மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி: காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றம்
புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை ஏகமனதாக தேர்வு செய்து காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனை கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் உறுதிப்படுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் நீட்டிக்கப்பட்ட செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம், அம்பிகா சோனி, பிரியங்கா காந்தி, ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். … Read more