பைக்கில் 300 கி.மீ. வேகத்தில் பயணித்த பிரபல யூடியூபர் அகஸ்தய் உயிரிழப்பு

புதுடெல்லி: இருசக்கர வாகனத்தில் அதிவேக பயணத்தின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளங்களை கொண்டிருந்த பிரபல யூடியூபர் அகஸ்தய் சவுகான் விலை உயர்ந்த பைக்கில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முயன்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார். உத்தராகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் அகஸ்தய் சவுகான். 25 வயதான இவர், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை பற்றி ரிவியூவ் செய்வதோடு, மோட்டார் சைக்கிள்களில் அதிவேகத்தில் சென்று சாகசம் செய்யும் வீடியோக்களை ‘புரோ ரைடர் 1000’ என்ற … Read more

இனி ரெயிலில் செல்லப்பிராணிகளை கொண்டு செல்லலாம்..! எப்படி தெரியுமா ?

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் விலங்குகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வகையில் மென்பொருளில் மாற்றங்கள் செய்யுமாறு ரெயில்வே வாரியம் சி.ஆர்.ஐ.எஸ். நிறுவனத்திடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. காவலர்களுக்காக ஒதுக்கப்பட்ட எஸ்.எல்.ஆர். கோச்சில் விலங்குகள் வைக்கப்படும். விலங்குகளின் உரிமையாளர்கள் தண்ணீர், உணவு உள்ளிட்டவற்றை தங்கள் செல்லப்பிராணிகளுக்கு வழங்கலாம். இதற்கு பயணியின் டிக்கெட் உறுதியாகி இருக்க வேண்டும். டிக்கெட்ட் ரத்து செய்யப்பட்டால், செல்லப்பிராணியின் டிக்கெட்டுக்கான பணம் திரும்ப வழங்கப்படாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் முன்மொழியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் செல்லப்பிராணிகளை ரயிலில் அழைத்துச் செல்ல … Read more

மாணவர்களே ரெடியா !! நாளை 'நீட்' தேர்வு.. 20 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதுகின்றனர்..!

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித்தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில், இளங்கலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் தமிழகத்தில் சுமார் 1.5 லட்சம் மாணவ-மாணவிகள் ஆன்லைன் … Read more

ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம்விட எதிர்ப்பு – தன்னிடம் ஒப்படைக்க கோரி ஜெ.தீபா தரப்பு வாதம்

பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்ம மூர்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ‘சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சேலை, செருப்பு, மின்சாதனப் பொருட்கள், தங்கம், வெள்ளி, வைரம் போன்றவற்றை ஏலம் விட வேண்டும்’ என கோரியிருந்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஏலம் விடுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமனம் செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதன்பேரில் கர்நாடக அரசு கடந்த மாதம் பெங்களூருவை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் … Read more

சூடானில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும் ஆபரேசன் காவேரி நடவடிக்கை நிறைவு – வெளியுறவு அமைச்சகம்

சூடானில் இருந்து 3800க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஆபரேசன் காவேரி திட்டம் மூலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில்,சூடானில் மீட்புப் பணிகள் நிறைவு பெற்றதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெங்களூரில் பிரச்சாரத்துக்கு இடையே  இது குறித்து கருத்துத் தெரிவித்த பிரதமர் மோடி, நாட்டு மக்கள் துன்பத்தில் தவிப்பதை தம்மால் காண முடியவில்லை என்றார். மிகப்பெரிய நாடுகள் கூட தங்கள் குடிமக்களை சூடானில் இருந்து வெளியேற்ற தயங்கிய நிலையில், இந்தியா துணிவுடன் தனது குடிமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறினார். விமானத்தால் நெருங்க … Read more

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அளிப்பவை ‘இலவசங்கள்’ அல்ல – அமித் ஷா சிறப்புப் பேட்டி

புதுடெல்லி: அனைத்து மொழிகளும் வளர வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம் என்றும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அளிப்பவை ‘இலவசங்கள்’ அல்ல என்றும் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியின் விவரம்: பாஜக பெரும்பாலும் இந்திக்கு ஆதரவான கட்சி என்றும், அந்த நோக்கிலேயே அது தனது திட்டத்தை முன்னிறுத்துகிறது என்றும் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து என்ன … Read more

மணிப்பூர் கலவரம்.. பாஜக எம்எல்ஏ மீது கொலைவெறி தாக்குதல்.. கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை

இம்பால்: மணிப்பூரில் வரலாறு காணாத பெரும் கலவரம் நடந்து வரும் சூழலில், அங்கு பாஜக எம்எல்ஏ வன்ஜாகின் வால்டே என்பவர் மீது வன்முறை கும்பல் நேற்று இரவு கொலைவெறி தாக்குதலை நடத்தியது. இதில் படுகாயமடைந்த அவர், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 5 நாட்களாக மிகப்பெரிய வன்முறையும், கலவரமும் வெடித்து வருகிறது. மணிப்பூரில் பரவலாக வசிக்கும் ‘மெய்டெய்’ சமூக மக்களுக்கு பழங்குடியினர் (scheduled Tribe) அந்தஸ்து வழங்கக்கூடாது எனக் கூறி, … Read more

‘தி கேரளா ஸ்டோரி’ சர்ச்சை டீசரை நீக்க முன்வந்த தயாரிப்பாளர்; படத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

திருவனந்தபுரம்: ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படத்தின் டீசரில் கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, அந்த டீசரை நீக்குவதாக படத் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தில் கேரளாவை சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு கேரளாவில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், … Read more

சரத் பவாருக்கு ஸ்டாலின் வைத்த வேண்டுகோள்: இதை நீங்க மறுக்க கூடாது!

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை சரத் பவார் மீண்டும் ஏற்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை மையமாக கொண்டு இயங்கும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவர் சரத் பவார் கடந்த மே 2ஆம் தேதி அறிவித்தார். அத்துடன் தேர்தல் அரசியலில் இருந்தும் விலகி இருப்பதாக கூறினார். மகாராஷ்டிராவில் மட்டுமல்லாமல் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் தலைவர்களில் ஒருவரான சரத் பவாரின் முடிவு பல … Read more

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக டிஆர்டிஓ விஞ்ஞானி மீது குற்றச்சாட்டு.. பயங்கரவாத எதிர்ப்பு படை விசாரணை!

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்து, ஏவுகணை குறித்த முக்கிய தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ், டிஆர்டிஓ விஞ்ஞானி ஒருவரை கைது செய்து பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புனேவில் உள்ள டிஆர்டிஓ மையத்தில் பணியாற்றி வந்த விஞ்ஞானி பிரதீப் குருல்கர் என்பவரை பாகிஸ்தான் உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் சமூகவலைதளம் மூலம் மாணவி என அறிமுகப்படுத்தி தொடர்புகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து வாட்ஸ் ஆப் செயலி மூலம் விஞ்ஞானியை தொடர்பு கொண்டதாகவும், அதனை வைத்தே பின் அவர் … Read more