பாஜகவில் தேவகவுடா கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு: பிரஜ்வல் ரேவண்ணா தகவல்

கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா தெரிவித்தார். கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதில் மண்டியா, கோலார், ஹாசன், தும்கூர், பெங்களூரு ஊரகம் ஆகிய 5 தொகுதிகளை மஜத கேட்டதாக தெரிகிறது. அதனை ஏற்க மறுத்த பாஜக மேலிடம், 2 தொகுதிகளை தருவதாக கூறியதாக செய்திகள் வெளியாகின. இதனால் … Read more

Arvind Kejriwal : ஜெயிலில் இருந்து கெஜ்ரிவால் போட்ட முதல் உத்தரவு… என்ன தெரியுமா?

Arvind Kejriwal First Order From Jail : அமலாக்கத்துறை சிறையில் இருந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் குறிப்பின் மூலம் முதல் உத்தரவை அமைச்சருக்கு அனுப்பி உள்ளார். 

ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 7 மசோதாக்கள்: உச்ச நீதிமன்றம் தலையிட கேரள மாநில அரசு மனு

புதுடெல்லி: கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிஅரசுக்கும் மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் கேரள சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள 7 மசோதாக்கள் நிலுவையில்உள்ளன. அவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகிறார் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் புகார் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கோரி நேற்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு … Read more

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கேஜ்ரிவாலுக்கு எதிராக அப்ரூவராக மாறுவேன்: சுகேஷ் சந்திரசேகர் தகவல்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதாகி உள்ளமுதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக அப்ரூவராக மாற சுகேஷ் சந்திரசேகர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ,அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 21-ம்தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். வரும் 28-ம் தேதி வரை … Read more

சீனாவில் பதுங்கி இருந்த மும்பை நிழல் உலக தாதாவை இந்தியா அழைத்து வந்த போலீஸ்: குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை

மும்பை: இந்தியாவில் கொலை, கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்டவை தொடர்பான 8 குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் பிரசாத் புஜாரி என்கிற சுபாஷ் விட்டல் புஜாரி. மும்பை நிழல் உலக தாதாக்களான குமார் பிள்ளை மற்றும் சோட்டா ராஜனின் கூட்டாளியாக ஒருகாலத்தில் இருந்தார். இந்நிலையில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் நகரில்பிரசாத் புஜாரி பதுங்கி இருப்பதாக சர்வதேச போலீஸ் இன்டர்போலுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரியில் துப்பு கிடைத்தது. சீன பெண்ணை திருமணம் செய்து சீனாவின் ஷென்சன் … Read more

லஞ்ச வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

கொல்கத்தா: நாடாளுமன்றத்தில் அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக டிஎம்சி முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவின் வீட்டில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது. மஹுவா மொய்த்ராவுடன் தொடர்புடைய கொல்கத்தாவில் உள்ள வேறு இடங்களிலும் சிபிஐ சோதனை நடத்தியது. லோக்பால் ஆணைய உத்தரவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேற்கு வங்கம் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவாமொய்த்ரா. இவர் அதானி குழுமம் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் … Read more

பினராயி விஜயனுக்கும் கேஜ்ரிவால் நிலை ஏற்பட்டால்..? – கேரள மார்க்சிஸ்ட் ‘அதிரடி’ பதில்

திருவனந்தபுரம்: டெல்லி முதல்வரைப் போல கேரள முதல்வர் பினராய் விஜயனும் மத்திய அமைப்புகளின் நடவடிக்கைக்கு ஆளாகலாம் என்ற எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் குறித்து பயமில்லை என்று கேரளாவின் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் தெரிவித்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டு, அமலாக்கத் துறை காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளது கேரளாவிலும் எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி முதல்வர் போல கேரள முதல்வரும் மத்திய விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. இது குறித்த கேள்விக்கு … Read more

கேஜ்ரிவால் கைது விவகாரம்: ஜெர்மனியின் கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஜெர்மனி வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறிய கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த வியாழக்கிழமை கைது செய்தது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கேஜ்ரிவால் கைதுக்கு கண்டனம் தெரிவித்து … Read more

வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக 3-வது முறையாக களமிறங்கும் காங்கிரஸின் அஜய் ராய்!

புதுடெல்லி: மக்களவை தேர்தல் 2024க்கான நான்காவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில் வாரணாசி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அஜய் ராஜ், மூன்றாவது முறையாக பிரதமர் மோடியை எதிர்த்து களம் காண்கிறார். நீண்ட இழுபறிக்குப் பிறகு மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கான மக்களவை தொகுதி வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய நான்காவது பட்டியலை காங்கிரஸ் தலைமை இன்று வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தின் ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதே போல உத்தர … Read more

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில் போட்டி – தமிழக காங். 7 வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுடெல்லி: மக்களவை தேர்தல் 2024க்கான நான்காவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம், திருவள்ளூர் தொகுதியில் சசிகாந்த் செந்தில் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். அகில இந்திய காங்கிரஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள இந்த 4வது பட்டியலில், மொத்தம் 45 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் தமிழகத்தில் ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. திருவள்ளூர் (தனி) தொகுதியில் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் கே.கோபிநாத், கரூரில் ஜோதிமணி, கடலூரில் எம்.கே.விஷ்ணு பிரசாத், சிவகங்கையில் கார்த்தி … Read more