக்கியிலுள்ள Lincolnshire என்ற இடத்திலிருந்து இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் விமான நிலையம் நோக்கி நேற்றிரவு பயணிகள் விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. இரவு 8.00 மணியளவில், அந்த விமானத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் உள்ளதாக எசெக்ஸ் பொலிசாருக்கு தகவல் கிடைத்துளது. உடனடியாக, Lincolnshireஇலிருந்து பிரித்தானிய விமானப்படையின் போர் விமானங்கள் இரண்டு சீறிப் … Read more
ரூ.100 தினசரி பாஸ்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு…
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.100 கட்டண டிக்கெட் எடுத்தால், அன்றைய தினம் முழுவதும் விருப்பம் போல் பயணம் செய்யலாம் என தெரிவித்து உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவையில் * தினசரி பாஸ் (Daily Pass)* என்ற திட்டம் ஒன்று உள்ளது. இது குறித்து விளம்பரங்கள் ஏதும் செய்யவில்லை என்பதால் மக்களிடம் சென்று சேரவில்லை. எனவே தற்போது, அதுகுறித்து விரிவான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, சென்னை மெட்ரோ … Read more
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரிப்பு..!!
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 28,000 கனஅடியில் இருந்து 35,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் – 120 அடி, நீர் இருப்பு – 93.47 டி.எம்.சி., நீர் வெளியேற்றம் – 35,500 கனஅடியாக உள்ளது. சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 21,500 கனஅடி, 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 13,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் 12-வது நாளாக ராகுல்காந்தி நடைபயணம்…!
பெங்களூரு, அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கினார். அந்த பாதயாத்திரை கன்னியாகுமரி மாவட்டத்தில் பயணித்து கேரளாவுக்கு சென்றது. அங்கு 19 நாட்கள் நடைபெற்ற பிறகு அந்த பாதயாத்திரை கடந்த மாதம் 30-ந் தேதி கர்நாடகத்திற்கு வந்தது. சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டைக்கு வந்த ராகுல் காந்திக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் 35-வது நாள் மற்றும் கர்நாடகத்தில் 11-வது … Read more
பொடுகு, இளநரை, முடி உதிர்தல், ஊட்டச்சத்தின்மை; கேசப் பிரச்னைகளுக்கு சிறப்பான தீர்வுகள்!
இன்றைய பரபரப்பான உலகில், நம் எல்லோருக்கும் `தலைக்கு மேல்’ எக்கச்ச வேலைகள். இதில் கேசப் பராமரிப்பில் பலரும் அக்கறை காட்டுவதில்லை. இதனால் பொடுகு, முடி உதிர்தல், இளநரை உள்ளிட்ட பிரச்னைகளை இளம் வயதினர் எதிர்கொள்ள நேரிடுகிறது. இவற்றுக்கு தீர்வு என்ன? கேசப் பிரச்னைகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமும் தீர்வும் அளிக்கிறார் தலத் சலிம். இவர், கடந்த 20 ஆண்டுகளாகக் கேசம் மற்றும் சருமப் பராமரிப்பு ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். லண்டனில் யுனானி மருத்துவம் பயின்றவர், சென்னையில் ஆலோசனை … Read more
குளியலின் போது மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்! மீறினால் இது போன்ற சிக்கல் ஏற்படுமாம்
குளியல் என்பது உங்கள் உடம்பில் உள்ள அழுக்கை நீக்க மட்டுமல்ல. உங்கள் உடம்பில் உள்ள உஷ்ணத்தையும் அது குறைக்கும். குளிக்கும் போது நாம் செய்யும் சில தவறுகள் நம் உடல் நலத்தில் தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். வெகுநேரம் குளிப்பது நீண்ட நேரம் குளித்தால் அது உங்கள் சருமத்திற்கு தேவையான அத்தியாவசிய எண்ணெய்களையும் அகற்றிவிடும் என்பது உங்களுக்கு தெரியுமா? இவை இயற்கையான மாய்ஸ்சரைசர்களை அகற்றுவதால் உங்கள் சருமம் வறட்சியாகவோ, வெளிர் நிறமாகவோ மாறக்கூடும். myheatworks வெந்நீர் … Read more
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீதேறி பக்தர்கள் சாமி தரிசனம்…
சிதம்பரம்: அறநிலையத்துறையினரின் நடவடிக்கையைத் தொடர்ந்து, சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீதேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். முன்னதாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் அனுமதி மறுக்கும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், முக்கிய விஐபிக்கள் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதி வழங்ககப்பட்டு வந்தது. இது பிரச்சினையைனதைத் தொடர்ந்து, சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி தந்து கடந்த மே … Read more
பழனியில் தொழில் போட்டி காரணமாக தையல் கடைக்காரரை கொலை செய்த வழக்கில் 6 பேர் மீது குண்டர் சட்டம்
பழனி: பழனியில் தொழில் போட்டி காரணமாக தையல் கடைக்காரரை கொலை செய்த வழக்கில் 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததுள்ளது. குறைவான கட்டணத்தில் துணிகளை தைத்து வந்த ஜெயந்த் சமந்தா(34) என்பவருக்கும் தர்மராஜ் என்பவருக்கும் தொழில் போட்டி ஏற்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் குறைந்ததால் கோபமடைந்த தர்மராஜ் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ஜெயந்த் சமந்தாவை கொலை செய்துள்ளனர்.