Doctor Vikatan: கோடைக்காலம், அந்தரங்க உறுப்பில் அரிப்பு… பேக்கிங் சோடா உதவுமா?

Doctor Vikatan: எனக்கு கோடைக்காலம் வந்தாலே அந்தரங்க உறுப்புகளில் அரிப்பு ஆரம்பித்துவிடும். பவுடர் போட்டாலும், இருமுறை குளித்தாலும் அந்த அரிப்பு கட்டுப்படுவதில்லை. கூகுளில் தீர்வு தேடியபோது பேக்கிங் சோடா பயன் தரும் என்ற தகவல் கிடைத்தது. அது உண்மையா…. எப்படிப் பயன்படுத்த வேண்டும்? கோடைக்காலத்தில் ஏற்படும் இந்த அரிப்புக்கு என்னதான் தீர்வு? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்  மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் Doctor Vikatan: Stress.. சட்டென மனநிலையை மாற்றும் மாத்திரைகள் உள்ளதா… … Read more

புதிய அனுபவத்தை டொயோட்டா டைசர் வழங்குமா..!

4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள சந்தையில் வந்துள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசரின் முக்கிய சிறப்பம்சங்கள், ஆன்-ரோடு விலை பட்டியல் மற்றும் போட்டியாளர்களை விட எவ்வாறு வேறுபடுகின்றது. டொயோட்டா-சுசூகி கூட்டணியில் வெளியிடப்படுகின்ற ரீபேட்ஜ் என்ஜினியரிங் கார்களில் ஒன்றாக வெளியிடப்பட்டுள்ள டைசர், இந்திய சந்தையில் கிடைக்கின்ற மாருதி சுசூகி ஃபிரான்க்ஸ் மாடலாகும். Toyota Taisor: டிசைன், வசதிகள் மாருதி ஃபிரான்க்ஸ் காரின் அடிப்படையான டிசைனை பின்பற்றி வந்துள்ள டைசர் எஸ்யூவி மாடலில் முன்பக்கத்தில் தேன்கூடு கிரில் போன்ற … Read more

“இந்தியா கூட்டணியை சேர்ந்த பாதிபேர் ஜெயிலில், மீதிபேர் பெயிலில்..!” – விருதுநகரில் ஜே.பி.நட்டா

விருதுநகர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “இந்த பூமி, சனாதனம், பாரம்பரியம் கலாசாரத்தை தாங்கி நிற்கிற பூமி. எத்தனையோ தலைவர்கள், சமுதாய மாற்றத்திற்காக உழைத்து இருக்கக்கூடிய நிலமாக இந்த பூமி விளங்குகிறது. நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் கலாசாரம், தமிழர் பண்பாடு, … Read more

சிக்கிய சிறுத்தை எச்சம்! மயிலாடுதுறையில் 6 நாட்களாக போக்கு காட்டிய சிறுத்தை எங்கே உள்ளது? பின்னணி

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கிட்டத்தட்ட சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மயிலாடுதுறையில் சிறுத்தை இருக்கும் இடம் உத்தேசமாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மயிலாடுதுறையில் 6வது நாளாக பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது. காவிரி, பழைய காவிரி, மஞ்சலாறு நீர்வழி புதர்களில் சிறுத்தை பதுங்கியிருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அங்கே சிறுத்தையின் Source Link

எனக்கும் ரூ. 4 கோடிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை : நயினார் நாகேந்திரன்

நெல்லை ரயிலில் கைப்பற்றப்பட்ட  ரு 4 கோடிக்கும் தமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.  அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் செலவிற்கான பணம் கொண்டு செல்வதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  எனவே நேற்று இரவு 8.35 மணியளவில் எழும்பூரில் இருந்து தாம்பரத்திற்கு ரயில் வந்தபோது அதில் ஏறிய தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் 3 பயணிகள் … Read more

அனைத்து பாஜக வேட்பாளர்கள் இடத்திலும் சோதனை நடத்த ஆர் எஸ் பாரதி புகார்

சென்னை திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தமிழகத்தில் உள்ள அனைத்து பாஜக வேட்பாளர்கள் இடத்திலும் சோதனை நடத்த வேண்டும் என புகார் அளித்துள்ளார் அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் செலவிற்கான பணம் கொண்டு செல்வதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.  எனவே நேற்று இரவு 8.35 மணியளவில் எழும்பூரில் இருந்து தாம்பரத்திற்கு ரயில் வந்தபோது அதில் ஏறிய தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் 3 பயணிகள் கைப்பெட்டிகளில் கட்டுக்கட்டாகப் பணம் வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.  அந்த 3 பேரையும் உடனடியாகப் … Read more

கனிமொழி வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை

தூத்துக்குடி பறக்கும் படை அதிகாரிகள் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழியின் வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தி உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்கும் வகையில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 54 பறக்கும் படை குழுக்கள், 54 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 6 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி தொகுதி முழுவதும் இக்குழுவினர் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சோதனையின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி அருகே … Read more

அன்று பூதக்கண்ணாடி வச்சு பாருங்க எனக் கூறிய அண்ணாமலை.. இப்போ “என் பின்னாடியே ஏன் வர்றீங்க” என கோபம்!

கோவை: மீடியாக்காரங்க பூதக்கண்ணாடி போட்டு என் பிரச்சாரத்தை கவனிங்க என கோவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் கூறிய அண்ணாமலை, தற்போது, “ஏன் என் பின்னாடியே வந்து பிரச்சாரத்தை டிஸ்டர்ப் பண்றீங்க” என செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக Source Link