Wole Soyinka: நைஜீரிய விசிறியின் காற்று… வோலே சோயின்கா | கடல் தாண்டிய சொற்கள் – பகுதி 16
நிலா காய்ந்துகொண்டிருந்த வசந்தகால இரவொன்றில் கடலோரச் சாலையில் நடந்து கொண்டிருந்தேன். வரிசையாகக் கப்பல்கள் சமுத்திரத்தில் தொலைவில் மிதந்துக்கொண்டிருக்கின்றன. வேடிக்கை பார்த்தபடியே, முட்டை வடிவ பாறையொன்றில் வானத்தை அண்ணாந்துப் பார்த்தபடி படுத்திருந்தேன். இடதுபுற அடுக்குமாடிக் குடியிருப்புகளின் உச்சிகளில் எரியும் விளக்கொளிகள் வெளிறிய நீலப் பின்னனியோடு வெளிச்சத்தைச் சிந்திக்கொண்டிருந்தன. எதிர்திசையில் அதிவேகமாக விரைவுச்சாலையில் ஓடிக்கொண்டிருந்தது நகரம். என்னருகில் இரு நைஜீரியர் வந்து அமர்ந்திருந்தனர். வோலே சோயின்கா இடையிடையே கவிதை, கவிதையெனக் காதில் விழ, உரக்கச் சிரித்துக்கொண்டனர். இடையிடையே ஓகாரா, அச்சிபே, … Read more