சீன எல்லையோர பகுதிகளில்ஹெலிபேட் அமைக்க முடிவு| Dinamalar

தேஜு, சீன எல்லையோர பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் தரையிறங்கவும், புறப்பட்டுச் செல்லவும் வசதியாக, ‘ஹெலிபேட்’ அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.நம் நாட்டின் அருணாச்சல பிரதேசத்தை, தங்களுக்கு சொந்தமான பகுதி என, நம் அண்டை நாடான சீனா உரிமை கோரி வருகிறது. இந்த பகுதியில், சீன படைகள் அடிக்கடி அத்துமீறி நுழைவதும், அவர்களை நம் படையினர் விரட்டி அடிப்பதும் வழக்கமாக உள்ளது. அருணாச்சல பிரதேசத்தை ஒட்டியுள்ள தங்கள் எல்லை பகுதியில், சாலை, ராணுவ வீரர் குடியிருப்பு என, பல கட்டுமான பணிகளை … Read more

ரயில் சக்கர தொழிற்சாலைதனியாருக்கு அரசு அழைப்பு| Dinamalar

புதுடில்லி, :”ஆண்டுக்கு 80 ஆயிரம் ரயில் சக்கரங்கள் தயாரிக்கும் ஆலை நிறுவ, ‘மேக் இன் இந்தியா’ திட்டம் வாயிலாக ‘டெண்டர்’ கோரப்பட்டுள்ளது,” என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று தலைநகர் புதுடில்லியில் கூறியதாவது:அதிவேக ரயில்கள் மற்றும் சாதாரண ரயில்களுக்கு தேவையான சக்கரங்கள் தயாரிக்கும் ஆலை, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், உள்நாட்டிலேயே தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த ஆலையில் இருந்து ஆண்டுக்கு 80 ஆயிரம் சக்கரங்கள் கொள்முதல் செய்யப்படும். … Read more

10.09.22 சனிக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | September – 10 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

துக்கமனுஷ்டிக்கும் பிரித்தானியா… பொதுமக்கள் என்னென்ன செய்யலாம்? செய்யக் கூடாது?

இறுதி அஞ்சலி செலுத்தும் நோக்கில் பொதுமக்கள் திரளானோர் லண்டனுக்கு புறப்படத் தொடங்கியுள்ளனர். இறுதிச்சடங்குகளுக்கு பின்னரும் அரச குடும்பத்து உறுப்பினர்கள் மேலும் 7 நாட்கள் துக்கமனுசரிக்க உள்ளனர். பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து பிரித்தானியாவில் 12 நாட்கள் துக்கமனுசரிக்கப்படுகிறது. எதிர்வரும் சில வாரங்கள் பிரித்தானியாவில் பல மாற்றங்கள் இருக்கும் எனவும், அரசாங்கம் படிப்படியாக அறிவிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ராணியாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நோக்கில் பொதுமக்கள் திரளானோர் லண்டனுக்கு புறப்படத் தொடங்கியுள்ளனர். தேசமே … Read more

நடப்பாண்டு மருத்துவக் கலந்தாய்வில் புதிய நடைமுறை! மருத்துவ கல்வி இயக்குநரகம் தகவல்..

சென்னை: நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், விரைவில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மருத்துவக் கலந்தாய்வுக்கு புதிய நடைமுறையை நடைமுறையை மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 35 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 5,050 இடங்களில் 15% அகில இந்திய ஒதுக்கீடுக்கு 757 இடங்கள் ஒதுக்கப்பட்ட பின், எஞ்சிய 4,293 இடங்களுக்கும், இதர தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் … Read more

போராட முடியாமல் தன்னை முடித்துக் கொள்ளவது தான் தற்கொலை. இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்:

தற்கொலை அறவே கூடாது என்பதை வலியுறுத்தி செப். 10ல் உலக தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. பிரச்னைகள் இல்லாத மனிதர்களே இல்லை. அதை சமாளித்து போராடி தான் வாழ்வில் முன்னேற வேண்டுமே தவிர எதிர்மறையாக சிந்திந்து தற்கொலை செய்வது கோழைத்தனமான செயல். பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு, தற்கொலை என சிலர் சிந்திக்காமல் முடிவெடுக்கின்றனர். இதனால் அவரை சார்ந்திருப்பவர் எந்தளவு கஷ்டப்படுவர் என அறிவதில்லை. ‘செயல்பாடுகள் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. தற்கொலை எண்ணங்கள் கட்டுப்படக் … Read more

சார்லஸ்-க்கு என்னவெல்லாம் கிடைக்கும்..? மொனார்சி முதல் கிரவுன் எஸ்டேட் வரை..!

பிரிட்டன் நாட்டின் ராணி எலிசபெத் உடல்நல குறைவால் 96 வயதில் காலமானார். இவரது மரணம் பிரிட்டன் நாட்டைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டன் நாட்டின் 3வது பெண் பிரதமராக Liz Truss பதவியேற்றிய 2 நாளில் ராணி எலிசபெத் மறைவு என்பது பிரிட்டன் அரசுக்கு கூடுதல் நெருக்கடியை கொடுத்துள்ளது. பிரிட்டன் மன்னராக சார்லஸ் பொறுப்பேற்றுள்ள நிலையில், பிரிட்டன் அரசு குடும்ப நிறுவனம், சொத்துக்கள், அரண்மனைகள் தற்போது இவர் கையில் வர உள்ளது. சரக்கு ஆர்டர் செய்தது தப்பா.. ரூ.4 … Read more

எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த செங்கோட்டையன் உள்பட ஈரோடு மாவட்ட முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்…

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பொதுக் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், பொதுக்குழு கூட்டம் நடத்தியது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து, இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற … Read more

நாட்டா தகுதித் தேர்வு கட்டாயமில்லை என்ற அறிவிப்பை மீறி பி.ஆர்க் சேர்க்கை மறுத்த விவகாரத்தில், மாணவிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சென்னை: நாட்டா தகுதித் தேர்வு கட்டாயமில்லை என்ற அறிவிப்பை மீறி பி.ஆர்க் சேர்க்கை மறுத்த விவகாரத்தில், மாணவிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு 4 வாரங்களில் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வியின் கொள்கைகளை முடிவு செய்யும் பொறுப்பற்ற கல்வியாளர்கள், அதிகாரிகளால்  இளைஞர்களின் வாழ்வு பாதுகாப்பற்றதாக மாறுவதற்கான உதாரணமாக இந்த வழக்கு உள்ளதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.

ஹர்ஷா இன்ஜினியர்ஸ் செப்டம்பர் 14 அன்று ஐபிஓ.. சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு!

அகமதாபாத்தினை தலைமையிடமாகக் கொண்ட ஹர்ஷா இன்ஜினியர்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் பங்கு வெளியீடானது, வரவிருக்கும் செப்டம்பர் 14 அன்று தொடங்கவுள்ளது. இந்த பங்கு வெளியீடானது செப்டம்பர் 16 அன்று முடிவடையவுள்ளது. பேரிங் கேஜ் நிறுவனமான இந்த பங்கு வெளியீட்டின் மூலம் 455 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்படலாம். இதே ஏற்கனவே உள்ள பங்குதாரர்களாக உள்ள முதலீட்டாளர்கள் மூலம் 300 கோடி ரூபாய் வரையில் பங்குகளை விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிஆது. சீனா-வுக்கு கட்டும் கட்டும் ஜெர்மனி.. … Read more