ஜஸ்ட் மிஸ்.. டீ சாப்பிட்டு கொண்டிருந்த முதியவர் செல்போன் திடீரென தீப்பற்றியது..! பரபரப்பு வீடியோ

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் 76 வயது முதியவர் இன்று காலை தனது சட்டைப் பையில் வைத்திருந்த செல்போன் வெடித்துத் தீப்பிடித்ததால் தீக்காயங்களில் இருந்து அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார். ஒரு மாதத்திற்குள் மாநிலத்தில் இதுபோன்ற மூன்றாவது சம்பவம் இதுவாகும், மொபைல் போன் திடீரென வெடித்தது மற்றும் அந்த நபர் இங்குள்ள மரோட்டிச்சல் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது இது நிகழ்ந்தது. இந்த சம்பவத்தின் காட்சிகள் வைரலாகி, டிவி சேனல்களிலும் காட்டப்பட்டது, அதில் அந்த நபர் … Read more

கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வருக்கு அழைப்பு.!

கர்நாடக மாநில பொதுத் தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடித்து வெற்றி பெற்றதையடுத்து, கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா 20.5.2023 அன்று பதவியேற்கவுள்ளதால், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சித்தராமையா ஆகியோர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேற்று (18.5.2023) தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு 20.5.2023 அன்று பெங்களூரில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கர்நாடகாவின் … Read more

அர்ஜுன்ராம் மேக்வாலுக்கு முக்கியத் துறை பின்னணியில் ராஜஸ்தான் அரசியல்?

புதுடெல்லி: அர்ஜுன்ராம் மேக்வாலுக்கு (69) முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்துறை அளிக்கப்பட்டதன் பின்னணியில் ராஜஸ்தான் அரசியல் உள்ளதாக தெரிகிறது. கர்நாடகாவை அடுத்து ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானை மீண்டும் கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டுகிறது. இம்மாநிலத்தில் சுமார் 16 சதவீதம் உள்ள தலித் வாக்குகளில் மேக்வால் சமூகத்தினர் சுமார் 60 சதவீதமாக உள்னர். இதனால் மேக்வால் சமூக வாக்குகள் ராஜஸ்தானில் பாஜகவிற்கு வெற்றியை தேடித்தரும் … Read more

மத்திய சட்ட அமைச்சராக அர்ஜுன் ராம் மேக்வால் நியமனம் – கிரண் ரிஜிஜு இலாகா மாற்றம்

புதுடெல்லி: மத்திய சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு மாற்றப்பட்டு, புவி அறிவியல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, ராஜஸ்தானை சேர்ந்த மத்திய இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சட்டத் துறையின் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். மத்திய சட்ட அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத் 2021 ஜூலையில் மாற்றப்பட்டு, அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜுஜு, சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவரது சர்ச்சைக்குரிய கருத்துகளால், மத்திய சட்ட அமைச்சகத்துக்கும், நீதித் … Read more

பயங்கரவாதிகளின் மறைவிடத்தை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர்.. வெடி பொருட்களை கைப்பற்றி அழிப்பு..!

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர், அங்கிருந்த வெடி பொருட்களை கைப்பற்றி அழித்தனர். பயங்கரவாத தடுப்பு சிறப்பு நடவடிக்கை குழுவும், ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையும் இணைந்து சலானி பகுதியில் தீவிரவாத தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டன. அப்போது பயங்கரவாதிகளின் மறைவிடம் என்று சந்தேகிக்கப்படும் இடத்தில் வெடி பொருட்கள் இருந்ததை ராணுவத்தின் மோப்ப நாய்கள் கண்டுபிடித்தன. வெடி பொருட்களை அந்த கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். Source link

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நாளை கூடுகிறது ஜி-7 மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நாளை கூடவுள்ள ஜி-7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் வளர்ந்த 7 நாடுகளைக் கொண்ட ஜி-7 கூட்டமைப்பின் மாநாட்டை இந்த வருடம் ஜப்பான் நடத்துகிறது. உலகில் முதல் முறையாக அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான ஹிரோஷிமா நகரில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. ஜப்பான் பிரதமர் கிஷிடோவின் சொந்த ஊர் என்பதாலும், அணுஆயுத தாக்குதலுக்கு எதிரான உறுதிப்பாட்டை வலியுறுத்துவதற்கான சிறந்த இடம் என்பதாலும் … Read more

காஷ்மீரில் நடைபெறுகிறது ஜி20 உச்சி மாநாட்டின் சுற்றுலா பணிக்குழுக் கூட்டம்- பலத்த பாதுகாப்பு

ஜம்மு காஷ்மீரில் ஜி20 அமைப்பின் சுற்றுலா பணிக்குழு கூட்டம் நடைபெற உள்ளதையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரில் வரும் மே 22 முதல் 24 ஆம் தேதி வரை அந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளதாக காஷ்மீர் ஏடிஜிபி விஜயகுமார் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்புப்படை மற்றும் ராணுவத்தினரின் உதவியை நாடி உள்ளதாகவும் டிரோன்களை கண்டறிந்து தாக்கும் … Read more

‘சட்ட அமைச்சராக பணியாற்றியதை பாக்கியமாக கருதுகிறேன்’- மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக பணியாற்றியதை நான் பாக்கியம் மற்றும் கவுரவமாக கருதுகிறேன் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையில் வியாழக்கிழமை சிறிய மாற்றும் செய்யப்பட்டது மத்திய சட்டத்துறை அமைச்சாராக இருந்த கிரண் ரிஜிஜு, புவி அறிவியல் துறை அமைச்சராக மாற்றப்பட்டார். சட்ட அமைச்சராக அர்ஜுன் ராம் மேக்வால் நியமிக்கப்பட்டார். பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து … Read more

4 உயிர் காக்கும் மருந்துகளை விற்பனை செய்யத் தடை விதித்தது ‘ஃபைசர்’ நிறுவனம்

மேக்னக்ஸ், மேக்னக்ஸ் ஃபோர்ட், ஜோஸின், மேக்னமைசின் ஆகிய 4 உயிர்காக்கும் மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டாம் என மருத்துவர்களுக்கு ஃபைசர் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அந்த மருந்துகளைத் தயாரிக்கும்போது நேர்ந்த குறைபாடுகளால் அவற்றை நோயாளிகளுக்கு,  குறிப்பாக தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு வழங்க வேண்டாம் எனவும், மருந்தகங்களில் விற்பனை செய்ய வேண்டாம் எனவும் ஃபைசர் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் முன்னனி மருந்து தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ஃபைசரின் இந்த மருந்துகள் குஜராத்தின் வதோதராவில் இயங்கிவரும் அஸ்ட்ரல் ஸ்டெரிடெக் நிறுவனத்தில் … Read more

ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சித்தராமையா!!

கர்நாடக ஆளுநரை சந்தித்து சித்தராமையா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து, புதிய முதலமைச்சர் யார் என்பதில் இழுபறி நீடித்தது. முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இவர்களில் யார் முதலமைச்சர் என்ற கேள்வி எழுந்தது. சித்தராமையாவும், டி.கே சிவகுமாரும் டெல்லி சென்றனர். இருவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை தனித்தனியே சந்தித்து பேசினர். இதனால் … Read more