ஒரு கிராமத்திற்காக 12 கிராமங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்த இந்தியா – காரணம் என்ன?

Historic Village Husainiwala : சுதந்திரத்திற்கு பின் பிரிவினையின் போது இந்தியா 12 கிராமங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்து, இந்த ஒரே ஒரு கிராமத்தை மட்டும் பெற்றதாம். அந்தளவிற்கு அந்த கிராமத்தில் என்ன சிறப்பு என்பதை இதில் காணலாம்.

அமலாக்கத் துறை விசாரணை, கைதுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கேஜ்ரிவால்!

புதுடெல்லி: தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், அமலாக்கத் துறை விசாரணைக்கு அனுமதி வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவித்த கேஜ்ரிவாலின் வழக்கறிஞர்கள் குழு, “டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு விசாரணை நீதிமன்றம் அனுமதி வழங்கியதும் சட்டவிரோதமானவை. அவர் உடனடியாக காவலில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். டெல்லி உயர் … Read more

மதுபான ஊழல் வழக்கு… கடந்து வந்த பாதை… முக்கிய கைதுகள் குறித்த விபரம்!

டெல்லி மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் (ED) வியாழக்கிழமை கைது செய்தது. இந்த மோசடி வழக்கு குறித்தும், அது தொடர்பான கைதுகள் குறித்தும் முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

“விவசாயிகள் வருவாய் எங்கே இரட்டிப்பானது?” – மோடிக்கு சரத் பவார் சரமாரி கேள்வி

புனே: விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் என்ற வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி (எஸ்பி) தலைவர் சரத் பவார் குற்றம்சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏப்ரல் 19-ம் தேதியில் தொடங்கி மே 20-ம் தேதிக்குள் மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகா விகாஸ் அகாதி சார்பில் பாரமதி மக்களவைத் … Read more

Nurves Care: மூளை ஒழுங்க வேலை செய்ய தேவையான ஊட்டச்சத்துக்கள்! உங்க உணவில் இதெல்லாம் இருக்கா?

Vitamins For Nerves Health : நமது நரம்பு மண்டலம் பலவீனமானதாக இருந்தால், உடலால் சிக்னல்களை சரியாக அடையாளம் காண முடியாது அல்லது உடனடியாக செயல்பட முடியாது 

இமாச்சலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங். எம்எல்ஏக்கள் 6 பேரும் பாஜகவில் ஐக்கியம்

புதுடெல்லி: தகுதி நீக்கம் செய்யப்பட்ட இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேரும் பாஜகவில் இணைந்துள்ளனர். சுதிர் ஷர்மா, இந்தர் தத் லக்ஷன்பால், ரவி தாக்கூர், சேதன்யா ஷர்மா ராஜிந்தர் ராணா, தேவிந்தர் குமார் புட்டோ ஆகிய தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 6 பேர் இன்று பாஜகவில் இணைந்தனர். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வரும் தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஜெய்ராம் தாக்கூர் ஆகியோர் முன்னிலையில் … Read more

டெல்லி மதுபான ஊழல் முறைகேடு வழக்கு: கவிதா காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு

புதுடெல்லி: டெல்லி மதுபான ஊழல் முறைகேடு வழக்கில் கடந்த 15-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட தெலங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் மகளும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் எம்எல்சியுமான கே. கவிதாவின் காவல் வரும் மார்ச் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கின் பின்னணி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், முன்னாள் அமைச்சர் மணிஷ் சிசோதியா ஆகியோருடன் … Read more

முதல்வர் பதவியை கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும்: பாஜக

புதுடெல்லி: டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்பி மனோஜ் திவாரி, “ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவர் இன்னமும் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை. சிறையில் இருந்தபடியே அவர் அரசை நடத்துவார் என ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து கூறுகிறார்கள். வன்முறை கும்பல்தான், சிறையில் இருந்தபடியே தங்கள் வேலையை செய்யும் என … Read more

‘மோடி சமரசம் செய்தாலும் சுயேச்சையாக களமிறங்குவேன்’ – ஈஸ்வரப்பா

பாஜக சீட் தராததால் கர்நாடக முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஈஸ்வரப்பா சுயேச்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ”என் மகனுக்கு சீட் வழங்குவதாக எடியூரப்பா உறுதி அளித்திருந்தார். அவரது பேச்சை நம்பி என் மகனை ஹாவேரியில் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினேன். இப்போது என் மகனுக்கு சீட் வழங்காமல் அவரது மகனுக்கு சீட் வழங்கியுள்ளார். ஷிமோகா தொகுதியில் அவரது மகன் ராகவேந்திராவை எதிர்த்து சுயேச்சையாக களமிறங்க போகிறேன். பிரதமர் நரேந்திர … Read more

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது: அசம்பாவிதங்களை தடுக்க 2 அடுக்கு பாதுகாப்பு

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வியாழக்கிழமை இரவு அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க கேஜ்ரிவாலின் வீட்டை சுற்றிலும் இரண்டு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையின்போது எம்எல்ஏ ராக்கி பிர்லா உட்பட ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கேஜ்ரிவாலின் வீட்டுக்கு வெளியே கூடி கோஷங்களை எழுப்பி ரகளையில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களை கைது செய்த போலீஸார் … Read more