ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 3பேர் உயிரிழப்பு

கேரளா: கேரளா மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தீயை கண்டதும் ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். சஹாரா(2), ரஹ்மத், சௌபிக் ஆகிய 3 பேர் ரயில்வே தண்டவாளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.

நிலம் அளிக்கும் விவசாயிகளுக்கு சுங்கவரியில் பங்கு அளிக்க முடிவு..!!

நாடு முழுவதிலும் நகரப் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் இவை அமைக்கப்படுகின்றன. இந்த சுங்கச்சாவடிகளை அமைக்கும் தனியார் அல்லது அரசு நிறுவனங்களுக்கு அதில் சுங்கவரி வசூல் செய்ய உரிமை அளிக்கப்படுகிறது. இதற்கான நிலங்கள், விவசாயிகள் மற்றும் இதர பொதுமக்களிடம் இருந்து அரசால் கையகப்படுத்தப்படுகிறது. இதற்காக அரசு நிர்ணயிக்கும் விலை மட்டுமே நிலம் அளித்தவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த முறையில், மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் ஒரு புதிய முடிவு … Read more

மீண்டும் பயன்படுத்தும் வகையிலான ராக்கெட்டை பூமியில் தரையிறக்கும் சோதனை வெற்றி: இஸ்ரோ சாதனையில் மேலும் ஒரு மைல்கல்

பெங்களூரு: செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த பயன்படும் ராக்கெட்டுகள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் புதிய ராக்கெட் தயாரிக்க செலவு அதிகரிக்கிறது. இதை கருத்தில் கொண்டு மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் புதிய ராக்கெட்டை கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். பல முறை பயன்படுத்த முடியும் இந்நிலையில் ஃபால்கன் வகை ராக்கெட்கள் கண்டுபிடிக்கப் பட்டன. இது செயற்கைக்கோள்கள் மட்டுமல்லாது மனிதர்களையும் விண்ணுக்குக் கொண்டு சென்றுமீண்டும் பத்திரமாக தரையிறங்கும் வகையில் வடி வமைக்கப் பட்டுள்ளது. இதனை … Read more

கூட்டு பலாத்காரம் செய்து 17 பெண்கள் படுகொலை: குஜராத் கலவர வழக்கில் 26 பேர் விடுதலை

கோத்ரா: குஜராத் மாநில முதல்வராக தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி இருந்த போது கடந்த 2002ல் கோத்ராவில் நடந்த ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கலவரங்கள் நடந்தன.  இது தொடர்பாக பல வழக்குகளின் விசாரணைகள் தற்போதும் நடைபெற்று வருகிறது. இவற்றில் கலோல், டிலோஸ் உள்ளிட்ட இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்கள் பற்றிய விசாரணையும் நடந்து வந்தது. அங்கு 17 முஸ்லிம் பெண்கள் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் … Read more

இனி கர்ப்பிணிகள், குழந்தைகள்,முதியவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம்.. அமலுக்கு வந்த புதிய கட்டுப்பாடுகள்..!!

இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3,824 ஆக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 22-ம் தேதி பிரதமர் மோடி அதிகரிகளுடன் உயர் மட்ட ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, கேரளாவில் நேற்றைய நிலரவப்படி, கொரோனா … Read more

இன்று முதல் பள்ளிகளில் அரை நாள் வகுப்புகள்..!!

ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் பின்பற்றப்படும் நடைமுறையைப் போன்று இந்த ஆண்டும் ஆந்திராவில் இன்று 3-ம் தேதி முதல் வரும் 30-ம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரை நாள் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 7.45 மணி முதல் மதியம் 12.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும். வரும் 30-ம் தேதி பள்ளி கடைசி வேலை நாளாகும். இம்மாதம் 2-வது சனிக்கிழமை வழக்கமாக விடுமுறை விடப்படும். ஆனால் … Read more

முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை அதிகரிக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி அவர் கன்னியாகுமரியில் தனது யாத்திரையை தொடங்கினார். தொடர்ந்து அவர் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம் உட்பட சுமார் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்களில் சுமார் 3,500 … Read more

ராகுல் தகுதி நீக்கம் குறித்த மேற்குலக நாடுகளின் கருத்துக்கு ஜெய்சங்கர் பதிலடி

காங்கிரஸ் எம்பி ராகுல் தகுதி நீக்கம் குறித்து கருத்துத் தெரிவித்தது மேற்கத்திய நாடுகளின் மோசமான செயல் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம் செய்துள்ளார். பெங்களூருவில் பேசிய அவர், மேற்குலகில் நீண்ட காலமாக பிறரைப் பற்றி கருத்து சொல்லும் தீய பழக்கம் இருந்து வருவதாகக் குறிப்பிட்டார். மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது தங்களுக்கு கடவுள் கொடுத்த வரம் என மேற்கத்திய நாடுகள் நினைப்பதாகவும் ஜெய்சங்கர் விமர்சித்தார். Source link

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க தேர்தலுக்கு முன் காங். உள்கட்சி பூசலை சரி செய்ய வேண்டும்: தேவ கவுடா பேட்டி

பெங்களூரு: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க, பொது தேர்தலுக்கு முன், காங்கிரஸ் உள்கட்சி பூசலை சரி செய்ய வேண்டும்,’’ என்று முன்னாள் பிரதமர் தேவ கவுடா தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் தேவ கவுடா பெங்களூருவில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:  கர்நாடக மாநில தேர்தல் களத்தில் பாஜ, காங்கிரஸ் என்ற இரு தேசிய கட்சிகளிடையே வலுவான போட்டி இருந்தாலும், இதில் மதசார்பற்ற ஜனதா தளம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மதசார்பற்ற ஜனதா தளம் (மஜத) ‘பஞ்சரத்னா’ என்ற அனைத்தையும் உள்ளடக்கிய சமுதாய … Read more

டெல்லியில் இன்று சமூக நீதிக்கான தேசிய மாநாடு – திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 24 கட்சிகள் பங்கேற்பு

சென்னை: சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு இன்று (ஏப். 3) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டெல்லியில் நடைபெறஉள்ளது. அவர் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக மாநாட்டில் உரையாற்றுகிறார். டெல்லி இந்தியா கேட் அருகில் இன்று மாலை 4.30 முதல் 7 மணிவரை நடைபெறும் இந்த மாநாட்டில், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள் மற்றும் 24 கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் நேரிலும், காணொலி வாயிலாகவும் பங்கேற்க … Read more