உத்தரகாண்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்… டெல்லியிலிருந்து காணொளி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர்

உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். டெல்லியிலிருந்து காணொளி வாயிலாக பச்சைக் கொடியை பிரதமர் அசைத்ததும் வந்தே பாரத் ரயில் தனது பயணத்தை துவங்கியது. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி வந்தே பாரத் ரயில்களில் உள்ள வசதிகள் பயணத்தை சுவாரஸ்யமாக மாற்றுவதுடன், மக்களின் பயண நேரத்தை வெகுவாக குறைப்பதாகவும் தெரிவித்தார். டேராடூன் – டெல்லி இடையிலான 314 கிலோமீட்டர் தூரத்தை 4 மணி நேரம் 45 நிமிடங்களில் … Read more

வங்கதேசத்திடம் 20 ரயில் இன்ஜின்கள் ஒப்படைப்பு

புதுடெல்லி: கடந்த 2019-ம் ஆண்டு அக்டோ பரில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது, அவரிடம் 20 அகலப்பாதை (பிஜி) ரயில் இன்ஜின்களை தயாரித்து அளிப்பதாக இந்தியா சார்பில் உறுதியளிக்கப்பட்டது. அந்த உறுதிமொழியை நிறைவேற்றும் விதமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 20 இன்ஜின்கள் வங்கதேசத்திடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டன. இந்த இன்ஜின்களை பயணிகள் மற்றும் சரக்கு ஆகிய இரண்டு ரயில் போக்குவரத்துக்கும் பயன்படுத்தலாம். இந்தியாவில் உருவாக்கப்பட்ட இன்ஜிகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வங்கதேச … Read more

ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டும் பாஜக – மத்திய அரசின் 9-ம் ஆண்டு நிறைவில் அஜ்மீர் வருகிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டுகிறது. தனது அரசின் 9-ம் ஆண்டு நிறைவில் அங்குள்ள அஜ்மீருக்கு மே 31-ல் பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகிறார். காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கிறது. இதற்கான பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் வகையில் வரும் மே 31-ல் பிரதமர் நரேந்திர மோடி அஜ்மீர் வருகிறார். அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகிறார். கடந்த ஒரு மாதத்தில் பிரதமர் மோடி ராஜஸ்தானுக்கு மூன்றாவது முறையாக … Read more

“கடந்த 9 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது” – பிரதமர் மோடி

இந்திய விளையாட்டுத் துறையில் கடந்த 9 ஆண்டுகளில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது என பிரதமர் மோடி கூறினார். பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 3வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் காணொளி காட்சி வாயிலாக பிரதமர் தொடங்கி வைத்தார். வரும் ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து 4 ஆயிரத்து 570 மாணவர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் பலனாக … Read more

ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதி: சிறையில் வழுக்கி விழுந்தார்

புதுடெல்லி: டெல்லி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், திகார் சிறையின் குளியலறையில் தடுமாறி விழுந்த காரணத்தால் தீனதயாள் உபாத்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வியாழக்கிழமை சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவக் காரணங்களுக்காக கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக சத்யேந்தர் ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திகார் சிறைத்துறை அதிகாரிகள் கூறும்போது,”சுமார் 6 மணியளவில் விசாரணைக் கைதியான சத்யேந்திர ஜெயின், சிஜே -7 மருத்துவமனையின் எம்ஐ அறையின் குளியலறையில் தடுமாறி விழுந்தார். பொதுவான பலவீனம் காரணமாக அவர் … Read more

“புதிய இந்தியாவைக் கட்டியெழுப்ப விரைவு நடவடிக்கைகள்” – பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: “20 ஓவர் கிரிக்கெட் விளையாட்டு போன்ற விரைவான இந்த சகாப்தத்தில், நாட்டு மக்கள் விரைவான முடிவுகளை விரும்புகின்றனர். அதற்கேற்ப அரசு அமைப்புகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (மே 25) காணொலி மூலம் அசாம் வேலைவாய்ப்பு முகாமில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “அசாம் மாநிலத்தில் அம்மாநில அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். கடந்த … Read more

புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் செங்கோலின் சிலிர்ப்பூட்டும் வரலாற்றுச் சிறப்புகள்..!!

விரைவில் நாடாளுமன்றத்தில் வைக்கப்படவுள்ள செங்கோலுக்கும் சோழர்கால ஆட்சிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. இதற்கு சோழா செங்கோல் என்று பெயரிட்டு அழைத்தாலும், அது பொந்தவே பொருந்தாது. கடந்த 24-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் செங்கோல் வைக்கப்படவுள்ளதாக அறிவித்தார். இதையடுத்து செங்கோல் என்ற இந்த சொல்லும், வரலாறும் மற்றும் அதனுடன் சேர்ந்த தமிழ் மரபும் தேசியளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் செல்லும் போது, அவர்கள் … Read more

ஹோட்டல் அறையில் இறந்துகிடந்த திரைப்பட இயக்குநர்!!

பிரபல திரைப்பட இயக்குநர் ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போஜ்புரி திரையுலகின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான. சுபாஷ் சந்திர திவாரி, படங்கள், குறும்படங்கள் இயக்கியுள்ளார். இவர் இயக்கி வரும் படத்திற்காக உத்தரப்பிரதேசம் சென்றார். அங்கு சோனபத்ரா என்ற இடத்தில் ஹோட்டல் ஒன்றில் படக்குழுவுடன் தங்கி இருந்தார். இந்நிலையில், நேற்று அறைக்கு சென்ற அவர், பின்னர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. பதற்றமடைந்த படக்குழுவினர் ஹோட்டல் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து … Read more

‘புதிய நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும்’ – உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளன. அதோடு சுமார் 20 எதிர்க்கட்சிகள் இந்த விழாவை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளன. இந்தச் சூழலில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த … Read more

புதிய பார்லிமென்ட் திறப்பு விழா: கலந்துக்கொள்ளும், புறக்கணிக்கும் அரசியல் கட்சிகளின் முழு பட்டியல்

New Parliament Inauguration: புதிய நாடளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா விவகாரம் அரசியல் களத்தை பிளவுபடுத்தியுள்ளது. புதிய நாடளுமன்றக் கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சிகள் மற்றும் புதிய நாடளுமன்றக் கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் அரசியல் கட்சிகளின் பட்டியல் குறித்து பார்ப்போம்.