சொந்த வீடா..? வாடைகை வீடா..? எது பெஸ்ட்..!

ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு இருந்தாலும் தவணை முறையில் வீடு வாங்கி அதில் சிக்கி கொள்ளக் கூடாது என்ற முன் ஜாக்கிரதை காரணமாக பலர் சொந்த வீடு வாங்காமல் உள்ளனர். இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி தற்போது வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதை அடுத்து வீட்டு லோன் வாங்கியவர்கள் கட்டும் தவணைத் தொகையும் அதிகரித்து உள்ளது. இதனால் சொந்த வீடு வாங்குவதை விட வாடகை வீட்டிலேயே நிரந்தரமாக இருந்து விடலாம் என்று பலர் … Read more

75 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சி கண்ட இந்தியா… எப்படிச் சாத்தியமானது? #இந்தியா@75

மனித வரலாற்றில் மிகப் பெரிய செல்வமிக்கப் பொருளாதாரமாக இருந்த நம் நாடு 1947-ஆம் ஆண்டு காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டபோது ஆங்கிலேயர்களால் சுரண்டப்பட்டு மிகவும் ஏழ்மையான நாடாக மாறியிருந்தது. அப்படிப்பட்ட நிலையிலிருந்து இன்று வரையிலான 75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் நாம் அடைந்திருக்கும் வளர்ச்சி மகத்தானதாகும். `ஆஸாதி கா அம்ரித் மஹாத்சோவ்’ கொண்டாடும் நம் நாடு அடைந்த பொருளாதார வளர்ச்சியை சற்றே பின்னோக்கிப் பார்ப்போம். #இந்தியா@75 இந்தியா என்னும் `தங்கப்பறவை’… கடந்த 75 ஆண்டுகளில் நாம் அடைந்திருக்கும் … Read more

இலங்கையில் மின்கட்டணம் 264% உயர்வு

கொழும்பு: இலங்கையில் மின்கட்டணம் 264% உயர்வடைந்து உள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. எண்ணெய் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது இந்நிலையில், இலங்கையில் வரலாறு காணத அளவாக, மின்கட்டணத்தை 264 சதவீதம் உயர்த்தியுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவாக இந்த விலை உயர்வு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராணிப்பேட்டை அருகே டீக்கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து

ராணிப்பேட்டை; ராணிப்பேட்டை மாவட்டம் வானாபாடி அருகே டீக்கடையில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உச்சத்தில் இருந்து பாதாளம் சென்ற 4 பங்குகள்… உங்களிடம் இருக்கா?

பங்குச்சந்தை என்பது ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்றாலும் ஒரு சில நல்ல பங்குகள் மார்க்கெட் வீழ்ச்சி அடையும் போது இறங்கினாலும், மார்க்கெட் உச்சத்திற்கு செல்லும்போது நல்ல லாபம் கொடுக்கும் என்பது தெரிந்ததே. ஆனால் ஒரு சில பங்குகள் மார்க்கெட் ஏற்றத்தில் இருந்தாலும் இறக்கத்தில் இருந்தாலும் இறங்கி கொண்டே வரும் என்பது குறிப்பிடத்தக்கது. சில பங்குகள் உச்சத்தில் இருந்து திடீரென வீழ்ச்சி அடைந்து அதல பாதாளத்திற்கு செல்லும் நிலைமையும் ஏற்படலாம். அவ்வாறு உச்சத்தில் இருந்து பாதாளத்திற்கு சென்ற 4 … Read more

சாமியை கும்பிட்டு… கோயிலில் இருந்த நன்கொடை பெட்டியை திருடிச் சென்ற திருடன்! | Video

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள அம்மன் கோயிலில் திருடன் ஒருவன் விசித்திரமான முறையில் திருட்டில் ஈடுபட்டது தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது… அப்படி என்ன செய்தார் என்று பார்த்தால் …. மற்ற திருடர்களைப் போலவே இந்த திருடனும் கோயிலில் காணிக்கை பெட்டிகளைத் திருட வந்திருப்பது அங்கிருந்த ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. அவர் திருடுவதற்கு முன்பு அம்மனைக் கும்பிட்டு திருட்டில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது, வீடியோவில், திருடன் … Read more

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மக்களிடம் கருத்து கேட்கும் ஒரே மு.க.ஸ்டாலின் தான் – எடப்பாடி பழனிசாமி

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு மக்களிடம் கருத்து கேட்கும் ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என பூந்தமல்லியில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு மக்களிடம் கருத்து கேட்கும் ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என்றும், ஆன்லைன் சூதாட்டதில் ஆண்டுக்கு ரூ.20 கோடி வருமானம் வருகிறது. தில் சில பகுதிகள் திமுகவுக்கு கிடைகிறது என்று குற்றம் சாட்டினர்.

முக்கொம்பு மேலணையின் நீர்வரத்து அதிகரிப்பு

திருச்சி: கனமழையால் முக்கொம்பு மேலணைக்கு 1.77 லட்சம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி ஆற்றில் 57,000 கொள்ளிடத்தில் 1.20 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

விமான விபத்து நடந்த இடத்தில் மருத்துவமனை…. பலியானவர்களின் குடும்பத்தினர் தந்த நிதி!

கேரளாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என்ற விமானம் விபத்துக்குள்ளாகி 18 பேர் பலியாகினர், மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் இந்த விமான விபத்தில் பலியானவர்கள் மற்றும் விமான விபத்தில் இருந்து தப்பித்தவர்கள் விமான விபத்து நடந்த இடத்தில் மருத்துவமனை ஒன்றை கட்ட உள்ளனர். இதற்காக அவர்கள் தங்களுக்கு கிடைத்த இழப்பீட்டு பணத்திலிருந்து ஒரு பகுதியை ஒதுக்கி இந்த பணியை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் ஏன் இந்த இடத்தில் … Read more

பெரம்பலூர்: மளிகை கடைக்குச் சென்றது குட்கா சோதனைக்கு… சிக்கியதோ டெட்டனேட்டர் குச்சிகள்!

பெரம்பலூர் மாவட்டம் கவுல்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் நாராயணசாமி. இவர், அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரின், மகன் மகேந்திரன் மளிகைக் கடையில அப்பாவிற்கு உதவியாக இருந்து வருகிறார். பெரம்பலூர் இந்நிலையில், நாராயணசாமியின் மளிகைக் கடையில் குட்கா விற்பனை செய்வதாகப் பெரம்பலூர் போதைப் பொருள் தடுப்பு சிறப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் போலீஸார் மளிகைக் கடைக்குச் சென்று சோதனை செய்திருக்கிறார்கள். அப்போது, மளிகைக் கடையில் 170 டெட்டனேடர் குச்சிகளைப் பார்த்ததும் … Read more