ஜனாதிபதியாக மேக்ரான் தெரிவு… பிரான்சில் வெடித்த கலவரம்: பொலிசார் குவிப்பு

பிரான்ஸ் ஜனாதிபதியாக இமானுவல் மேக்ரான் மீண்டும் தெரிவான நிலையில் முக்கிய நகரங்களில் கலவரம் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதியாக மீண்டும் இமானுவல் மேக்ரான் தெரிவாகியுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மரீன் லீ பென் 41.8% வாக்குகள் பெற்று வெற்றிவாய்ப்பை இழந்துள்ளார். இந்த நிலையில், மத்திய பாரிஸில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கலவரத் தடுப்புப் பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கூடியிருந்த பெரும்பாலான இளைஞர்களின் கூட்டத்தை கலைக்க காவல்துறை முயன்றதாகவும் … Read more

9 மணி நேரப் போராட்டம் – தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை மீட்ட ரெயில்வே ஊழியர்கள்

சென்னை: சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் நேற்று மாலை மின்சார ரெயில் விபத்துக்குள்ளானது. பணிமனையில் இருந்து வந்த மின்சார ரெயில், கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதுடன், முதலாவது நடைமேடையில் ஏறி அங்கிருந்த கடைகள் மீது மோதி நின்றது.  தகவலறிந்து தீயணைப்பு துறையினர் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணிகளைத் தொடங்கினர். ரெயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அதிர்ஷ்டவசமாக பணிமனையில் இருந்து வந்த ரெயில் என்பதால் அதில் பயணிகள் யாரும் இல்லை. … Read more

ஒன்றிணைந்து செயல்படுவோம் | Dinamalar

புதுடில்லி : ‘இந்தியாவுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் இடையில் பொதுவான பல அம்சங்கள் உள்ளன. நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவதன் வாயிலாக மக்களுக்கும், பருவநிலைக்கும், பூமிக்கும் பல நன்மைகளை செய்ய முடியும்’ என ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் தெரிவித்தார். ஐரோப்பிய யூனியனின் தலைவராக உர்சுலா வான் டெர் லெயன் பதவி ஏற்ற பின் முதல்முறையாக இந்தியா வந்துள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை அவர் சந்தித்து பேச உள்ளார். இந்நிலையில் … Read more

மரண திகதியை ஓராண்டுக்கு முன்னரே குறிப்பிட்டு… தீக்குளித்த பிரபலம்: வெளியான புகைப்படம்

அமெரிக்காவில் பருவகால செயற்பாட்டாளர் ஒருவர் தனது மரண திகதியை ஓராண்டுக்கு முன்னரே குறிப்பிட்டு தீக்குளித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள உச்ச நீதிமன்ற வளாகத்திலேயே பூமி நாளான கடந்த 22ம் திகதி குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கொலராடோ பகுதியை சேர்ந்த 50 வயதான Wynn Bruce என்ற பருவகால செயற்பாட்டாளரே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டவர். சம்பவத்தன்று மாலை உள்ளூர் நேரப்படி சுமார் 6.30 மணியளவில் குறித்த நபர் தன் மீது … Read more

ஐபிஎல் போட்டியில் அதிக சதமடித்த இந்தியர் – ரோகித் சர்மா சாதனையை சமன் செய்த கே.எல்.ராகுல்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல் 62 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 103 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.  அடுத்து இறங்கிய மும்பை … Read more

கே.எல்.ராகுல், குருணால் பாண்ட்யா அசத்தல்: மும்பையை மொத்தமாக நொறுக்கிய லக்னோ

கே.எல்.ராகுல் மற்றும் குருணால் பாண்ட்யா ஆகியோரின் அசத்தல் ஆட்டத்தால் லக்னோ அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி லக்னோ அணி முதலில் துடுப்பாட்டம் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக அணித்தலைவர் ராகுல் மற்றும் டி காக் களமிறங்கினர். பும்ரா பந்துவீச்சில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து டி காக் 9 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய மனிஷ் பாண்டே … Read more

ஜப்பானில் சோகம் – சுற்றுலா படகு மூழ்கிய விபத்தில் 10 பேர் உடல்கள் மீட்பு

டோக்கியோ: ஜப்பானில்  24 பயணிகள், 2 ஊழியர்களுடன் சென்ற  சுற்றுலாப் படகு நேற்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. ஹொகைடோவின் வடக்குத் தீவில் உள்ள ஷிரெடோகோ தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரை பகுதியில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் படகுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. தகவலறிந்து வ்ரைந்து சென்ற கடலோர காவல் படையினர் 8 ரோந்துப் படகுகளில் அப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஜப்பானில் சுற்றுலா படகு மூழ்கிய விபத்தில் நேற்று 10 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு … Read more

LSG v MI: `இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!' மீண்டும் சொதப்பிய மும்பை; மீண்டும் சதமடித்த ராகுல்!

`தெய்வத்துக்கே மாறு வேஷமா… சாம்பியன்ஸ் இப்போ டேபிள் பாட்டமா!’ என சோக இசையுடன்தான் இந்த சீசனைக் கடந்து கொண்டிருக்கிறது மும்பை இந்தியன்ஸ். முதல் 7 போட்டிகளையும் தோற்ற அணி என்ற மோசமான சாதனையுடன், `வித விதமாகத் தோற்பது எப்படி?’ என ஆன்லைன் கிளாஸ் எடுக்க அனைத்து தகுதிகளுடனும் இன்று லக்னோவை சந்தித்தது மும்பை. டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்தது. கடந்த போட்டியில் தோற்றிருந்தாலும், மற்ற போட்டிகளை ஒப்பிடுகையில் சி.எஸ்.கேவுடனான தோல்வி கௌரவமான தோல்வி. அதனால், அதே … Read more

20 ஆண்டுகளில் முதன்முறை… மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய இமானுவல் மேக்ரான்

பிரான்ஸ் ஜனாதிபதியாக மீண்டும் இமானுவல் மேக்ரான் பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரான்சின் 11வது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட இமானுவல் மேக்ரான் முதற்கட்ட தகவலின் அடிப்படையில் 57.6% வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மேக்ரானை எதிர்த்து போட்டியிட்ட மரீன் லீ பென் 42.40% வாக்குகளைப் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டில் மேக்ரான் 66.1% வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருந்தார். தற்போது இமானுவல் மேக்ரான் மீண்டும் ஆட்சியை … Read more