டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது: அசம்பாவிதங்களை தடுக்க 2 அடுக்கு பாதுகாப்பு

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வியாழக்கிழமை இரவு அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க கேஜ்ரிவாலின் வீட்டை சுற்றிலும் இரண்டு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையின்போது எம்எல்ஏ ராக்கி பிர்லா உட்பட ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கேஜ்ரிவாலின் வீட்டுக்கு வெளியே கூடி கோஷங்களை எழுப்பி ரகளையில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களை கைது செய்த போலீஸார் … Read more

இஸ்ரோவின் ‘புஷ்பக்' விண்கல சோதனை வெற்றி

புதுடெல்லி: இஸ்ரோவின் ‘புஷ்பக்’ விண்கலம் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆர்எல்வி (மறுபயன்பாடு விண்கலம்) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கடந்த 1981-ல் கொலம்பியா என்ற விண்கலத்தை (ஸ்பேஸ் ஷட்டில்) உருவாக்கியது. அடுத்தடுத்து பல்வேறு பெயர்களில் 5 விண்கலங்கள் தயாரிக்கப்பட்டன. அடிக்கடி ஏற்பட்ட விபத்துகள் காரணமாக 2011-ம் ஆண்டில் நாசாவின் 6 விண்கலங்களுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ 2010-ம் ஆண்டில் ஆர்எல்வி … Read more

உ.பி. மதரஸா மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும்: அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் மதரஸாக்களில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச மதரஸா கல்விச் சட்டம் 2004-ன் படி அந்த மாநிலத்தில் செயல்படும் மதரஸாக்களுக்கு மாநில அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த சூழலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின்படி கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரை உத்தர பிரதேசம் முழுவதும் செயல்படும் மதரஸாக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் மாநிலம் முழுவதும் … Read more

வருமான வரி விவகாரம் டெல்லி நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு தள்ளுபடி

புதுடெல்லி: கடந்த 2014-15, 2015-16 மற்றும் 2016-17 ஆகிய மூன்று ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் வருமான வரியை வருமான வரித் துறை அதிகாரிகள் மறுமதிப்பீடு செய்வதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை கடந்த 20-ம் தேதி விசாரித்த நீதிமன்றம், தீர்ப்பைஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில் நேற்று நீதிபதிகள் யஷ்வந்த் வர்மா, புருஷைந்திர குமார் கவுரவ் ஆகியோர் அடங்கிய அமர்வு, காங்கிரஸின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. காங்கிரஸ் கட்சி … Read more

2ஜி வழக்கில் சிபிஐ மேல்முறையீட்டை ஏற்றது டெல்லி உயர் நீதிமன்றம்

புதுடெல்லி: 2ஜி அலைக்கற்றை முறைகேடு புகாரில் கனிமொழி, ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. கனிமொழி, ஆ.ராசா விடுவிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்திருந்தது. சிபிஐ மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தினேஷ்குமார் அறிவித்துள்ளார். மே மாதத்தில் இருந்து விசாரணை தொடங்கும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணை நீதிமன்றம் கிடையாது என்பதால் குற்றம் … Read more

பிஹார் | கட்டுமானப் பணி நடந்து வரும் பாலம் இடிந்து ஒருவர் பலி; 9 பேர் காயம்

பாட்னா: பிஹார் மாநிலம் சுபால் பகுதியில் கட்டுமானப் பணி நடந்து வரும் பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சுக்பால் மாவட்டத்தில் கோஷி ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் புதிய பாலம் ஒன்று வெள்ளிக்கிழமை காலையில் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார், பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் கவுசல் குமார் கூறுகையில், “நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள், மரிச்சா அருகே … Read more

அவரது கைதுக்கு அவரது செயல்களே காரணம்: அரவிந்த் கெஜ்ரிவாலின் குரு அன்னா ஹசாரே

Arvind Kejriwal: தன்னுடன் ஒன்றாக சேர்த்து மதுவை ஒழிக்க போராடிய அரவிந்த் கெஜ்ரிவால், பின்னர் அதற்காக ஒரு கொள்கையே வகுத்தது தனக்கு வருத்தம் அளித்ததாக அவர் தெரிவித்துள்ளார். 

ஜாமின் பெற விசாரணை நீதிமன்றத்தை அணுகவும் – கவிதா வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஜாமின் பெற விசாரணை நீதிமன்றத்தை நாடுமாறு, பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் எம்எல்சி கே. கவிதாவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. டெல்லி மதுபான ஊழல் முறைகேடு வழக்கில் கடந்த 15-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தெலங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் மகளும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் எம்எல்சியுமான கே. கவிதா, ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம்எம் சுந்தரேஷ், … Read more

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சியை நடத்த முடியுமா? சட்டம் சொல்வது என்ன?

Arvind Kejriwal in Jail: கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால்  சிறையில் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை நடத்த முடியுமா? அவர் முதல்வராக நீடிப்பாரா? இந்திய சட்டம் என்ன சொல்கிறது.

கேஜ்ரிவாலை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் அமலாக்கத் துறையின் வாதங்கள் என்னென்ன?

புதுடெல்லி: ‘டெல்லி மதுபான கொள்கை ஊழலில் தொடர்புடையவர்களில் முக்கியமானவர் என்பதால், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும்’ என்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை முறையிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் நேற்று (மார்ச் 21) கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அமலாக்கத் துறை சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் … Read more