7th Pay Commission: அகவிலைப்படிக்கு பிறகு அடிப்படை ஊதியத்தில் அதிகரிப்பு… விரைவில் வருகிறது மாஸ் செய்தி!!

7வது ஊதியக்கமிஷன்: வரும் நிதி ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு ஆண்டாக இருக்கும். தொடர்ச்சியாக அவர்களுக்கு கிடைத்த நல்ல செய்திகளுக்குப் பிறகு, தற்போது அடிப்படை சம்பளத்தில் திருத்தம் செய்வது தொடர்பான விவாதம் தொடங்கியுள்ளது. வரும் ஆண்டில் ஊதியக்கமிஷனை ரத்து செய்து புதிய பார்முலாவை அரசு அமல்படுத்த உள்ளது. இதில் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அரசு மாற்றக்கூடும். அதன் மாற்றத்தால், ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய ஏற்றம் ஏற்படலாம். ஃபிட்மெண்ட் ஃபாக்டரை மாற்றியமைக்க வேண்டும் என்ற மத்திய … Read more

ஏப்ரல் 1ம் தேதி முதல் UPI வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் – Paytm விளக்கம்

2,000 ரூபாய்க்கு அதிகமான UPI வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு ஏப்ரல் 1 முதல் 0.5 சதவீதத்திலிருந்து 1.1 சதவீதம் வரை இன்டர்சேன்ஜ் கட்டணம் வசூலிக்கும்படி தேசிய பேமெண்ட் கார்ப்பரேசன் அமைப்பு பரிந்துரைத்துள்ளது.  இதுதொடர்பாக தேசிய பேமெண்ட் கார்ப்பரேசன் அண்மையில்  அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ப்ரீபெய்ட் பேமெண்ட் கட்டணங்கள் , UPI மூலம் மேற்கொள்ளப்படும் வர்த்தக பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும் என்றும், எரிபொருளுக்கு  0.5 சதவீதமும்,  தொலைத் தொடர்பு துறை, தபால் அலுவலகம், கல்வி, விவசாயம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு  0.7 சதவீதமும், சூப்பர் … Read more

மனைவி தொடுத்த குடும்ப வன்முறை வழக்கில் கிரிக்கெட் வீரரின் கைது வாரண்ட் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு

கொல்கத்தா: மனைவி தொடுத்த வழக்கில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு எதிரான கைது வாரண்ட் தடையை நீக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.  இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி – அவரது மனைவியான மாடல் அழகி ஹசின் ஜஹான் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு இருந்தது. முகமது ஷமிக்கும் வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக ஹசின் ஜஹான் குற்றம்சாட்டினர். இவ்விவகாரம் தொடர்பாக 2018ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி, ஜாதவ்பூர் காவல் … Read more

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா பரவல்: ஒரே நாளில் 2,151 பேருக்கு தொற்று உறுதி

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 2,151 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், 5 மாதங்களுக்கு பின்னர் தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 11,903 -ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 2,151 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 11,903 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்று … Read more

ஒரு வருடத்தில் ஒரு மில்லியன் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு நிச்சயம்

நியூடெல்லி: மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அமைப்புகளின் தேவைக்கேற்ப, காலிப் பணியிடங்களை நிரப்பும் பணிகள் எப்போதும் தொடரும்ம் தொடர்ச்சியான செயல் என்று மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார். மார்ச் 1, 2021 நிலவரப்படி, ரயில்வேயில் அதிகபட்சமாக 2.93 லட்சம் உட்பட, பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் 9.79 லட்சத்திற்கும் அதிகமான காலியிடங்கள் இருந்ததாக என்று மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் புதன்கிழமை தெரிவித்தார். மத்திய அரசின் … Read more

உள்நாட்டில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயிலை ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: உள்நாட்டில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயிலை ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மக்களவை உறுப்பினர் ரஞ்சன்பென் தனஞ்செய் பாட் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.

ஆம் ஆத்மிக்கு தேசியக் கட்சி அங்கீகாரம்: பரிசீலனையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியை தேசியக் கட்சியாக அங்கீகரிப்பது குறித்து பரிசீலிக்கப்படுவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் புதன்கிழமை (மார்ச் 29) தெரிவித்தார். இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், கர்நாடகா தேர்தல் தொடர்பாக புதன்கிழமை டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய அங்கீகாரம் அளிப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தலைமைத் தேர்தல் ஆணையர், “அது பரிசீலனையில் உள்ளது. அதுகுறித்து விரைவில் உங்களுக்குத் தெரிவிப்போம்” … Read more

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2023: பாஜக மாஸ்டர் பிளான்… காங்கிரஸ் அவ்வளவு தான்!

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் மே 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பாஜகவின் வியூகம் என்னவென்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் 1983 முதல் 2018 வரை ஒருமுறை கூட பாஜக தனிப் பெரும்பான்மை பெற்றதில்லை. அதை மாற்றி காட்டும் அளவிற்கு சிறப்பான செயல்திட்டங்களை உருவாக்கி அக்கட்சி செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. டபுள் எஞ்சின் அரசு இதுபற்றி அக்கட்சியை சேர்ந்தவர்களிடம் விசாரிக்கையில், தனிப் பெரும்பான்மை உடன் வெற்றி பெற்றால் ஓர் அரசு எந்த அளவிற்கு நலத்திட்டங்களை … Read more

கொரோனா காலத்தில் 2,358 குழந்தை திருமண வழக்குகள் பதிவாகி உள்ளதாக அமைச்சர் ஸ்மிருதி ராணி தகவல்

டெல்லி: கொரோனா காலத்தில் 2,358 குழந்தை திருமண வழக்குகள் பதிவாகி உள்ளதாக அமைச்சர் ஸ்மிருதி ராணி தகவல் தெரிவித்துள்ளார். குழந்தை திருமணங்களை தடுக்க கூடுதல் அதிகாரிகள் நியமிக்க மாநிலங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி எழுத்துபூர்வமாக பதில் அளித்தார்.

பயங்கரவாதத்துக்கான காரணங்களை நியாயப்படுத்தக் கூடாது: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அஜித் தோவல் பேச்சு

புதுடெல்லி: பயங்கரவாதத்துக்கான காரணம் எதுவாக இருந்தாலும் அதனை நியாயப்படுத்தக் கூடாது என்று பாதுகாப்பு ஆலோசகர்களுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. 2001-ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் முழுமையான உறுப்பு நாடாக இந்தியா கடந்த 2017, … Read more