கொரோனாவுக்கு உலக அளவில் 6,242,871 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.42 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,242,871 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 509,465,910 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 461,998,876 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 42,483 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அயோத்தி அறக்கட்டளை தலைவர் கவலைக்கிடம் | Dinamalar

லக்னோ: அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிருத்ய கோபால் தாஸ், உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில் ஹிந்துக் கடவுள் ராமருக்கு கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. கோவில் கட்டுவதற்காக மகந்த் நிருத்ய கோபால் தாஸ், ௮௪, தலைமையில், 15 உறுப்பினர்கள் அடங்கிய ‘ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்தது. இந்த … Read more

லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – பொது மக்கள், வீரர்கள் தஞ்சம் அடைந்துள்ள ஆலையை தாக்கும் முயற்சியில் ரஷிய ராணுவம்

24.4.22 18.30: துருக்கி அதிபர் எர்டோகன் இன்று உக்ரைன் அதிபரை ஜெலன்ஸ்கியை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது, உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது அனைத்து உதவிகளையும் செய்ய துருக்கி தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். 18.00:  மரியுபோலில் மக்கள் தஞ்சம் அடைந்திருக்கும் எஃகு ஆலையை சுற்றி வளைத்துள்ள ரஷிய படைகள், ஆலையை தரை வழியாகத் தாக்க முயற்சிப்பதாக உக்ரைன் அதிபரின் ஆலோசகர் தெரிவித்துள்ளார். 17.30:  ஈஸ்டரை முன்னிட்டு உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என … Read more

1,400 மின்சார ஸ்கூட்டர்களை வாபஸ் பெறுகிறது ஓலா| Dinamalar

புதுடில்லி: மின்சார வாகனங்கள் தீப்பற்றி எரியும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், 1,441 மின்சார ‘ஸ்கூட்டர்’களை திரும்பப் பெறுவதாக, ‘ஓலா எலக்ட்ரிக்’ நிறுவனம் அறிவித்துள்ளது. காற்று மாசை குறைக்கும் வகையில், மின்சார வாகனங்கள் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகின்றது. பல்வேறு நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மின்சார வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரியும் சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகின்றன. இதனால் மின்சார வாகனங்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்துள்ளது. … Read more

சூடானில் இரு தரப்பினருக்கு இடையே பயங்கர மோதல் – 168 பேர் பலி

கெய்ரோ: வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நாட்டில் 2003 ஆம் ஆண்டு முதல் டர்பர் மாகாணத்தை மையமாக கொண்டு உள்நாட்டு போர் நிலவி வந்தது. டர்பர் மாகாணத்தின் பெரும் பகுதிகளை தங்கள் வசம் வைத்துள்ள சூடான் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், சூடானின் மேற்கு பகுதியில் உள்ள டர்பர் மாகாணத்தின் தலைநகர் ஜெனீனாவில் வசிக்கும் பழங்குடியினரில் இரு பிரிவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.  இரு தரப்பையும் சேர்ந்த தனி நபர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு … Read more

செய்திகள் சில வரிகளில்..| Dinamalar

வெடிபொருட்கள் அழிப்பு சண்டிகர்: யூனியன் பிரதேசமான சண்டிகரில் உள்ள புரைல் சிறை சுற்றுச்சுவர் அருகே நேற்று முன்தினம் ஒரு சாக்குப்பை கிடந்தது. போலீசார் ஆய்வில் சாக்கில் இருந்த பெட்டிக்குள் ‘டெட்டனேட்டர்கள்’ உள்ளிட்ட வெடிபொருட்கள் இருந்தன. அவற்றை கைப்பற்றிய தேசிய பாதுகாப்பு படையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்ததுடன் வெடிபொருட்களை பாதுகாப்பான பகுதியில் நேற்று அழித்தனர். பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் பஹூ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை அறிந்த பாதுகாப்பு … Read more

ஜனாதிபதியாக மேக்ரான் தெரிவு… பிரான்சில் வெடித்த கலவரம்: பொலிசார் குவிப்பு

பிரான்ஸ் ஜனாதிபதியாக இமானுவல் மேக்ரான் மீண்டும் தெரிவான நிலையில் முக்கிய நகரங்களில் கலவரம் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதியாக மீண்டும் இமானுவல் மேக்ரான் தெரிவாகியுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மரீன் லீ பென் 41.8% வாக்குகள் பெற்று வெற்றிவாய்ப்பை இழந்துள்ளார். இந்த நிலையில், மத்திய பாரிஸில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கலவரத் தடுப்புப் பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கூடியிருந்த பெரும்பாலான இளைஞர்களின் கூட்டத்தை கலைக்க காவல்துறை முயன்றதாகவும் … Read more

9 மணி நேரப் போராட்டம் – தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை மீட்ட ரெயில்வே ஊழியர்கள்

சென்னை: சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் நேற்று மாலை மின்சார ரெயில் விபத்துக்குள்ளானது. பணிமனையில் இருந்து வந்த மின்சார ரெயில், கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதுடன், முதலாவது நடைமேடையில் ஏறி அங்கிருந்த கடைகள் மீது மோதி நின்றது.  தகவலறிந்து தீயணைப்பு துறையினர் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணிகளைத் தொடங்கினர். ரெயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அதிர்ஷ்டவசமாக பணிமனையில் இருந்து வந்த ரெயில் என்பதால் அதில் பயணிகள் யாரும் இல்லை. … Read more

ஒன்றிணைந்து செயல்படுவோம் | Dinamalar

புதுடில்லி : ‘இந்தியாவுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் இடையில் பொதுவான பல அம்சங்கள் உள்ளன. நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவதன் வாயிலாக மக்களுக்கும், பருவநிலைக்கும், பூமிக்கும் பல நன்மைகளை செய்ய முடியும்’ என ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் தெரிவித்தார். ஐரோப்பிய யூனியனின் தலைவராக உர்சுலா வான் டெர் லெயன் பதவி ஏற்ற பின் முதல்முறையாக இந்தியா வந்துள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை அவர் சந்தித்து பேச உள்ளார். இந்நிலையில் … Read more

மரண திகதியை ஓராண்டுக்கு முன்னரே குறிப்பிட்டு… தீக்குளித்த பிரபலம்: வெளியான புகைப்படம்

அமெரிக்காவில் பருவகால செயற்பாட்டாளர் ஒருவர் தனது மரண திகதியை ஓராண்டுக்கு முன்னரே குறிப்பிட்டு தீக்குளித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள உச்ச நீதிமன்ற வளாகத்திலேயே பூமி நாளான கடந்த 22ம் திகதி குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கொலராடோ பகுதியை சேர்ந்த 50 வயதான Wynn Bruce என்ற பருவகால செயற்பாட்டாளரே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டவர். சம்பவத்தன்று மாலை உள்ளூர் நேரப்படி சுமார் 6.30 மணியளவில் குறித்த நபர் தன் மீது … Read more