நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி..!

நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாநில முதலமைச்சர்களும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இருக்கைகளில் இருந்து எழுந்துநின்று மோடி, மோடி என கோஷம் எழுப்பி, கைகளை தட்டி வரவேற்றனர். நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பை ஒட்டி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷுவுடன் இணைந்து சிறப்பு தபால் தலை மற்றும் 75 … Read more

கர்நாடகாவில் 24 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பு

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாதலைமையிலான அமைச்சரவையில், தினேஷ் குண்டு ராவ், ஹெச்.கே.பாட்டீல் உள்ளிட்ட 24 பேருக்கு அமைச்சர்களாக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து கடந்த 20-ம் தேதி முதல்வராக‌ சித்தராமையாவும், துணை முதல்வராக‌ டி.கே.சிவகுமாரும் பதவி ஏற்றனர். முதல்கட்டமாக பரமேஷ்வரா, கே.ஹெச்.முனியப்பா, எம்.பி.பாட்டீல், பிரியங்க் கார்கே உள்ளிட்ட‌ 8 அமைச்சர்கள் மட்டும் அன்றைய தினம் பதவி ஏற்றனர். அமைச்சரவையில் இடம் பிடிக்க … Read more

நாட்டின் சாம்பியன்களிடம் அடாவடியாக நடந்து கொண்ட பாஜக அரசு!!

நாட்டுக்காக பதக்கம் வாங்கிக் கொடுத்த வீரர், வீராங்கனைகளிடம் பாஜக அரசு கடுமையாக நடந்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் புகாருக்கு உள்ளான பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்காததை அடுத்து மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் போராட்டத்தை எப்படியாவது கலைத்துவிட வேண்டும் என ஒன்றிய அரசு சதித்திட்டம் தீட்டி வருகிறது. இதற்கிடையில் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது … Read more

9 பேர் உயிரிழப்புக்கு மன்னிப்பு கேட்டார் முதல்வர் மம்தா

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் பூர்பா மெதினிபூர் மாவட்டம் எக்ரா பகுதியில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் கடந்த 16-ம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. அதில் 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2.5 லட்சம் நிதியுதவி மற்றும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் மம்தா அறிவித்தார். இந்நிலையில், மம்தா நேற்றுகூறும்போது, ‘‘எக்ரா சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தலைமை செயலர் தலைமையில் ஒரு குழு தீவிர ஆய்வு செய்து 2 வாரங்களுக்குள் அரசுக்கு … Read more

தமிழில் ஒலித்த மந்திரங்கள்..! ஆசி வழங்கிய ஆதீனங்கள்.!! நிறுவப்பட்டது செங்கோல்.!!!

டெல்லியில் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். தமிழில் மந்திரங்கள் முழங்க, ஆதீனங்கள் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை, மக்களவை சபாநாயகர் இருக்கையின் அருகே பிரதமர் நிறுவியுள்ளார். 16 ஏக்கர் பரப்பளவு..! 4 தளங்கள்..! அதி நவீன வசதிகள்..! நாடு முழுவதும் இருந்து வரழைக்கப்பட்ட பிரத்யேகப் பொருட்களால் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு டெல்லியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது, நாடாளுமன்ற புதிய கட்டிடம்..! புதிய கட்டிடத்தை திறந்து வைக்க வந்த பிரதமர் நரேந்திர மோடி, முதலில் … Read more

புதிய நாடாளுமன்றம் அருகே போராட முயன்ற மல்யுத்த வீராங்கனைகள், விவசாயிகள் கைது

புதுடெல்லி: பாலியல் குற்றச்சாட்டில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதிய நாடாளுமன்ற கட்டிடம் அருகே போராட முயன்ற மல்யுத்த வீரர்கள் மற்றும் விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக நடைபெற்று வரும் இப்போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து … Read more

பள்ளி நண்பன் இறந்ததால் அதே தீயில் விழுந்து உயிரைவிட்ட சக நண்பன்!!

உயிர் நண்பன் இறந்ததால் அந்த இழப்பை தாங்க முடியாமல், அவரை எரித்த அதே தீயில் குதித்து சக நண்பன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரோசாபாத் அடுத்த நாக்லா கங்கர் பகுதியில் அசோக் (42) என்ற நபர் வசித்து வருகிறார். இவரும் காதியா பஞ்சவடி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் (40) என்பவரும் பல ஆண்டுகளாக நண்பர்கள். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அசோக்கிற்கு உடல்நல கோளாறு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு … Read more

‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ முழக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமையும் புதிய நாடாளுமன்ற கட்டிடம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஒரு முக்கிய சிறப்பு பெற்றுள்ளது. இதன் முக்கிய இடத்தில் நிரந்தரமாக வைக்கப்பட இருக்கும், ‘செங்கோல்’ தென்னிந்தியாவின் தொடர்பை காட்டுவதாக உள்ளது. இது மட்டுமின்றி ராஜஸ்தானின் பளிங்கு கற்கள், உத்தரபிரதேசத்தின் கம்பளத் தரை விரிப்புகள், திரிபுராவின் மூங்கில்கள் என பல்வேறு மாநிலங்களின் பங்களிப்புகள் புதிய கட்டிடத்தில் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் புதிய நாடாளுமன்றக் கட்டிடப் பணியாளர்கள் பல்வேறு தகவல்களை … Read more

செங்கோல் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளித்து கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

புதிய நாடாளுமன்றம் காலத்தின் கட்டாயம் என்றும், நாட்டு மக்கள் அனைவரின் விருப்பங்களை பிரதிபலிக்கும் வகையில்  அமைந்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஒரே இந்தியா, வலிமையான இந்தியா என்பதை பிரதிபலிக்கும் புதிய நாடாளுமன்றம் கட்டிடம், 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி நாட்டிற்கு அளிக்கப்பட்ட பரிசு என்றார். மக்களவையில் நிறுவப்பட்டுள்ள பெருமைவாய்ந்த செங்கோல் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளித்து கொண்டிருக்கும் எனறும் பிரதமர் குறிப்பிட்டார். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த … Read more

பரபரப்பு! இந்தியாவில் நிலநடுக்கம்!!

அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் காஷ்மீரிலும் உணரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் எல்லை பகுதியில், இன்று காலை 10.50 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.0 அளவில், 223 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் பல்வேறு மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுதவிர, இஸ்லாமாபாத், ராவல்பிண்டி ஆகிய நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க புவியியல் ஆய்வு … Read more