Happy Eid UL Adha 2023: உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி மகிழ பக்ரீத் வாழ்த்துகள்!!

Happy Eid UL Adha Wishes 2023: ஈத்-உல்-அதா புனித திருநாளில் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த வாழ்த்து செய்திகளை அனுப்பி மகிழுங்கள்

அதிக பென்ஷன் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 11 வரை நீட்டிப்பு

புதுடெல்லி: பணியாளர் ஓய்வூதிய திட்டத்தின் (இபிஎஸ்) கீழ் அதிக பென்ஷன் தொகை பெறுவதற்காக விண்ணப்பம் செய்யும் கால அவகாசம் ஜூலை 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அந்தக் கெடு ஜூன் 26-ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. இதன் மூலம் ஊழியர்களும், ஓய்வூதியதார்களும் மேலும் 15 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்தி, ஊழியர்கள் தங்கள் முதலாளிகளுடன் தொடர்புடைய மண்டல அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அதேபோல் நிறுவனங்கள் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பதாரர்களின் … Read more

600 கார்கள் புடை சூழ மகாராஷ்டிரா சென்ற சந்திரசேகர ராவுக்கு சரத் பவார் கண்டனம்

மகாராஷ்டிர மாநிலத்துக்கு 600 கார்கள் புடை சூழ சென்ற தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு சரத் பவார் கண்டனம் தெரிவித்துள்ளார். தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், தேசிய அளவில் கால் பதிக்க வேண்டும் என்பதற்காக தனது தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை பாரத் ராஷ்டிர சமிதி என மாற்றினார். வரும் தேர்தல்களில் பிற மாநிலங்களிலும் போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், சந்திரசேகர ராவ் 2 தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பண்டார்பூர் … Read more

திரிபுராவில் உல்டா ரத யாத்திரையின் போது என்ன நடந்தது? 7 பேர் பலி, 15 பேர் காயம்

Tripura Ulta Rath Yatra Mishap: திரிபுரா உல்டா ரத யாத்திரை விபத்தில் மின்சாரம் தாக்கி 7 பேர் பலி; பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு  

பிரதமர் வலியுறுத்தும் பொது சிவில் சட்டத்துக்கு முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்பு – ஆம் ஆத்மி கட்சி ஆதரவு

புதுடெல்லி: பொது சிவில் சட்டம் அவசியம் என பிரதமர் மோடி கூறியுள்ள நிலையில், இதற்கு முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பொது சிவில் சட்டத்தை, கொள்கை அடிப்படையில் ஆதரிப்பதாக ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. பொது சிவில் சட்டம் குறித்து நாட்டு மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துகளை கடந்த 14-ம் தேதி முதல் தெரிவிக்கலாம் என சட்ட ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இதுவரை 8.5 லட்சம் பேரிடம் … Read more

நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 13-ல் ஏவப்படும்

சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 2019 ஜூலை 22-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்டப் பயணங்களுக்கு பின்னர் சந்திரயான்-2 2019 செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப் பாதையை சென்றடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறால் திட்டமிட்டபடி `லேண்டர் கலன்’ தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான `ஆர்பிட்டர்’ நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக … Read more

ஃபார்சி வெப் தொடரை பார்த்து உ.பி.யில் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டை அச்சடித்து வெளியிட்ட கும்பல் சிக்கியது

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தை சேர்ந்த பொற்கொல்லர் இர்ஷாத். இவர் சமீபத்தில் ஷாகித் கபூர், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்த ‘ஃபார்சி’ என்ற பாலிவுட் வெப் தொடரை பார்த்துள்ளார். இது கள்ளநோட்டு அச்சடித்து, புழக்கத்தில் விடுவது பற்றிய படம். கரோனா தொற்று பரவிய காலத்தில் அதிக இழப்பை சந்தித்த இர்ஷாத்துக்கு, ‘ஃபார்சி’ வெப் தொடரை பார்த்தபின் குறுக்கு வழியில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்போதுதான், ரூ.2 ஆயிரம்நோட்டை திரும்ப பெறுவதாகரிசர்வ் வங்கி கடந்த … Read more

மணிப்பூரில் அமைதி திரும்ப உதவுங்கள்: பொதுமக்களுக்கு ராணுவ அதிகாரிகள் வேண்டுகோள்

இம்பால்: மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கு மாநில மக்கள் ராணுவம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைதேயிபிரிவினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி போராடி வருகின்றனர். ஏற்கனவே பழங்குடியினர் பட்டியலில் இருக்கும் குகி இனத்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கடந்த மே மாதம் 3-ம் தேதி ‘பழங்குடியினர் ஒற்றுமை பேரணி’யை மைதேயி பிரிவினருக்கு எதிராககுகி இனமக்கள் நடத்தினர். அப்போது வன்முறை வெடித்தது. அன்றுமுதல் அங்கு தொடர்ந்து … Read more

உ.பி. | 'பீம் ஆர்மி' சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச் சூடு – நூலிழையில் உயிர் தப்பினார்

சஹாரன்பூர்: ஆசாத் சமாஜ் கட்சி மற்றும் பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவன் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. அவரது அவரது வயிற்றில் தோட்டா பாய்ந்த நிலையில், உடனடியாக தியோபந்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சஹாரன்பூர் சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டு … Read more

அயோத்தி ராமர் கோயில் பாதுகாப்புக்கு ரூ.38 கோடியில் திட்டம்

லக்னோ: அயோத்தியில் கட்டப்பட்டு வரும்ராமர் கோயிலின் பாதுகாப்பிற்காக ரூ.38 கோடி ரூபாய் செலவில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அதன் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. உத்தர பிரதேசத்தின் நிர்மான் நிகாமிடம் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கட்டப்பட்டு வரும் ராமர் நினைவுச் சின்னத்தின் பாதுகாப்பு குறித்த அனைத்து அம்சங்களையும் விவரிக்கும் விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. வரும் நவம்பர் மாதத்துக்குள் பாதுகாப்பு பணிகள் அனைத்தையும் முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல்கட்ட திட்டம் … Read more