தயார் நிலையில் புதிய ரஷ்ய படைகள்! வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்கள்

உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்யா புதிதாக தனது படைகளை நிறுத்திவைத்துள்ளதாக சொல்லப்படும் செயற்கைக்கோள் புகைப்படங்களை அமெரிக்க நிறுவனம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட Maxar டெக்னாலஜிஸ் வெளியிட்ட படங்கள், பல வாரங்களாக ரஷ்யப் படைகளின் குவிப்பைக் கண்காணித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள ரஷ்யாவின் நிரந்தர இராணுவ தளங்களிலிருந்து பல கவச உபகரணங்கள் மற்றும் துருப்புக்கள் புதிய களத்தில் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன என்று Maxar புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. Maxar நிறுவனத்தின் … Read more

பாஜக அரசு மக்களுக்குச் சேவை செய்வதை மறந்து விட்டது : பிரியங்கா காந்தி

ரேபரேலி பாஜக அரசு மக்களுக்குச் சேவை  செய்வதை மறந்து விட்டு பெரிய தொழிலதிபர்களுக்காகச் செயல்படுவதாகக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். தற்போது உத்தரப்பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்து வருகிறது.  மொத்தம் உள்ள 7 கட்ட தேர்தல்களில் இதுவரை 3 கட்டம் முடிந்துள்ளது.  மாநிலம் எங்கும் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  அவ்வகையில் ரேபரேலி ஜகத்பூர் பகுதியில் காங்கிரஸ் சார்பில் நடந்த பேரணியில் அக்கட்சியின் பொது செயலர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – 7 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவி இடங்களுக்கு நேற்று முன்தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் 268 மையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன.    இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, மதுரை, அரியலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மொத்தம்  5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச் சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு நடைபெறும் என்று மாநில … Read more

இந்திய கடற்படை கப்பல்களை குடியரசு தலைவர் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்!!

டெல்லி : இந்திய கடற்படை கப்பல்களை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நேரில் ஆய்வு செய்கிறார். இந்திய கடலோர காவல்படை, இந்திய வர்த்தக கப்பல்கள் உட்பட 60 கப்பல்கள் இதில் பங்கேற்க உள்ளனர். கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் விமானங்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றன.

என்னை வாழ விடுங்கள்; கடத்தல் ஸ்வப்னா கெஞ்சல்| Dinamalar

திருவனந்தபுரம்-”என்னை வாழ விடுங்கள்,” என, தங்கக் கடத்தல்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரளவில் மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.திருவனந்தபுரத்தில் உள்ள யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தில் அதிகாரியாக இருந்தவர் ஸ்வப்னா சுரேஷ், 40. கடந்த, 2020ல் எமிரேட்ஸில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 16 மாத சிறை வாசத்துக்குப் பின் சமீபத்தில் … Read more

விமானங்கள் ரத்து., ஜேர்மானியர்கள் உடனடியாக நாடு திரும்ப வலியுறுத்தல்!

ஜேர்மன் அரசாங்கம் தனது குடிமக்களை உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் லுஃப்தான்சா திங்கள் முதல் உக்ரைனுக்கு செல்லும் விமானங்களை ஓரளவு நிறுத்த திட்டமிட்டுள்ளது. “எந்த நேரத்திலும் ஒரு இராணுவ மோதல் நடப்பது சாத்தியம்… நல்ல நேரத்திலேயே நாட்டை விட்டு வெளியேறுங்கள்” என்று ஜேர்மன் மத்திய வெளியுறவு அலுவலகம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தனது பாதுகாப்பு அறிவுறுத்தலில் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஜேர்மனியின் மிகப்பெரிய விமான நிறுவனமான லுஃப்தான்சா, பிப்ரவரி இறுதி வரை கியேவ் மற்றும் … Read more

காய்கறிகள் வரத்து அதிகரிப்பு : கோயம்பேட்டில் கடும் விலை சரிவு

சென்னை காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் கோயம்பேடு அங்காடியில் விலை மிகவும் குறைந்துள்ளது. தினமும் 450 முதல் 500 லாரிகளில் கோயம்பேடு அங்காடிக்குக் காய்கறிகள் வருவது வழக்கம். தற்போது இது அதிகரித்து இன்று காலை 600 வாகனங்களில் காய்கறிகள் வந்து குவிந்தன. இதனால் கோயம்பேடு அங்காடியில் காய்கறிகளின் விலைகள் மிகவும் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்ற நவீன தக்காளி இன்று விலை 15 ரூபாய்க்கு விற்றது. மேலும் 20 ரூபாய்க்கு … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு

சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு முடிந்து அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களை பெட்டிக்குள் வைத்து மூடி சீல் வைத்தனர்.  அதன்பின் அவை போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. மின்னணு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 5 வார்டுகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சியில் வார்டு எண் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 59,05,835 பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59.05 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 59,05,835 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 42,47,93,352 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 35,02,82,600 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 81,494 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.