இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா; அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவில் தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மிக ஸ்தலமான இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆடி மாதக்கடைசி வெள்ளி திருவிழா மிகவும் பிரசித்தம். இந்த திருவிழாவைக் காணத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர். இந்த நிலையில் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி மாதத் திருவிழா ஆகஸ்ட் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலின் ஆடி மாத கடைசி வெள்ளி … Read more

13/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 15,815 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 15,815 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 20,018 பேர் குணமடைந்து உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம்  இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 15,815 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,42,39,372 ஆக உயர்ந்துள்ளது. நேற்று … Read more

போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு: சென்னை ஐகோர்ட்

சென்னை: போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்குகளை விரைந்து முடிக்க அரசு குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

3 வங்கதேசத்தினர் பெங்களூரில் கைது வங்கதேசத்தினர் 3 பேர் பெங்களூரில் கைது| Dinamalar

பெங்களூரு : இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து, பெங்களூரில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய மூன்று வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர்.கடந்த வாரம், மேற்கு வங்கத்தில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் வந்த ஷியான் தாஸ், 25; நிகிலேஷ் தாஸ், 34; அமின் முகமது சவுத்ரி, 27, ஆகிய மூவரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.விசாரணையில், மூவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதை ஒப்புக் கொண்டனர். மூவரும் கைது செய்யப்பட்டனர். 2013ம் ஆண்டு சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இவர்கள், மேற்கு வங்கத்தில் சில … Read more

சிறியதே அழகானது! காந்தியடிகள், ஜே.சி.குமரப்பாவை கொண்டாடும் வெளிநாட்டு அறிஞர்! #IndependenceDay2022

ஒரு முறை பீஹார் மாநிலத்தில் உள்ள புத்த கயா சென்றிருந்த போது, ஒரு புத்த மதத் துறவியை சந்தித்தேன். அவர் துறவி மட்டுமல்ல. பெரிய படிப்பாளி. அவர் பரிந்துரை செய்த ‘சிறியதே அழகானது’ (Small Is Beautiful) ஆங்கில நூலைச் சென்னையில் தேடிப்பிடித்து வாங்கினேன். இப்போது அமேசான் இணைய தளத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. Small Is Beautiful 1969 ஜுலை 19-ம் தேதி, இரவு 8.30… வங்கிகளை தேசியமயமாக்கிய இந்திரா … Read more

பிரித்தானிய பிரதமர் தேர்தல்: வெற்றி பெறும் வாய்ப்பு இவருக்குத்தான் அதிகமாம்…

பிரித்தானியாவுக்கான அடுத்த பிரதமரைத் தேர்வு செய்யும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது போட்டியில் இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக்கும், லிஸ் ட்ரஸ்ஸும் உள்ளார்கள். இந்நிலையில், பிரதமருக்கான போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு, லிஸ் ட்ரஸ்ஸுக்கே அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் யார் என செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், பிரதமரைத் தேர்வு செய்ய இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியினரிடையே அடிக்கடி வாக்கெடுப்புகள் நடந்துகொண்டே இருக்கும். அவ்வகையில், சென்ற வாரம் நடந்த வாக்கெடுப்பில் லிஸ் ட்ரஸ்ஸுக்கு … Read more

அமைச்சர் மா.சு.வின் ஏக்கம் நிறைவேற்றம்: சென்னை உணவுத் திருவிழாவில் இன்று முதல் பீப் பிரியாணி

சென்னை: சென்னை உணவுத்திருவிழாவை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவுத்திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி இல்லை என ஏக்கம் தெரிவித்திருந்தார். அதை நிறைவேற்றும் வகையில், சென்னை உணவுத் திருவிழாவில் இன்று முதல் பீப் பிரியாணிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 3நாள் சென்னை உணவுத்திருவிழா தீவுத்திடலில்  12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மூன்று நாள் உணவுத் திருவிழா நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று முதல் இது துவங்கியுள்ளது. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் … Read more

சீர்காழி அருகே வெள்ளம் சூழ்ந்த கிராமத்தில் 6 மாதத்திற்கு சுய உதவி குழுக்கள் மாதாந்திர தவணைத் தொகையை வசூலிக்க கூடாது: அமைச்சர் உத்தரவு

சீர்காழி: சீர்காழி அருகே வெள்ளம் சூழ்ந்த கிராமத்தில் 6 மாதத்திற்கு சுய உதவி குழுக்கள் மாதாந்திர தவணைத் தொகையை வசூலிக்க கூடாது. சீர்காழி அருகே வெள்ளத்தால் பாதிக்கபட்டோருக்கு நிவாரண உதவியை வழங்கி அமைச்சர் மெய்யநாதன் உத்தரவிட்டுள்ளார். வடரங்கம், காட்டூர், முதலைமேடு திட்டு, மாதிரவேலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 811 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

நாடு முழுதும் இன்றே கொண்டாட்டம்| Dinamalar

புதுடில்லி: 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற பிரதமரின் அழைப்பை ஏற்று மத்திய அமைச்சர்கள், அரசியல்கட்சி தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் தேசிய கொடியை ஏற்றினர். எங்கு பார்த்தாலும் தேசிய கொடியாகவே தெரிகிறது.இந்தியாவின், 75வது சுதந்திர தினத்தை கொண்டாட, நாட்டு மக்கள் தயாராகின்றனர். அமுத பெருவிழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 13 முதல் 15 வரை, ‘வீடு தோறும் மூவர்ணம்’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை அறிவித்த … Read more

பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதால் கிடைத்த 50,000 கோடி: விவசாயிகளுக்கே சென்றது,.. மோடி பேச்சு!

கடந்த 7 முதல் 8 ஆண்டுகளில் பெட்ரோலுடன் எத்தனாலை கலப்பதன் மூலம் அந்நிய செலாவணியில் இருந்து சுமார் 50,000 கோடி சேமித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். petrol punk அரியானா மாநிலம் பானிப்பட்டில், 900 கோடி ரூபாய் மதிப்பில் 2 ஆம் தலைமுறை எத்தனால் ஆலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அதில் பேசியவர், ‘இந்திய ஆயில் கார்ப்பரேஷனின் இரண்டாம் தலைமுறை எத்தனால் ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறேன். கடந்த 7 முதல் … Read more