SIR குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளி: 2வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்…

டெல்லி: நாடாளுமன்றத்தில் வாக்காளர் தீவிர சீர்திருத்தம் (SIR) குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் இன்று 2வது நாளாக முடங்கி உள்ளது. மதியம் 2மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நேற்று (டிசம்பர் 1) தொடங்கியது.  இந்த கூட்டத்தொடர் 19 அமர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்நேற்று எதிர்க்கட்சிகள் SIR குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை பாராளுமன்றம் … Read more

பப்ஜி கேமுக்கு அடிமையான கணவன்; வேலை தேடச் சொன்ன மனைவியை கொன்றுவிட்டு தலைமறைவு; ம.பி அதிர்ச்சி¡

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், வேலைக்கு செல்லாமல் பப்ஜி (PUBG) விளையாட்டுக்கு அடிமையான கணவனை வேலை தேடுமாறு கூறிய மனைவியைக் கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, கொலை செய்த ரஞ்சித் படேல் என்பவருக்கும் கொல்லப்பட்ட நேஹா படேல் (24 வயது) என்பவருக்கும் இடையே கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. நேஹாவின் சகோதரரின் கூற்றுப்படி ரஞ்சித் சமீபத்தில் வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். … Read more

டிட்வா புயலுக்கு 4 பேர் பலி; பயிர் ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு! அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் டிட்வா புயலுக்கு 4 பேர் பலியாக உள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்,  கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக  தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்  கூறியதாவது, டிட்வா புயல் காரணமாக பெய்த மழை காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் 85,521.76 ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. நீரில் மூழ்கி சேதமடைந்த விளை … Read more

543 கிமீ ரேஞ்ச்., மாருதி சுசூகியின் e Vitara எஸ்யூவி வெளியானது | Automobile Tamilan

மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் மாடலாக வந்துள்ள புதிய இ விட்டாரா எஸ்யூவி 49kwh மற்றும் 61kwh என இரு விதமான பேட்டரி ஆப்ஷனுடன் வரவுள்ள நிலையில் டாப் மாடல் ரேஞ்ச் ARAI சான்றிதழ் படி 543 கிமீ வரும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. Maruti Suzuki E Vitara விற்பனைக்கு ஜனவரி 2026 முதல் வாரத்தில் விலை அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன்பாக புக்கிங் துவங்கப்பலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அறிமுகத்திற்கு முன்பாக மாருதி … Read more

நாளை மகாதீபம்: திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நாளை கார்த்திகை மகா தீபம் ஏற்பட்ட உள்ள நிலையில், அங்கு  பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்  குறித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 3-ந்தேதி (புதன்கிழமை) ஏற்றப்படுகிறது.  நாளை  அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் … Read more

வலுவிழந்த டிட்வா – தொடர் கனமழை: சென்னை, திருவள்ளுவர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை…

சென்னை: தமிழ்நாட்டை மிரட்டி வந்த டிட்வா புயல் வலுவிழந்த நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டமாக சென்னை அருகே நிலைகொண்டுள்ளதால், சென்னை உள்பட சுற்றுவட்டார மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேஙகி இருப்பதுடன், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை  பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை 2வது நாளாக  விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவள்ளுர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ‘டிட்வா‘ புயல், … Read more

விடுகதை போட்டி! – சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் டீச்சர் மாணவர்களைப் பார்த்து, “பசங்களா, சத்தம் போடாதீங்க… எல்லாரும் இங்க கவனிங்க! டேய் விஜய்குமார், உனக்கு மட்டும் தனியா சொல்லணுமா? இங்க கவனிக்க மாட்டியா?” என்று அதட்டிவிட்டு சாக் பீஸை எடுத்து கரும்பலகையில் “சமூக அறிவியல் – எட்டு: காலணி ஆதிக்கம்” என எழுதியது … Read more

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதியை எதிர்த்து அறநிலையத்துறை மேல்முறையீடு… மதுரையில் பரபரப்பு…

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து கோவில் நிர்வாக அதிகாரி சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.  இது மதுரை உள்பட தென்மாவட்ட மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக அரசின் நடவடிக்கைக்கு இந்து முன்னணி, பாஜக, முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனால் மதுரை யில் பரபரப்பு நிலவி வருகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு, … Read more