தலைப்பு செய்திகள்
தொடர் மழை காரணமாக புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
புதுகோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுகோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் மழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்யும் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்யும் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. மழை பெய்யும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
“வீட்டில் முடங்கிக் கிடந்த காங்கிரஸ்காரர்களை ராகுல் யாத்திரை வெளியே வரச் செய்துள்ளது" – ப.சிதம்பரம்
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே குட்டப்பாளைத்தில் உள்ள சிவசேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ப.சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “அமெரிக்காவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அந்நாட்டு மைய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தி வருகிறது. இந்தியாவில் வட்டி விகிதத்தை குறைவாக உயர்த்துவதால் நூறு பில்லியன் டாலர் அந்நியச் செலாவணியை ரிசர்வ் வங்கி விற்றிருப்பது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். P Chidambaram தற்போது கூட ரிசர்வ் வங்கியில் … Read more
இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னை: இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டம், ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் மாலை 4.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்தல், 2024 லோக்சபா தேர்தல் கூட்டணி நிலைப்பாடு, திமுக போடும் வழக்குகள், ரெய்டுகளை சமாளிக்க திறமை வாய்ந்த வழக்கறிஞர்கள் குழு அமைத்தல் ஆகிய விஷயங்கள் குறித்து முக்கிய எடுக்கப்படும் என்று … Read more
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
காமராஜர், நரசிம்ம ராவ், நிஜலிங்கப்பா…. காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக இருந்த தென்னிந்தியர்கள்!
காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறவிருக்கிறது. காங்கிரஸின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கேவும், சசி தரூரும் நேரடியாக மோதிக்கொள்கின்றனர். இருவருமே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய செய்தி. இதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக இருந்த தென்னிந்தியர்கள் குறித்து இங்கே அலசுவோம்! காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒரு தென்னிந்தியர் பதவிவகித்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கடைசியாக 1992 முதல் 1996 வரை தென்னிந்தியாவைச் சேர்ந்த பி.வி.நரசிம்ம ராவ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக … Read more
அக்டோபர் 10: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னை: சென்னையில் 142-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 142-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பாதுகாப்புத்துறை கீழ்நிலை பணிக்கான 'குரூப் C' தேர்வில் ஆள்மாறாட்டம்செய்த ஹரியானாவை சேர்ந்த 29 பேர் கைது
சென்னை: பாதுகாப்புத்துறை கீழ்நிலை பணிக்கான ‘குரூப் C’ தேர்வில் ப்ளூடூத் மூலமும், ஆள்மாறாட்டம் செய்தும் தேர்வு எழுதிய ஹரியானாவை சேர்ந்த 29 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் நடந்த தேர்வில் மோசடி செய்ய முயன்ற 29 பேர் மீதும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிரூபிக்கப்பட்டுள்ளது!
அனைவருக்கும் பசுமை வணக்கம்! “விவசாயிகளே, என் உருவ பொம்மைகளை எரியுங்கள். அப்போதுதான் நீங்கள் என் மீது கோபமாக இருப்பதை அறிந்துகொள்வேன்” என்று மேடையில் கர்ஜித்துவிட்டு, தன் பதவியையும் ராஜினாமா செய்திருக்கிறார் பீகார் மாநில வேளாண்மைத்துறை அமைச்சர் சுதாகர் சிங். இந்தக் காலத்திலும் இப்படி ஓர் அரசியல்வாதியா? என்று ஆச்சர்யம் எட்டிப்பார்க்கவே செய்கிறது. பீகாரில் பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, ராஷ்ட்டிரிய ஜனதா தளத்துடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளார் முதல்வர் நிதிஷ்குமார். அந்த வகையில் ராஷ்ட்டிரிய ஜனதா தளக் … Read more