“அடுத்தடுத்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வீழ்த்தப்படும்” – ‘லாஜிக்’ விவரித்த ராகுல் காந்தி

வாஷிங்டன்: அடுத்து வரும் மூன்று, நான்கு சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியால் பாஜக அழிக்கப்படும் என்றும், பெரும்பான்மை மக்களின் ஆதரவில்லாத ஆளுங்கட்சியை வீழ்த்துவதற்கான அடிப்படை விஷயங்கள் அனைத்தும் காங்கிரஸிடம் இருக்கிறது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மூன்று நகரங்களுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, அங்குள்ள பிரபல அமெரிக்க இந்தியரான ஃப்ரங்க் இஸ்லாம் வழங்கிய வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ராகுல் காந்தி பதில் அளித்துப் … Read more

ஆக.15 முதல் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 திட்டம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக வாக்காளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கும் திட்டம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சித்தராமையா கூறியது: “க்ருஹ ஜோதி திட்டம் மூலம் 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் ஜூலை 1 முதல் தொடங்கு. ஆனால், ஏற்கெனவே உள்ள நிலுவைத் தொகைகளை வாடிக்கையாளர்கள் கட்ட வேண்டும். க்ருஹ லக்‌ஷ்மி … Read more

அட கடவுளே… திருப்பதியில் பயங்கரம்… பக்தருக்கு நேர்ந்த துயரம்!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தின் மத்தியில் அமைந்துள்ளது கோவிந்தராஜ சுவாமி கோவில். இந்த கோவில் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. திருப்பதி மாவட்டத்தில் உள்ள பழமையான மற்றும் பெரிய கோவில்களில் ஒன்றாகவும் கோவிந்தராஜ சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலில் வழிபாடு செய்து வருகின்றனர். 48 மணி நேரத்தில் தென்மேற்கு … Read more

அமித் ஷா எச்சரிக்கையை அடுத்து, ஆயுதங்களுடன் சரணடைந்த வன்முறையாளர்கள்! ஊரடங்கு உத்தரவு தளர்வு

Manipur Violence: மணிப்பூரில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வேண்டுகோளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அமித்ஷாவின் எச்சரிக்கையை அடுத்து நான்கு மணி நேரத்தில் 140 ஆயுதங்கள் சரணடைந்த வன்முறையாளர்கள்.

Wrestlers Protest | “நீதி கிடைக்க வேண்டும். ஆனால்…” – மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் விளக்கம்

புதுடெல்லி: “மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறோம். ஆனால், சட்டபூர்வமான நடைமுறைகளைப் பின்பற்றியே அதனைப் பெறவேண்டும்” என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்தார். ஆங்கில ஊடகம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த இந்திய பொருளாதார கான்க்ளேவ் நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கலந்து கொண்டார். அதில் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் பற்றி பேசிய அமைச்சர், “அரசு பாரபட்சம் இல்லாத விசாரணையை விரும்புகிறது. அனைவருக்கும் நீதி வழங்கப்பட … Read more

மகிழ்ச்சியில் துள்ளும் கர்நாடகா பெண்கள்.. இனி மாசா மாசம் ரூ.2000.. கெத்து காட்டிய சித்தராமையா!

பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும் என்ற அசத்தல் வாக்குறுதிக்கு அம்மாநில முதல்வர் சித்தராமையா அதிரடியாக ஒப்புதல் அளித்தார். அதுமட்டுமின்றி, காங்கிரஸ் கூறிய 5 தேர்தல் வாக்குறுதிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால் அவை அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வரவுள்ளன. கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக்கட்டிலில் இருந்த பாஜகவை காங்கிரஸ் தூக்கியெறிந்தது. மொத்தமுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளில் 135-ஐ காங்கிரஸ் கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக, அங்கு முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவக்குமாரும் … Read more

மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு – உலகக்கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் வேதனை!

Wrestlers Protest: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரை கைது செய்யக்கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்திவரும் நிலையில், 1983இல் கிரிக்கெட் உலக்கோப்பை வென்ற இந்திய அணியினர் கூட்டாக இணைந்து மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

புதிய நாடாளுமன்றத்தில் ‘அகண்ட பாரத’ சுவரோவியம்: நேபாளத்தில் வலுக்கும் எதிர்ப்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சுவரோவியத்தால் நேபாளத்தில் சர்ச்சை வெடித்துள்ளது. அந்த சுவரோவியத்தில் அகண்ட பாரதம் தீட்டப்பட்டுள்ளது. அதில் நேபாளத்தின் லும்பினி இந்தியாவில் இருப்பது போல் தீட்டப்பட்டுள்ளது. லும்பினி என்பது நேபாளத்தில் உள்ள புத்தரின் பிறப்பிடம். அதனை இந்தியாவில் இருப்பதுபோல் அந்த சுவரோவியம் காட்டுவதால் சர்ச்சை கிளம்பியுள்ளது. புத்தர் பிறப்பிடமான லும்பினியை நேபாளம் தனது கலாச்சார அடையாளமாகப் போற்றுகிறது. இந்நிலையில், அதனை இந்தியா அகண்ட பாரத வரைபடத்தில் இணைத்துள்ளது. … Read more

அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை… எங்கெல்லாம் அடிச்சு நொறுக்கப் போகுது?

தென்மேற்கு பருவமழை அடுத்த 48 மணிநேரத்தில் தொடங்க உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழைவழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு தாமதமாகி வருகிறது. தற்போது வரை கேரளா மற்றும் கர்நாடாக மாநிலங்களின் கடலோர பகுதிகளில் பருவ மழைக்கு முந்தைய மழைதான் பெய்து வருகிறது. இருப்பினும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்தது.​ கேரளாவை அச்சுறுத்தும் புயல்… காத்திருக்கும் … Read more

“இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லுங்கள்” – பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கேள்வி

புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் பாஜக அரசும் பிரதமரும் மவுனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். “நரேந்திர மோடி ஜி இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகளைப் படித்துவிட்டு, குற்றம்சாட்டப்பட்டவர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று நாட்டுக்குச் சொல்லுங்கள்” என்று பிரிஜ் பூஷண் சிங்-க்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை விவரிக்கும் … Read more