திடீரென பெண்கள் போராட்டம்.. துப்பாக்கியால் அடித்து விரட்டிய தாலிபான்கள்.. ஆப்கானிஸ்தானில் பரபரப்பு!

International oi-Mani Singh S காபூல்: ஆப்கானிஸ்தானில் தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க கோரி போராட்டம் நடத்திய பெண்களை தாலிபான்கள் அடித்து விரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறிய பிறகு ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றி தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சி அதிகாரம் முழுமையாக தாலிபான்கள் வசம் வந்தது. வெளியேறிய மக்கள் கடுமையான பழமைவாத சட்டங்களை தாலிபான்கள் அமல்படுத்தக்கூடும் என்ற அச்சத்தில், ஆப்கானிஸ்தானில் … Read more

தேசிய கொடி வழங்கி குழந்தைகளை ஊக்கப்படுத்திய மோடியின் தாயார்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி:’ நாட்டின், 75வது சுதந்திர தினத்தையொட்டி, வீடுதோறும் தேசியக்கொடியை ஏற்றும் இயக்கத்தில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்று வரும் நிலையில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் 100 , தனது இல்லத்தில் குழந்தைகளுக்கு தேசிய கொடியை வழங்கி ஊக்கப்படுத்தினார். நாட்டின், 75வது சுதந்திரதினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ‘நாட்டின் சுதந்திரத்துக்காக போராடியவர்களை கவுரவிக்கும் வகையில், ஒவ்வொரு வீட்டிலும், 13 – 15ம் தேதி வரை தேசியக் கொடியை பறக்க விட வேண்டும்’ என, … Read more

சிவகங்கை: திருமண பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறு, தாக்குதல்… ஒன்றிய சேர்மனுக்கு சிறை!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் சண்முகவடிவேல். இவர் தற்போது, திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவராக இருக்கிறார். திருப்பத்தூர் தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். இவருக்கும் திருப்பத்தூர் தி.மு.க மாணவரணி துணை செயலாளராக இருந்த வக்கீல் முகமது கனி என்பவருக்கும் இடையில் கடந்த 2019-ம் ஆண்டு திருமண பேனர் வைப்பது தொடர்பான தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில், ஆத்திரமடைந்த சண்முகவடிவேல், தனது நண்பர் செந்தில்குமாருடன் சேர்ந்து, முகமது கனியை கடுமையாக தாக்கியிருக்கின்றனர். இதுகுறித்து, முகமது கனி வழக்கு … Read more

திருவாரூர் பாஜக மாவட்ட தலைவருக்காக தேர்வு எழுத வந்த நபர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் என்பவருக்கு பதிலாக தேர்வெழுதிய திவாகர் மாதவன் மற்றும் மாவட்ட பாஜக கல்வியாளர் பிரிவு செயலர் ரமேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பி.ஏ., பொலிட்டிக்கல் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு தேர்வு இன்று  மதியம் நடைபெற்றது. இந்தத் தேர்வில் பாஸ்கர் என்ற நபர் தேர்வு எழுத வந்திருந்தார். தேர்வு எழுதுபவர்களின் அடையாள அட்டை மற்றும் நுழைவு சீட்டு ஆகியவற்றை தேர்வு அறையில் இருந்த கண்காணிப்பாளர் பரிசோதனை செய்த … Read more

தொடர் விடுமுறையை பயன்படுத்தி பயனிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல்; ரூ.1.37 லட்சம் அபராதம்

சென்னை: தொடர் விடுமுறையை பயன்படுத்தி பயனிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்த ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையை பயன்படுத்தி பயனிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபட்ட ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.1.37 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

7 வருவாய் கிராமங்கள்! 813 குடும்பங்கள்! தலா ரூ.4800 நிவாரணத் தொகை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

News oi-Arsath Kan மயிலாடுதுறை: கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 7 வருவாய் கிராமங்களை சேர்ந்த 813 குடும்பங்களுக்கு தலா ரூ.4800 நிவாரணத் தொகை வழங்கியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மயிலாடுதுறை, நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன், உரிய பயனாளிகளுக்கு இந்த நிவாரண நிதியை வழங்கினார். அரசு வழங்கிய உதவித் தொகையுடன் தலா 10 கிலோ அரிசி, தலா ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்,வேட்டி,சேலை ஆகிய அத்தியாவசியப் பொருட்களும் கொடுக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் மெய்யநாதன் இது தொடர்பாக சுற்றுச்சூழல் காலநிலை … Read more

சந்துவெளி மாரியம்மன் கோவிலில் 82வது ஆண்டு செடல் திருவிழா| Dinamalar

புதுச்சேரி: சந்துவெளி மாரியம்மன் கோவில் செடல் திருவிழா விமர்சையாக நடந்தது.முருங்கப்பாக்கம் சந்துவெளி மாரியம்மன் கோவிலில் 82வது ஆண்டு செடல் திருவிழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிேஷகம் ஆராதனைகள் நடந்து வருகிறது. முக்கிய உற்சவமான செடல் திருவிழா நேற்று காலை, கரகம் அலங்கரித்தலுடன் துவங்கியது. மதியம் 12 மணிக்கு, கூழ் வார்த்தலும், மாலை 6.30 மணிக்கு பூங்கரகம் எடுத்தல் நிகழ்ச்சியும் தொடர்ந்து செடல் விழாவும் நடந்தது.பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் … Read more

டாஸ்மாக் பார் ஏலம்: டெண்டரை வீடியோ பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு…

சென்னை:  டாஸ்மாக் பார் டெண்டர் தொடர்பான வழக்கில், டெண்டரை முழுமையாக வீடியோ பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. டாஸ்மாக் “பார்’ களை “டெண்டர்’ விடாமல், ஏற்கனவே நடத்தியவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பல இடங்களில் ஆளுங்கட்சியினர் தலையீடு இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதற்கிடையில், டாஸ்மாக் பார்களை நடத்துவதற்கு புதிய உரிமம் வழங்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டது.  ஆகஸ்ட் 2 முதல் 18 வரை அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகத்திலும், டாஸ்மாக் இணையதளத்திலும் விண்ணப்பங்கள் கிடைக்கும். டெண்டர்களை … Read more

கொள்ளை சம்பவம்: தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணிகள் தீவிரம்.! வடக்கு மண்டல காவல் ஆணையர் பேட்டி

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெட் வங்கியில், ஊழியரே கொள்ளையடித்த சம்பவத்தில்  ஊழியர் மற்றும் இன்னும் 2 பேர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணிகள் தீவிரம்,குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிடலாம் என வடக்கு மண்டல காவல் ஆணையர் பேட்டி அளித்துள்ளார்.