ஆந்திர மாநில தேர்தலில் 33 வன்முறை சம்பவங்கள்: சிறப்பு ஆய்வு குழு விசாரணையில் தகவல்

அமராவதி: ஆந்திராவில் நடந்து முடிந்த தேர்தலில் வன்முறை சம்பவங் களில் பலர் படுகாயம் அடைந்தனர். சில வேட்பாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இது வேண்டுமென்றே செய்த சதி எனவும், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனவும், வாக்கு எண்ணிக்கையின் போதும், அதன் பிறகும் கூட ஆந்திராவில் வன்முறை நடக்கலாம் எனமுன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு மத்திய தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தார். இது தொடர்பாக உடனடி நடவடிக்கை தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். … Read more

அகமதாபாத் விமானநிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதா பாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரால் (ஏடிஎஸ்) கைது செய்யப்பட்டனர். குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் விமானநிலையம் வழியாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வருவதாக, உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து குஜராத் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாருக்கு, உளவுத்துறை அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து விமானநிலையத்துக்கு வந்த 4 தீவிரவாதிகளை, குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர். … Read more

சென்னை வருவதற்கு திட்டமிட்ட 4 வங்கதேசத்தினர் கைது: திரிபுரா ரயில் நிலையத்தில் சிக்கினர்

அகர்தலா: சென்னை வருவதற்காக திட்டமிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 4 பேர் திரிபுரா ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். வெளிநாட்டினர் சட்டம் உட்பட பல பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தை சேர்ந்த ஜஷாங்கிர், உசைன், ஓம்ரான் உசைன், ரியாத் உசைன் ஆகியோர் இந்திய தரகர் ரஃபிகுல் இஸ்லாம் என்பவர் மூலமாக எல்லையை கடந்து திரிபுரா மாநிலத்துக்குள் நுழைந்துள்ளனர். கடந்த 17-ம் தேதி இரவு அகர்தலா ரயில் நிலையத்தில், செகந்திராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் … Read more

24 மணி நேரமும் விளக்கை அணைத்து ஹாஸ்டலில் மறைந்து இருக்கிறோம்: கிர்கிஸ்தானில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவர் வேதனை

புதுடெல்லி: மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில் உள்ளூர் மக்களுக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளநிலையில், அங்கு பயிலும் இந்தியா, பாகிஸ்தான் மாணவர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். உள்ளூர் மக்களின் தாக்குதலால், விடுதியை விட்டு வெளியே வர முடியாத நிலையில் இந்திய மாணவர்கள் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து கிர்கிஸ்தானில் மருத்துவம் பயிலும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கூறுகையில் “உள்ளூர் மக்களின் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக 24 மணி நேரமும் ஹாஸ்டல் விளக்கை அணைத்தே … Read more

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் பாஜக பிரமுகர் உயிரிழப்பு: சர்வதேச அமைப்பின் விசாரணைக்கு பரூக் அப்துல்லா வலியுறுத்தல்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நேற்று முன்தினம் நிகழ்ந்த 2 தீவிரவாத தாக்குதல்களில் பாஜக தலைவர் ஒருவர்உயிரிழந்தார். இரண்டு சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். அனந்த்நாக், யன்னாரில் உள்ள திறந்தவெளி சுற்றுலா முகாம் பகுதியில் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்தது. துப்பாக்கி துண்டுகள் தாக்கியதில் இரண்டு சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த தம்பதியினர் ஆவர். முதல் சம்பவம் நடைபெற்று அரை மணி நேரம் கழித்து … Read more

“புரி ஜெகந்நாதரே மோடியின் பக்தர்தான்” – சர்ச்சை கருத்துக்குப் பின்  வருத்தம் தெரிவித்த பாஜக சம்பித் பத்ரா 

புரி: புரி ஜெகந்நாதரே பிரதமர் நரேந்திர மோடியின் பக்தர்தான் என்று பாஜக மூத்த தலைவர் சம்பித் பத்ரா பேசியது சர்ச்சையான நிலையில், தற்போது அதுகுறித்து அவர் மன்னிப்புக் கோரியுள்ளார். ஒடிசாவின் புரி மக்களவை தொகுதிக்கான வாக்குப் பதிவு வரும் மே 25ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு புரியில் இன்று (மே 20) நடைபெற்ற ரோட் ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார். முன்னதாக புரி ஜெகந்நாதர் கோயிலில் வழிபாடு நடத்தினார். இந்த நிலையில், “புரி ஜெகந்நாதரே பிரதமர் … Read more

உ.பி.யில் பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த இளைஞர் கைது

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஃபரூக்காபாத் எனும் இடத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் இளைஞர் ஒருவர் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்துவிட்டு அதை வீடியோவாகவும் பதிவு செய்து வெளியிட்ட நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அதோடு, அந்தக் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தவும் உத்திரவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டுள்ளது. … Read more

இதுவரை ரூ.8,889 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்

மக்களவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலக்கு வந்தன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவச பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்காக, பாதுகாப்புப் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை: இதுவரை நடத்தப்பட்ட சோதனையில், போதைப் பொருட்கள் மட்டும் ரூ.3,958.85 கோடி மதிப்பில் கைப்பற்றப்பட்டுள்ளன. குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு, போதைப் பொருள் தடுப்பு பிரிவு, இந்திய கடலோர காவல்படை ஆகியவை ரூ.892 கோடி … Read more

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி மறைவுக்கு இந்தியாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

புதுடெல்லி: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியின் மறைவை அடுத்து, இந்தியாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி மற்றும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்டோர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். மறைந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்தியா முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) … Read more

5 ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 23.66% வாக்குப்பதிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 8 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் 49 தொகுதிகளில் இன்று 5 ஆம் கட்டமாக தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் காலை 11 மணி நிலவரப்படி 23.66% வாக்குப்பதிவாகியுள்ளது. மேற்குவங்கத்தில் அதிகபட்சமாகவும், மகாராஷ்டிராவில் குறைவாகவும் வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 5-ம் … Read more