செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது இந்திய மகளிர் ஏ அணி

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மகளிர் ஏ அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. மகளிர் பிரிவில் உக்ரைன் அணி தங்கப்பதக்கமும் , ஜார்ஜியா – வெள்ளி பதக்கமும்,  இந்திய மகளிர் ஏ அணி வெண்கலம் வென்றனர். செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதன் முறையாக  இந்திய மகளிர் பதக்கம் வென்றுள்ளது.

ஃபிஷ்ஷிங் மோசடி… 7000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 2 லட்ச ரூபாயை இழந்த சீனியர் சிட்டிசன்!

தற்போதைய தொழில்நுட்ப உலகில் பணம் சம்பாதிப்பதை விட சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. வங்கியில் இருந்தால் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்து கொண்டிருக்கும் நிலையில் ஃபிஷ்ஷிங் உள்பட பல்வேறு முறைகளில் நமது வங்கி கணக்கில் உள்ள பணம் முழுவதுமே காலியாகி விடும் அபாயம் உள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வை ரிசர்வ் வங்கி அவ்வப்போது ஏற்படுத்தி வந்த போதிலும் தினந்தோறும் ஆன்லைன் மூலம் மோசடி செய்வதால் பலர் தங்கள் கடின உழைப்பால் … Read more

`டேட்டிங் ஆப்பில் தங்கைகளைத் தேடிக் கண்டுபிடித்தவர்': காரணம் இதுதான்!

மிகச் சாதாரணமாய் கேட்டுவிட்டாய் நண்பா, ‘உனக்கென்ன அக்காவா… தங்கையா? கஷ்டப்பட்டுச் சம்பாதித்து கல்யாணம் பண்ணித்தர, ஒரே பையன்’ என்று. எனில் கஷ்டப்பட்டுச் சம்பாதித்து கல்யாணம் பண்ணித்தர மட்டுமா அக்காவும் தங்கையும்? என அணிலாடும் முன்றிலில் நா. முத்துகுமார் அக்கா தங்கை இல்லாத உறவின் வலியை அழகாக உணர்த்தியிருப்பார். இல்லாதவர்களுக்கே வலி புரியும், மதிப்பு தெரியும். Brothers – Sister (Representational Image) இந்நிலையில், தனக்கு வாழ்நாள் முழுவதும் அக்கா, தங்கையின் பாசம் கிடைக்காது போய்விடுமோ என மும்பையை … Read more

செப்டம்பர் 7-ம் தேதி பாரத் ஜோடா பாத யாத்திரையை தொடங்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

டெல்லி: காங்கிரஸ் கட்சி சார்பில் செப்டம்பர் 7ந்தேதி பாரத் ஜோடா பாத யாத்திரையை தொடங்க உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. ஏற்கனவே அக்.2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தொடங்குவதாக அறிவித்த நிலையில் முன்கூட்டியே தொடங்குகிறது. காங்கிரஸ் “பாரத் ஜோடோ யாத்திரை” முன்னேறுகிறது,  இந்த பாத யாத்திரை செப்டம்பர் 7 முதல் கன்னியாகுமரியில் தொடங்குகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அகில இந்திய காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வருகிறது. … Read more

வேலூரை சேர்ந்த மார்க் பங்குச் சந்தை நிறுவனம் மீது காவல்துறை வழக்குப்பதிவு

சென்னை: வேலூரை சேர்ந்த மார்க் பங்குச் சந்தை நிறுவனம் மீது சென்னை மாநகர காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. காவல்துறை விளக்கத்தை ஏற்று கார்த்திக் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

Robotaxi: ஓரே நேரத்தில் அமெரிக்கா, சீனா நிறுவனங்கள் அறிவிப்பு..!

உலகில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் ஆட்டோமொபைல் துறையின் உச்சமாக கருதப்படும் தானியங்கி கார்-ஐ முதலில் வெற்றிகரமாகவும், 100 சதவீத நம்பகத் தன்மை உடனும் மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்த பெருமை டெஸ்லா நிறுவனத்திற்கு உண்டு. இந்த வேளையில் தற்போது ரோபோடாக்சி (Robotaxi) என்ற பெயரில் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனமும், அதேபெயரில் சீனாவின் கூகுள் என அழைக்கப்படும் Baidu நிறுவனமும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் அப்பல்லோ… ரூ.450 கோடிக்கு வாங்கிய மருத்துவமனை! … Read more

அரசுப் பேருந்தில் கூட்ட நெரிசல்; படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த மாணவி தவறிவிழுந்து பலியான சோகம்!

திருச்சுழி அருகே ரெங்கையன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவருடைய மகள் சக்திமாரி (16). பனையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சக்திமாரி தினமும் தனது ஊரிலிருந்து அரசுப் பேருந்தில் பள்ளிக்குச் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை, சக்திமாரி வழக்கம்போல் பள்ளி முடிந்து பனையூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து அரசுப் பேருந்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவர்கள் ஏராளமானோர் படியில் தொங்கியபடி பயணம் செய்தனர். அப்போது பேருந்து … Read more

டிராலி பெட்டியுடன் இருந்த பெண், திறந்து பார்த்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இந்திய மாநில உத்தர பிரதேசத்தில் பெண்ணொருவர் தன்னுடன் வாழ்ந்து வந்த காதலரை கொலை செய்து, பெரிய பெட்டியில் உடலை மறைத்து கொண்டு செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் திலா மோர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பெண்ணொருவர், பெரிய பெட்டி ஒன்றை டிராலியில் வைத்து இழுக்க முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். இதனை கவனித்த ரோந்து பொலிசார், குறித்த பெண்ணை நிறுத்தி பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் முன்னுக்கு பின் … Read more

75-வது சுதந்திர தினம் பிரசாரத்தில் பங்கேற்குமாறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்…

டெல்லி: 75-வது சுதந்திர தினம் – ஹர் கர் திரங்கா  பிரச்சாரத்தில் பரவலாக பங்கேற்குமாறு பல்கலைக்கழகங்களை யுஜிசி அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும்  75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு ஹர் கர் திரங்கா என்ற பெயரில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கல்விக் கூடங்களில் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளதுடன், பொதுமக்கள் 3 நாள் தேசிய கொடியை தங்களது வீடுகளில் ஏற்றி பெருமை சேர்க்க … Read more

அதிமுகவின் முதல் எம்.பி.யான மாயத்தேவர் உடல் நலக்குறைவால் காலமானார்

சென்னை: அதிமுகவின் முதல் எம்.பி.யான மாயத்தேவர்(88) உடல் நலக்குறைவால் சின்னாளப்பட்டியில் காலமாகியுள்ளார். எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி சந்தித்த முதல் இடைத்தேர்தலில் வென்று திண்டுக்கல் எம்.பி. ஆனவர்.