பாகிஸ்தானுடனான போர் நடவடிக்கைகளை நிறுத்தியது ஏன்? – மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம்

புதுடெல்லி: பாகிஸ்தானுடனான போரை நிறுத்தியது ஏன் என மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார். மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும் அவர் அவையில் விரிவான பதிலளித்தார். மக்களவை இன்று தொடங்கியது முதலே எதிர்க்கட்சிகளின் அமளியால் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், மக்களவையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்து பேசினார். மக்களவையில் பேசிய அவர், “நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த … Read more

“பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்ததாக ஏன் நினைக்கிறீர்கள்?” – ப.சிதம்பரம் கேள்வியால் சர்ச்சை

புதுடெல்லி: “பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்ததாக நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்? அவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகளாக இருக்கலாம்” என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரம், ஓர் ஊடகப் பேட்டியில், “பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் எங்கே? ஏன் நீங்கள்(அரசு) அவர்களைக் கைது செய்யவில்லை? ஏன் நீங்கள் அவர்களை அடையாளம் காணவில்லை? அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 2 அல்லது … Read more

விபத்தில் இறந்த பெண்..வரதட்சணை திரும்ப கேட்ட உறவினர்கள்! வைரல் செய்தி

Telangana Relatives Seek Dowry Back : பெண் ஒருவர், திருமணமாகி 3 ஆண்டுகள் கழித்து உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உறவினர்கள் கொடுத்த வரதட்சணையை திரும்ப கேட்டு பாேராட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  

‘மவுன விரதம்’ – ஆபரேஷன் சிந்தூர் விவாதம் குறித்த கேள்விக்கு சசி தரூரின் பதில்

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று மக்களவையில் நடைபெறவுள்ள விவாதத்தில் மூத்த காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு சசி தரூர் பரபரப்பாக பதிலளித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் பங்கேற்பது குறித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே சசி தரூரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “மவுன விரதம், மவுன விரதம்” என இரு வார்த்தைகளை மட்டும் கூறினார். மேலும், அவர் இதுகுறித்த எந்த கேள்விக்கும் … Read more

ஆபரேஷன் மகாதேவ்: பகல்ஹாம் தாக்குதல்… 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Indian Army: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச்சூட்டில் பகல்காம் தாக்குதலுக்கு தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஆபரேஷன் சிந்தூர்’ விவாதத்துக்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்திற்கு முன்னதாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று (திங்கள்கிழமை) விவாதம் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உறுப்பினர்கள் கட்டுப்பாட்டை கடைபிடிக்குமாறு வலியுறுத்தினார், ஆனாலும் அமளி தொடர்ந்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டது. பஹல்காம் பயங்கரவாத … Read more

டெலிவரி பாயில் இருந்து அதிகாரி பதவியை அடைந்த யுபிஎஸ்சி ஆஸ்பிரண்ட்!!!

Delivery boy becomes civil servant: பணச் சிக்கலால், RAJESH RAJAK அவர்கள் பட்டப்படிப்பை முடிக்க பள்ளியில் ஆசிரியராகவும், பின்னர் டெலிவரி பாயாகவும் வேலை செய்தார். அவரது தந்தை இறந்ததும் குடும்ப நிதி சிக்கலுக்குள் மாட்டியது. ஆனால் கனவு ஒன்றுக்காகவும் தன்னம்பிக்கையோடு போராடிய அவர், 2023ஆம் ஆண்டு JPSC தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

மகாராஷ்டிராவில் 2 மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பள்ளி காவலாளி கைது

பால்கர்: மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டு மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் 53 வயது காவலாளி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பால்கர் மாவட்டத்தில் விரார் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டு மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அப்பள்ளியின் காவலாளி கைது செய்யப்பட்டார். ஜூன் 15 முதல் 20 வரை நடந்த இச்சம்பவத்தில், 17 மற்றும் 15 வயதுடைய இரு மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இச்சம்பவம் பள்ளியின் கேண்டீனில் நடந்ததாகவும், … Read more

ரூ.20 லட்சத்திற்கு மேல் லாபம்! போஸ்ட் ஆபீஸ் சிறப்பு திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?

Post Office Schemes: நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு குறுகிய கால இலக்குகளை அடைய அஞ்சல் அலுவலக RD திட்டம் அதிகம் உதவுகிறது.

உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க, விற்க வேண்டும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே விற்க வேண்​டும். உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். மாதத்​தின் கடைசி ஞாயிற்​றுக்​கிழமையில் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்​களிடையே பிரதமர் மோடி உரை​யாற்றி வரு​கிறார். இதன்​படி 124-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்​பானது. இதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய விண்​வெளி வீரர் ஷுபான்ஷு சுக்லா விண்​வெளி பயணத்தை நிறைவு செய்து அண்​மை​யில் பூமிக்கு திரும்​பி​னார். அவர் தரையைத் … Read more