கேரளா, கர்நாடகா, பிஹாரில் பாப்புலர் ஃபிரன்ட் அமைப்புடன் தொடர்புடைய 25 இடங்களில் என்ஐஏ சோதனை
புதுடெல்லி: கேரளா, கர்நாடகா, பிஹார் ஆகிய மாநிலங்களில், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புடன் தொடர்புடைய 25 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். பிஹார் சட்டப்பேரவையின் நூற்றாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பாட்னா சென்றார். அப்போது பிரதமர் மோடியை கொல்ல சதி திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அந்த சதி திட்டத்தை முறியடித்தனர். … Read more