மத்தியப் பிரதேசம் | பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 22 ஆக அதிகரிப்பு

கார்கோன்(மத்தியப் பிரதேசம்): மத்தியப் பிரதேசத்தில் ஆற்றுப் பாலத்தின் தடுப்பை உடைத்துக்கொண்டு பேருந்து கீழே விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. மத்திய பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் உள்ள தங்கார்கோன் கிராம ஆற்றுப் பாலத்தில் சென்ற தனியார் பேருந்து ஒன்று, இன்று காலை 8.40 மணி அளவில் விபத்துக்குள்ளானது. 50 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து, திடீரென ஆற்றுப் பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழுந்தது. சுமார் 50 அடி உயரத்தில் இருந்து பேருந்து கீழே … Read more

கர்நாடகாவில் #ByeByeBJP: தட்டித்தூக்கும் காங்கிரஸ்.. கருத்து கணிப்பில் அபாரம்.!

கர்நாடகாவில் நாளை (மே10) பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இத்தேர்தலில் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் 223 பேரும், ஜேடி(எஸ்) கட்சி சார்பில் 207 வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு நாளை வாக்குப்பதிவு தொடங்கி, மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இரண்டாவது முறையாக கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பாஜக மிக தீவிர நுணுக்கங்களை கையாண்டு பிரச்சாரத்தை முடித்துள்ளது. மறு பக்கம் காங்கிரஸ் ஆரவாரமே இல்லாமல் மக்களின் தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறது. … Read more

Go First நிறுவனத்தை தொடர்ந்து சிக்கலில் SpiceJet… NCLT அனுப்பிய நோட்டீஸ்!

கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் சுமார் 11,0003 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் விமானம் அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை தொடர்பாக, தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (NCLT ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விபத்துகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை – கேரள அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி

கேரள மாநிலம் மலப்புரம் அருகே 22 பேர் உயிரிழக்க காரணமான படகு விபத்து குறித்து வரும் 12ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மலப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற கேரள உயர்நீதிமன்றம், விபத்து தொடர்பான விவரங்களை அளிக்குமாறு, அந்த இடத்தின் துறைமுக அதிகாரியிடம்  கேட்டுள்ளது. மேலும், படகு விபத்துகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என கேரள அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. … Read more

‘தேசியவாத செயல்களில் தடைகளை உருவாக்கும் இந்தக்கால ஜின்னா’- மம்தாவை விமர்சித்த பாஜக பிரமுகர்

புதுடெல்லி: நாட்டின் தேசியவாத செயல்கள் அனைத்திலும் தடைகளை உருவாக்கும் அவர் இந்தக் காலத்து ஜின்னா” என்று மம்தா பானர்ஜியை பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் விமர்சித்துள்ளார். ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு மேற்கு வங்க அரசு தடைவிதித்துள்ளது குறித்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் முதலாவது மாநிலமாக ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு மேற்கு வங்க அரசு தடை விதித்துள்ளது. வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்ப்பதற்காக திரைப்படத்திற்கு தடைவிதிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி … Read more

நடு இரவில் வீடு வீடாக சென்று பணம் கொடுத்த பாஜகவினர்.. ஒற்றை ஆளாக துரத்தி பிடித்த தேர்தல் அதிகாரி.. மாஸ்

பெங்களூர்: கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெறுவதை முன்னிட்டு, நடு இரவில் வீடு வீடாக சென்று பணப்பட்டுவாடா செய்த பாஜகவினரை ஒற்றை ஆளாக தேர்தல் அதிகாரி துரத்தி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. போலீஸாருக்கு கூட தகவல் தெரிவிக்காமல், துணிச்சலாக களத்தில் இறங்கிய அந்த தேர்தல் அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் … Read more

224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் நாளை வாக்குப்பதிவு..!

கர்நாடக மாநிலத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 224 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. அதற்காக, வாக்கு இயந்திரங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், மஜத இடையே மும்முனைப் போட்டி நிலவும் நிலையில், சுயேட்சைகள் உட்பட மொத்தம் 2,613 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவிற்காக அமைக்கப்பட்டுள்ள 58,200 வாக்குச்சாவடி மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் … Read more

கோவாவில் நாளை விடுமுறை – கர்நாடக வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்வதற்காக நடவடிக்கை

பனாஜி: அண்டை மாநிலமான கர்நாடகாவில் வாக்களர்களாக பதிவு செய்துள்ளவர்கள் அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க வசதியாக கோவாவில் புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவா மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலத்தின் அருகே இருக்கும் மாநிலமான கர்நாடகாவில் புதன்கிழமை (நாளை) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தநிலையில் கர்நாடகாவில் வாக்காளர்களாக பதிவு செய்து கோவாவில் வசிக்கும் மக்கள், கர்நாடக சட்டப்பேரவையில் வாக்களிக்கும் விதமாக புதன்கிழமை சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவித்துள்ளது கோவா அரசு. அம்மாநில பொதுத்துறை … Read more

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் 2023: வாக்குப்பதிவு, தேர்தல் முடிவுகள், நட்சத்திர தொகுதிகள்… முழு விவரம்!

நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நாளை (மே 10) நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. கர்நாடக தேர்தல் களம் என்பது பாஜக, காங்கிரஸ் , மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டியாக காணப்படுகிறது. கர்நாடக தேர்தல் 2023 அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் வரவுள்ளதால் கர்நாடக சட்டமன்ற தேர்தல் ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. தென்னிந்தியாவை பொறுத்தவரை பாஜக ஆளும் ஒரே மாநிலமாக கர்நாடகா திகழ்கிறது. … Read more

தி கேரளா ஸ்டோரியை தடை செய்ய கோரும் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்!

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க மறுத்த கேரள உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை மே 15-ம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.