ரஷ்ய ராணுவத்தில் இருந்து 27 இந்திய வீரர்களை விடுவிக்க வேண்டும்: மத்திய அரசு வலியுறுத்தல்

புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்​தில் பணி​யாற்​றும் 27 இந்​திய வீரர்​களை உடனடி​யாக விடுவிக்க வேண்​டும் என்று மத்​திய அரசு வலி​யுறுத்தி உள்​ளது. கடந்த 2022-ம் ஆண்டு முதல் ரஷ்​யா, உக்​ரைன் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இதன்​காரண​மாக ரஷ்ய ராணுவத்​தில் வெளி​நாட்​டினர் அதிக அளவில் சேர்க்​கப்​பட்டு வரு​கின்​றனர். மத்​திய அரசின் வலி​யுறுத்​தலின்​பேரில் கடந்த சில ஆண்​டு​களில் 96 இந்​தி​யர்​கள் ரஷ்ய ராணுவத்​தில் இருந்து விடுவிக்​கப்​பட்​டனர். சுமார் 12 இந்​திய வீரர்​கள் போரில் உயி​ரிழந்​திருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. இதுதொடர்​பாக மத்​திய வெளி​யுறவுத் … Read more

ஐ.நா.வில் ஷெபாஸ் ஷெரீப்புக்கு பதிலடி தந்த இந்திய தூதர் பீட்டல் – யார் இவர்?

புதுடெல்லி: நியூ​யார்க்​கில் ஐ.நா. பொதுச் சபை கூட்​டம் நடை​பெற்​றது. இதில் பல்​வேறு நாட்டு தலை​வர்​கள் பங்​கேற்​றனர். பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசும்​போது, “ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலின் போது, பாகிஸ்​தான் வெற்றி பெற்​றது. இந்​தி​யா​வின் 7 போர் விமானங்​களை நாங்​கள் சுட்டு வீழ்த்​தினோம்” என்று கூறி​னார். இந்​நிலை​யில், ஐ.நா. சபை​யில் இந்​தியா சார்​பில் நேற்று உரை​யாற்​றும் சுற்று வந்​தது. அப்​போது ஐ.நா.​வின் நிரந்தர பிர​தி​நி​தி​யான முதன்மை செயலர் பீட்​டல் கெலாட், ஷெபாஸ் ஷெரீப்​புக்கு சரி​யான பதிலடி கொடுத்​தார். … Read more

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப்பின் பாகிஸ்தான் உள் பகுதிக்கு மாறிய தீவிரவாதிகள்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலுக்​குப்​பின் பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் மற்​றும் பஞ்​சாப் எல்​லை​யில் செயல்​பட்டு வந்த ஜெய்​ஷ்​-இ-​முகமது, ஹிஸ்​புல் முஜாகிதீன் போன்ற தீவிர​வாத அமைப்​பு​கள் பாகிஸ்​தானின் உள் பகு​திக்கு தங்​கள் முகாம்​களை மாற்​றின. தற்​போது லஷ்கர்​-இ-தொய்பா அமைப்​பும் பாகிஸ்​தானின் உள்​பகு​திக்கு இடம் மாறி​யுள்​ளது. எதிர்​காலத்​தில் இந்​தி​யா​வின் தாக்​குதலை தவிர்ப்​ப​தற்​காக, இந்த அமைப்​பு​கள் தங்​களின் இருப்​பிடத்தை மாற்​றி​ உள்​ளன. ஆப்​கன் எல்​லை​யி​லிருந்து 47 கி.மீ தொலை​வில் உள்ள திர் மாவட்​டத்​தில் மர்​கஷ் ஜிகாத்​-இ-அக் ஷா என்ற புதிய மையத்தை லஷ்கர்​-இ-தொய்பா … Read more

இந்தியாவில் கார்ப்பரேட் தலைமைத்துவத்தில் பெண்களின் பங்கு முதல் முறையாக 20% எட்டியது

புதுடெல்லி: இந்​தி​யா​வில் முதல் முறை​யாக கார்ப்​பரேட் தலை​மைத்​து​வத்​தில் பெண்​களின் எண்​ணிக்கை 20 சதவீதத்தை எட்​டி​யுள்​ளது. இதுதொடர்​பாக நியூ​யார்க்கை சேர்ந்த அவதார்​-செ​ராமவுண்ட் ஆய்​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: இந்​தி​யா​வில் கார்ப்​பரேட் நிறு​வனங்​களின் தலைமை பொறுப்​பு​களில் 2016-ல் 13%-​மாக இருந்த பெண்​களின் எண்​ணிக்கை படிப்​படி​யாக அதி​கரித்து 2024-ல் 19% அளவுக்கு உயர்ந்​தது. இந்த நிலை​யில் தற்​போது தலை​மைத்​து​வத்​தில் பெண்​களின் பங்கு முதல் முறை​யாக 20% தொட்​டுள்​ளது. இது சமூகத்​தில் முற்​போக்​கான நிலையை பிர​திபலிப்​ப​தாக அமைந்​துள்​ளது. உலகம் முழு​வதும் கார்ப்​பரேட் நிறு​வனங்​களின் தலை​மைப் பதவி​களில் … Read more

தென் அமெரிக்க நாடுகளுக்கு ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

புதுடெல்லி: மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரும், காங்​கிரஸ் மூத்த தலை​வரு​மான ராகுல் காந்தி 4 தென் அமெரிக்க நாடு​களுக்கு பயணம் மேற்​கொண்​டுள்​ளார். இதுதொடர்​பான தகவலை காங்​கிரஸ் கட்​சி​யின் தேசிய செய்தித் தொடர்​பாளர் பவன் கேரா வெளி​யிட்​டுள்​ளார். ராகுல் காந்​தி​யுடன் பவன் கேரா​வும் தென் அமெரிக்கா​வுக்கு சுற்​றுப்​பயணம் சென்​றுள்​ளார். 4 நாடு​களை உள்​ளடக்​கிய இந்த பயணத்​தின்​போது அரசி​யல் தலை​வர்​களை​யும், பல்​கலைக்​கழக மாணவர்​களை​யும், தொழில்​துறை தலை​வர்​களை​யும் ராகுல் காந்தி சந்​தித்து உரை​யாட உள்​ளார் என்று பவன் கேரா தனது எக்ஸ் பக்​கத்​தில் … Read more

சோனம் வாங்சுக்கிற்கு பாகிஸ்தான், வங்கதேச நாடுகளுடன் தொடர்பு: லடாக் டிஜிபி

லே: லடாக்கில் கைது செய்யப்பட்ட பருவநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக்கிற்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர் வங்கதேசம் சென்று வந்ததாகவும் லடாக்கின் காவல்துறை இயக்குநர் எஸ்டி சிங் ஜம்வால் தெரிவித்தார். லேவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய டிஜிபி எஸ்டி சிங் ஜம்வால், “செப்டம்பர் 24 அன்று ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது. நான்கு பேர் உயிரிழந்தனர். ஏராளமான பொதுமக்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் துணை ராணுவ அதிகாரிகள் காயமடைந்தனர். மத்திய அரசுடன் நடந்து கொண்டிருக்கும் பேச்சுவார்த்தைகளை … Read more

‘அப்பாவி மக்களின் உயிரிழப்பு இதயத்தை நொறுக்குகிறது’ – கரூர் சம்பவத்துக்கு ராஜ்நாத் சிங் இரங்கல்

புதுடெல்லி: கரூரில் விஜய்யின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் நடந்த பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் வேதனையளிக்கிறது. அப்பாவி மக்களின் உயிரிழப்பு இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவாக குணமடைய இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். 31 பேர் … Read more

‘ஐ லவ் முகம்மது’ சர்ச்சை: உ.பி.யின் பரேலி வன்முறை தொடர்பாக மதகுரு, 7 பேர் கைது – பின்னணி என்ன?

பரேலி: ‘ஐ லவ் முகம்மது’ பிரச்சாரத்தை ஆதரித்து போராட்டம் நடத்த அழைப்பு விடுத்த உள்ளூர் மதகுருவும், இத்தேஹாத்-இ-மில்லாத் கவுன்சிலின் தலைவருமான தவுகீர் ராசா கான் மற்றும் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் கான்​பூரில் உள்ள ராவத்​பூரில் கடந்த 4-ம் தேதி மிலாது நபி விழா நடை​பெற்​றது. இதையொட்டி அந்த கிராமத்​தில் ‘ஐ லவ் முகம்​மது’ என்ற வாசகத்​துடன் மின்சாரப் பலகை நிறு​வப்​பட்​டது. முதல் … Read more

“லடாக் மக்களுக்கு பாஜக துரோகம்” – சோனம் வாங்சுக் கைதுக்கு கார்கே கண்டனம்

புதுடெல்லி: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லடாக் மக்களுக்கு பாஜக தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது என்று குற்றம்சாட்டினார். இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், “லடாக்கில் நிலைமையை அரசு மோசமாக கையாண்டதையும், அதைத் தொடர்ந்து கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதையும் காங்கிரஸ் கடுமையாக கண்டிக்கிறது. லடாக் மக்களின் விருப்பங்களுக்கு … Read more

பிஹாரில் தே.ஜ.கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊடுருவல்காரர்கள் விரட்டப்படுவார்கள்: அமித் ஷா

அராரியா(பிஹார்): பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், மாநிலத்தில் இருந்து ஊடுருவல்காரர்கள் விரட்டி அடிக்கப்படுவார்கள் என்று பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். பிஹாரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அராரியா நகரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே ராகுல் காந்தி மற்றும் லாலு பிரசாத் யாதவின் ஒரே நோக்கம். … Read more