தேர்தல் வாக்குறுதிகளில் தோல்வி – மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்துவிட்டது,  இதற்காக  மக்களிடம் தமிழக அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும்”  பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலின்  திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 40 திட்டங்கள் அரசின் பரிசீலனையில் இருக்கின்றன. மொத்தம் 404 திட்டங்கள் தற்போது செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன என்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், கோவி செழியன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,  … Read more

எனது மரணத்துக்கு நீயே பொறுப்பு: காதலனுக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை

திருவனந்தபுரம் கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், மொடக்கல்லூர் அத்தோலி பகுதியைச் சேர்ந்தவர் ஆயிஷா ரஷா (வயது 21). இவர் மங்களூரில் உள்ள தனியார் பிசியோதெரபி கல்லூரியில் 3ம் ஆண்டு மாணவி ஆவார். இவருக்கு வெங்கேரி பன்னடிகல் பகுதியை சேர்ந்த பஷீர்தீன் முகம்மது என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமாகியுள்ளார். உடற்பயிற்சி மாஸ்டரான அவரும், மாணவியும் காதலித்து வந்துள்ளனர். பஷீர்தீன் உடற்பயிற்சி கூடம் ஒன்றில் பணியாற்றி வந்ததால் கோழிக்கோடு எரஞ்சிபாலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். அந்த … Read more

ஜிஎஸ்டி வரி குறைப்பு செப்.22 முதல் அமல் – நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில், அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். இந்த கூட்டத்தில் 2 அடுக்குகளாக ஜிஎஸ்டி வரி வரம்பை குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அதன்படி இனி 5% மற்றும் 18% என மட்டுமே ஜிஎஸ்டி வரி அடுக்குகள் இருக்கும் என அவர் தெரிவித்தார். அதேநேரத்தில் … Read more

ஆப்கானிஸ்தானில்  நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1400ஐ கடந்தது… தொடரும் மீட்பு பணி…

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,411ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு இந்திய அரசு நேசக்கரம் நீட்டி,  நிவாரண பொருட்களை அனுப்பி உள்ளது. ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாநிலத்தை மையமாகக் கொண்டு, பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் நேற்று அதிகாலை (செப்டம்பர் 2ந்தேதி)  ரிக்டர் அளவில் 6.3 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பலமுறை நில அதிர்வுகளும் … Read more

டெல்லி யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: தாழ்வான பகுதிகளை சூழ்ந்த தண்ணீர்

புதுடெல்லி, டெல்லி, அரியானாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் யமுனை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 1.62 லட்சம் கனஅடியும், வஜிராபாத் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 1.38 லட்சம் கனஅடியும் திறந்து விடப்பட்டன. இதன் காரணமாக டெல்லியின் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கரையோரத்தின் பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் பாதுகாப்பான இடத்துக்கு இடம் பெயர்ந்தனர். … Read more

Fahadh Faasil: நடிகர் பஹத் பாசில் வாங்கியிருக்கும் `Ferrari Purosangue' – மதிப்பு என்ன தெரியுமா?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருப்பது போல சிலருக்கு கார் கலெக்‌ஷன் பழக்கம் இருக்கும். இந்தியாவில் கார் கலெக்‌ஷன் செய்பவர்களின் பட்டியலை எடுத்தால் அதில் மலையாள நடிகர் ஃபஹத் பாசிலை தவிர்க்கவே முடியாது. விலையுயர்ந்த கார்களை வாங்கி அழகுபார்ப்பதில் அவருக்கு அலாதி பிரியம் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே அவரிடம் லம்போர்கினி, போர்ஷே, மெர்சிடிஸ்-பென்ஸ் G63 AMG, ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி, எல்டபிள்யூபி, உருஸ், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90 V8, போர்ஷே 911 கரேரா எஸ் உள்ளிட்டப் பல … Read more

இங்கிலாந்தில் கால் பதித்தபோது, ​​நான் அரவணைப்புடனும் பாசத்துடனும் அரவணைக்கப்பட்டேன்! முதல்வர் ஸ்டாலின் பதிவு…

லண்டன்:  இங்கிலாந்தில் கால் பதித்தபோது, ​​நான் அரவணைப்புடனும் பாசத்துடனும் அரவணைக்கப்பட்டேன் என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். ஜெர்மனி பயணத்தை முடித்துவிட்டு, இன்று காலை இங்கிலாந்து சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ள பதிவில், #இங்கிலாந்தில் கால் பதித்தபோது, ​​நான் அரவணைப்புடனும் பாசத்துடனும் அரவணைக்கப்பட்டேன், தொலைதூரக் கரைகளைக் கடந்து வீட்டின் நறுமணத்தை எடுத்துச் சென்ற வரவேற்பு என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டள்ளது. லண்டனில் … Read more

சத்தீஷ்கார்: மத ஊர்வலத்தில் புகுந்த கார் – 3 பேர் பலி; 22 பேர் காயம்

ஜாஷ்பூர், நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி சமீபத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து விநாயகர் சிலைகளை நீரில் கரைக்கும் சடங்குகளும் நடந்து வருகின்றன. சத்தீஷ்காரின் ஜாஷ்பூர் மாவட்டத்தில் ஜுருதந்த் என்ற கிராமத்தில் விநாயகர் சிலைகளை நீரில் கரைப்பதற்காக உள்ளூரை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலம் சென்றனர். அப்போது, சொகுசு கார் ஒன்று திடீரென அந்த கூட்டத்திற்குள் புகுந்தது. இதுபற்றி ஜாஷ்பூர் மாவட்ட மூத்த போலீஸ் சூப்பிரெண்டு சசி மோகன் கூறும்போது, விபின் பிரஜாபதி (வயது 17), அரவிந்த் … Read more

க்ரெட்டா எலக்ட்ரிக் ரேஞ்ச் அதிகரித்த ஹூண்டாய் மோட்டார்

ஹூண்டாய் இந்தியாவின் க்ரெட்டா எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலில் Excellence 42 kWh, Executive Tech 42 kWh மற்றும் Executive (O) 51.4 kWh என மூன்று விதமான வேரியண்டடை சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ரூ.18.02 லட்சம் முதல் ரூ.23.67 லட்சம் வரை எக்ஸ்-ஷோரூம் விலை அமைந்துள்ளது. க்ரெட்டாவில் 42Kwh மற்றும் 51.4Kwh என இரு விதமான பேட்டரியை கொண்டுள்ள நிலையில் முன்பாக 42kwh பேட்டரி மாடல் முன்பாக 390கிமீ சான்றிதழ் பெறப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது 420 கிமீ … Read more

அனாதையாக சுற்றி திரியும் விலங்கு தெருநாய்! – எல்லையும் தீர்வும் | #Straydogissue

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் தெரு நாய்கள் பற்றி தமிழகத்தில் கடுமையான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் என்னுடைய பார்வை… இந்த உலகத்தில் பிறந்த அத்தனை உயிரினங்களும் வாழ்வதற்கு உரிமை உண்டு.  ஒவ்வொன்றும் ஒவ்வொரு பகுதியில் வாழ்கிறது. மனிதன் உள்பட அனைத்து உயிர்களுமே “இது எங்களுடைய ஏரியா” என்று தீர்மானம் … Read more