தீவிரவாதத்தின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தும் வகையில் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் எடுக்கப்பட்டுள்ளது – பிரதமர்

தீவிரவாதத்தின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தும் வகையில் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், வாக்கு வங்கிக்காக அப்படத்தை காங்கிரஸ் எதிர்ப்பதாகவும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். கர்நாடகாவின் பெல்லாரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர், சூடானில் நிலவிய சூழலால் அந்நாட்டில் இருந்து தங்களது குடிமக்களை மீட்க பெரிய நாடுகளே மறுத்த நிலையில், மத்திய அரசு இந்தியர்களை மீட்டதாக பெருமிதத்துடன் கூறினார். சூடான் விவகாரத்தை வைத்து அரசியல் செய்யவே காங்கிரஸ் விரும்பியதாகவும் பிரதமர் குற்றஞ்சாட்டினர். கர்நாடகாவின் வளர்சிக்கானதாக … Read more

”மல்யுத்த வீராங்கனைகளின் கோரிக்கைகள் நிறைவேற்றம்; போலீஸ் விசாரணையை முடிக்க விடுங்கள்” – மத்திய அமைச்சர்

புதுடெல்லி: “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. டெல்லி போலீஸார் தங்களின் பாரபட்சமில்லாத விசாரணையை முடிக்க வீரர்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார். டெல்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர், “கோபத்துடன் அங்கு போராடிக்கொண்டிருக்கும் அனைத்து வீரர்களுக்கும் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். உங்களின் எல்லா கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. நீதிமன்றமும் வழிகாட்டி உத்தரவு வழங்கியுள்ளது. முதலில் போலீஸார் தங்களின் பாரபட்சமில்லாத … Read more

திருப்பதி தரிசனமா… போலி டிக்கெட்டை எப்படி கண்டறிவது? OTPல தான் விஷயமே இருக்கு!

கோடை விடுமுறைக்கு மட்டுமல்ல… எல்லா மாதங்களிலும் திருப்பதியில் கூட்டம் நிரம்பி வழியும். ஏழுமலையானை தரிசிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று டிக்கெட்கள் முன்பதிவு செய்ய வேண்டும். இங்கு தான் சிக்கலே… எது உண்மையான இணையதளம்? எது போலி என்று உங்களுக்கு தெரியுமா? கொஞ்சம் மிஸ் ஆனாலும் பணத்தை ஏமாற்றி விடுவார்கள். இந்த விவகாரம் பக்தர்களுக்கு மட்டுமல்ல. திருப்பதி தேவஸ்தானத்திற்கும் தலைவலியாக வந்து நிற்கிறது. திருப்பதி தரிசன டிக்கெட் இதுதான் online.tirupatibalaji.ap.gov.in அதிகாரப்பூர்வ இணையதளம். இதில் … Read more

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசித் தாக்கியதில் 5 வீரர்கள் வீரமரணம்..!

ஜம்மு – காஷ்மீரின் ரஜௌரியில் பயங்கரவாதிகளுடனான  துப்பாக்கிச்சண்டையில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. கண்டியின் கேசரி பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் ஏற்கனவே 2 வீரர்கள் உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த மேலும் 3 வீரர்கள் சிகிச்சை பலனின்றி வீரமரணமடைந்தனர். துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து வரும் நிலையில், ரஜெளரியில் பாதுகாப்பு நடவடிக்கையாக மொபைல் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. Source link

பஜ்ரங் தள விவகாரம்: பாஜக எதிர்ப்பால் பின்வாங்கிய காங்கிரஸ்

பெங்களூரு: பஜ்ரங் தள விவகாரத்தில் பாஜகவின் கடும் எதிர்ப்பால் காங்கிரஸ் கட்சி பின்வாங்கியுள்ளது. அந்த அமைப்பை தடை செய்ய மாட்டோம் என காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தள அமைப்பை தடை செய்யப் போவதாக தெரிவித்திருந்தது. இதற்கு பாஜக, பஜ்ரங் தளம், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. பெங்களூரு, மங்களூரு, மைசூரு ஆகிய இடங்களில் பஜ்ரங் தள … Read more

இவர்தான் தீவிரவாதத்தின் செய்தித் தொடர்பாளர்.. பாகிஸ்தான் அமைச்சரை அலறவிட்ட ஜெய்சங்கர்.. என்னாச்சு?

பனாஜி: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோவை தீவிரவாதத்தின் செய்தித் தொடர்பாளர் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் இன்று தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 5 தீவிரவாதிகள் உயிரிழந்த நிலையில், ஜெய்சங்கர் இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆசியாவிலேயே மிக முக்கிய அமைப்பாக விளங்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாடு கோவாவில் நேற்று தொடங்கியது. இரண்டு … Read more

பைக்கில் 300 கி.மீ ஸ்பீடு… யூடியூபர் தலை சிதறி பலி… நம்ம ஊரு TTFகள் கவனத்திற்கு…!

16 லட்சம் ரூபாய் விலை கொடுத்து வாங்கிய மோட்டார் சைக்கிளில் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முயன்ற பிரபல பைக் யூடியூபர் விபத்தில் சிக்கி தலை சிதறி உயிரிழந்தார்.  நம்ம ஊரு அதிவேக பைக் யூடியூப்பர் டிடிஎப் வாசன் போல ஏராளமான பைக் ரசிகர்களால் பிரபலமானவர் உத்ரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த யூடியூப்பர் அகஸ்தய் சவுகான். இவர் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை பற்றி ரிவியூ செய்வதோடு, மோட்டார் சைக்கிள்களில் அதிவேகத்தில் … Read more

மணிப்பூரில் தொடர்ந்து கலவரம்… நிலைமை சரியாகும் வரை ரயில் சேவைகள் நிறுத்திவைப்பு..!!

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதி சமூகத்தினர் பழங்குடி அந்தஸ்து கோரி வரும் நிலையில், அங்குள்ள நாகா, குகி உள்ளிட்ட பழங்குடியினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பழங்குடியினர் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்து, பல்வேறு மாவட்டங்களில் கலவரமாக உருவெடுத்தது. கடைகள், வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன. சாலைகளில் வாகனங்கள் எரிக்கப்பட்டதால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது.. கலவரத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் இருந்து வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். … Read more

நிலைமை சரியாகும் வரை ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தம்..!!

மணிப்பூர் மாநிலத்தில் மேதே சமூகத்தினரை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில், 10 மலைப் பிரதேச மாவட்டங்களில் புதன்கிழமை நடந்த ‘பழங்குடியினர் ஒற்றுமைப் பேரணி’யில் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் பரவியதால், அண்டை மாவட்டங்களில் பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மேதே சமுதாயம் மற்றும் பழங்குடியின மக்களுக்கிடையே பல இடங்களில் ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியது. மாநிலம் முழுவதும் ஏராளமான கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டு, தீ வைக்கப்பட்டன. தர்பங் பகுதியில் … Read more

தேசியவாத காங். தலைவர் பதவி – ராஜினாமா முடிவைத் திரும்பப் பெறுவதாக சரத் பவார் அறிவிப்பு

மும்பை: கட்சித் தொண்டர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடரப்போவதாக சரத் பவார் தெரிவித்தார். முன்னதாக, காலையில் நடந்த கட்சிக் குழு கூட்டத்தில் சரத் பவாரின் ராஜினாமா நிராகரிக்கப்படுவதாகவும், அவரே தொடர்ந்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்றும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்த முடிவினை அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சரத் பவார், “எனது ராஜினாமா அறிவிப்பினைத் தொடர்ந்து தொண்டர்களுக்குள்ளும் மக்களிடத்திலும் ஓர் அமைதியின்மை ஏற்பட்டது. எனது நலன் விரும்பிகள் … Read more