அரசு ஊழியர்கள் அதிர்ச்சி… அகவிலைப்படியை உயர்த்த மாநில அரசு மறுப்பு!

அறிவிக்கப்பட்ட அகவிலைப்படியை உயர்வை, அதிகரிக்க கோரி மேற்கு வங்க அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் நிலையில், டிஏ-வை உயர்த்த வாய்ப்பில்லை என அரசு தெரிவித்துள்ளது.

திகார் சிறையில் கைதிகளுக்கு தக்க பாதுகாப்பு வழங்கும்படி சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு..!

டெல்லி திகார் சிறையில் ரவுடிகளிடையே கோஷ்டி மோதல் வலுத்து தில்லு தாஜ்புரியா என்ற ரவுடி 100 முறை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதையடுத்து சிறையில் உள்ள இதர ரவுடிகளுக்கு உயிரச்சம் ஏற்பட்டுள்ளது. தீபக் பாக்சர் என்ற மற்றொரு பிரபல தாதா தம்மை திகார் சிறையில் இருந்துவேறு சிறைக்கு மாற்றும்படி கோரி விண்ணப்பித்துள்ளார். தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தீபக் பாக்சருக்கு தக்க பாதுகாப்பு அளிக்கும்படி பாட்டாலியா ஹவுஸ் … Read more

தலாக்-இ–ஹசன் நடைமுறை செல்லுமா? – விசாரணைக்கு ஒப்புக்கொண்டது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஆண்கள், 3 முறை தலாக் (முத்தலாக்) கூறி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறை சட்டவிரோதம் என்று 2017-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின் முத்தலாக்குக்கு தடை விதிக்கும் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் முத்தலாக் வாயிலாக விவாகரத்து செய்வோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் முஸ்லிம் ஆண்கள் விவாகரத்து பெற தலாக் – இ – … Read more

Boat Accident: கோழிக்கோடு படகு போட்டியில் ஏற்பட்ட விபத்து! இருவர் பலி…

Kozhikode Boat Accident: கோழிக்கோடு படகு போட்டியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் பலி என்ற தகவல் வந்துள்ளது. மலப்புரத்தில் 20 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்தனர்

அமிர்தசரஸ் பொற்கோவிலில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்பட்ட சமயத்தில் வெடித்துச் சிதறிய மர்மபொருள் – 6 பேர் காயம்

பஞ்சாபின் அமிர்தசரசில் உள்ள புகழ்பெற்ற பொற்கோவில் அருகே மர்மப்பொருள் வெடித்ததில் 6 பெண்கள் காயமடைந்தனர். சனிக்கிழமை இரவில் அமிர்தசரில் உள்ள ஹெரிடேஜ் தெருவில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்பட்ட சமயத்தில் திடீரென மர்மப்பொருள் வெடித்துச் சிதறியது. அப்போது கண்ணாடிகள் சிதறியதில் ஆட்டோ ரிக்சா ஒன்றில் அமர்ந்திருந்த பெண்கள் 6 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தடயவியல் துறையினர், பவுடர் போன்றவற்றை கைப்பற்றினர். இந்நிலையில், நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறும் … Read more

பிரதமரின் மாநிலத்தில் 40,000 பெண்களை காணவில்லை!!

மோடியின் சொந்த ஊரான குஜராத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கடத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையில், குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் காணாமல் போனதாகவும், இதில் 2019ஆம் ஆண்டு 9,268 பெண்கள் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில் 8,290 பெண்கள் காணாமல் போயுள்ளனர். இது தொடர்பாக பேசியுள்ள முன்னாள் காவல்துறை அதிகாரிகள் சிலர், காணாமல்போன சில பெண்கள் மற்றும் … Read more

தையலுக்கு பதில் ஃபெவி குயிக் போட்டு ஒட்டிய மருத்துவமனை!!

சிறுவனுக்கு காயம் ஏற்பட்ட இடத்தில் தையல் போடுவதற்கு பதில் பெவிகுயிக்கை பூசி ஒட்டிய மருத்துவமனையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஜோகுலம்பா கத்வேல் மாவட்டத்தில் உள்ள அலம்பூர் நகரை சேர்ந்த வம்சி கிருஷ்ணா என்பவரின் மகன் பிரணவ், விளையாடிக்கொண்டிருந்தபோது கீழே விழுந்துள்ளார். இதனால் சிறுவனுக்கு புருவத்தில் தசை கிழிந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை ரெயின்போ என்ற மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த மருத்துவர் ரத்தத்தை துடைத்து காயம் ஏற்பட்ட இடத்தில் தையல் போடுவதற்கு பதில் … Read more

‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை கோருவதன் மூலம் தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக உதவுகிறது காங்கிரஸ் – பிரதமர் மோடி

பெங்களூரு: ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் இந்திய தேசத்துக்கு எதிரான சதியை அம்பலமாக்கியுள்ளது. அந்த படத்துக்கு தடை கோருவதன் மூலம் தீவிரவாதிகளுக்கு காங்கிரஸ் மறைமுகமாக‌ உதவுகிறது என கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதீப்டோ சென் இயக்கிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் கேரளாவை சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. … Read more

மணிப்பூரில் 23,000க்கும் மேற்பட்டவர்களை மீட்ட ராணுவம்.. கண்காணிப்பு தீவிரம்!

மணிப்பூரில் இனக்கலவரத்தை அடக்குவதற்காக அழைக்கப்பட்ட இந்திய ராணுவம் கடந்த 24 மணி நேரத்தில், மணிப்பூர் ராணுவம் வான்வழி மூலம் கண்காணிப்பு முயற்சிகளை கணிசமாக அதிகரித்துள்ளது.

புல்வாமாவில் சுமார் 6 கிலோ எடையிலான வெடிபொருள் மீட்பு

ஜம்மு – காஷ்மீரின் புல்வாமாவில், சுமார் 6 கிலோ எடையுடைய வெடிபொருள் மீட்கப்பட்டதை அடுத்து பெரும் அசம்பாவிதம்  தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஏற்கனவே ஒரு வழக்கில் கைதான பயங்கரவாதிகளின் கூட்டாளி ஒருவனிடம்  நடத்திய விசாரணையில், வெடிபொருள் பதுக்கி வைத்திருந்த தகவல் தெரியவந்ததாகவும், Arigam பகுதியில் இருந்த வெடிபொருள் மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்கு பதியப்பட்டு விசாரணை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ரஜெளரியில் ஆப்ரேஷன் திரிநேத்ராவின் கீழ் மூன்றாம் நாளாக பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் … Read more