சித்தராமையா பதவியேற்பு விழாவைப் புறக்கணித்த தலைவர்கள்: 2024 மக்களவை தேர்தலுக்காவது ஒன்றிணைவார்களா?

புதுடெல்லி: கர்நாடகாவில் தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. முதல்வராக சித்தராமையா பதவியேற்ற விழா மேடையில் எதிர்க்கட்சிகள் 2018 இல் இருந்ததை விட குறைவாகவே காணப்பட்டது பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது. மேலும், பாஜகவை எதிர்க்கும் இவர்கள் 2024 மக்களவை தேர்தலிலாவது ஒன்றிணைவார்களா? எனும் கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2018 இல் மதசார்பற்ற ஐக்கிய ஜனதா தளத்தின் குமாரசாமி கர்நாடகா முதல்வராகப் பதவி ஏற்றிருந்தார். இதன் விழாவில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மேடை ஏறி பெருமிதம் காட்டினர். … Read more

மூத்த குடிமக்களுக்கு ஏழுமலையான் தரிசனம் – ஆன்லைனில் டிக்கெட்டுகள் இன்று வெளியீடு

திருமலை: கோடை விடுமுறையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு பக்தர்கள் படை எடுத்து வருகின்றனர். இதனால் தர்ம தரிசனம் வாயிலாக சுவாமி தரிசனம் செய்ய சாதாரண நாட்களில் 18 முதல் 24 மணி நேரமும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 36 மணி நேரத்துக்கும் மேலாகிறது. இதனால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தேவஸ்தானத்தினர் விஐபி சிபாரிசு கடிதங்களை ஏற்க மாட்டோம் என அறிவித்துள்ளனர். இந்நிலையில், வரும் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் சுவாமியை தரிசனம் … Read more

ஜூலை மாதம் விண்ணில் செலுத்தப்படும் சந்திரயான் 3 விண்கலம்..!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் நம் நாட்டுக்குத் தேவையான காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை தகவல்கள், தகவல் தொடர்பு, தொலையுணர்வு உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன், வழிகாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இவற்றுடன் வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவின் சந்திரயான் திட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. 2008ம் ஆண்டு ஏவப்பட்ட சந்திரயான் திட்டம் வெற்றி பெற்ற நிலையில், 2019ம் … Read more

குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை எதிர்த்து அவதூறு வழக்கு – பிபிசிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் குஜராத் படுகொலை குறித்த ஆவணப்படத்தை வெளியிட்ட தாகக் கூறி தொடர்ந்த வழக்கில் பிபிசி செய்தி நிறுவனம் பதிலளிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2002-ம் ஆண்டு குஜராத்தில் மத வன்முறைகள் மூலம் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது அம்மாநில முதல்வராக இருந்தவர் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி. 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது முஸ்லிம்கள் தேடித் தேடி படுகொலை செய்யப்பட்டனர். இது … Read more

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அல்கொய்தாவுக்கு நிதித் திரட்டியதாக 4 வங்கதேசத்தவர் கைது!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அல்கொய்தா இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேரை தீவிரவாதத் தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனர். வங்கதேசத்தை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக குடியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து ஏடிஎஸ் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அல்கொய்தாவுக்கு நிதி திரட்டி, இளைஞர்களை மூளைச் சலவை செய்து வந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் Source link

இவர் தான் ரியல் ஹீரோ..! கவ்வி சென்ற சிறுத்தையிடம் சண்டை போட்டு காப்பாற்றிய துணிச்சல் தந்தை..!

குஜராத் மாநிலம் வதோததரா மாவட்டத்தில் உள்ள தஹோத் பகுதியில் உள்ள புல்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அங்கித் தாமோர். கூலித் தொழிலாளரான இவருக்கு, வர்ஷா மற்றும் காவ்யா என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். சம்பவம் நடந்த ஞாயிறு அதிகாலை வேளையில், இவர் தனது இரு மகள்களுடன் தூங்கி கொண்டிருந்தார். இரவு வேலையில் இயற்கை உபாதை கழிக்க வீட்டை விட்டு வெளியே சென்று வந்த அங்கித் கதவை மூட மறந்து திறந்து வைத்தே தூங்கியுள்ளார். அதிகாலை மூன்று மணி … Read more

2000 ரூபாய் நோட்டுகளை வங்கியை தவிர எங்கெல்லாம் மாற்றலாம் தெரியுமா?

இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து உடனடியாக அமலுக்கு வரும் வகையில், 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட வேண்டாம் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.இதுதவிர, இன்று முதல் ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூ.2000 நோட்டுக்களை மாற்றுவது தொடர்பாக ரிசர்வ் வங்கி சில தகவல்களை தெரிவித்துள்ளது. இன்று முதல் முதல் எந்த வங்கியிலும் நீங்கள் ரூபாய் நோட்டுகளை மாற்றலாம் … Read more

உ.பி.யில் விபத்தில் சிக்கிய பைக்கை 12 கி.மீ. தூரம் இழுத்து சென்ற அரசு பஸ்

ஆக்ரா: உத்தரபிரதேசத்தில் விபத்தில் சிக்கிய மோட்டார் பைக்குடன் அரசு பஸ் ஒன்று சுமார் 12 கி.மீ. சென்றது. இதில் பைக் ஓட்டி வந்தவர் உயிரிழந்தார். உத்தரபிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு உ.பி. போக்குவரத்துக் கழக பஸ் ஒன்று ஜி.டி. சாலையில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு ஓட்டல் அருகில் விகாஸ் வர்ஷ்னே (32) என்பவர் சாலையோரத்தில் தனது பைக்கை நிறுத்திவிட்டு அதன் அருகில் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் … Read more

வங்கிகளில் இன்று முதல் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் – ரிசர்வ் வங்கி!

இன்று முதல் வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததையடுத்து டெல்லி உள்ளிட்ட நகரங்களில் வாடிக்கையாளர்களின் கூட்டத்தை சமாளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சிரமமின்றி மாற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்றும் நோட்டுகளை மாற்ற அவசரம் காட்ட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. செப்டம்பர் 30 வரை நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் … Read more

வங்கிகளில் இன்று முதல் மாற்றலாம் – பெரும்பாலான ரூ.2000 நோட்டு செப்.30-க்குள் திரும்ப பெறப்படும்

புதுடெல்லி: வங்கிகளில் இன்று முதல் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான ரூ.2000 நோட்டுகள் செப்.30-ம் தேதிக்குள் திரும்ப பெறப்பட்டுவிடும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்பிறகு, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நேற்று முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மேற்கத்திய நாடுகளில் … Read more