பிரதமர் மோடியின் எம்ஏ பட்டம் விவகாரம்: மத்திய தகவல் ஆணைய உத்தரவை ரத்து செய்தது குஜராத் ஐகோர்ட்

அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் முதுகலை பட்டம் குறித்த தகவல்களை அளிக்க உத்தரவிட்ட மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை குஜராத் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி எம்ஏ பட்டம் பெற்றதற்கான சான்றிதழ் நகலை வழங்கக் கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடந்த 2016-ம் ஆண்டு மத்திய தகவல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருந்தார். அவரது கடித்தைப் பரிசீலித்த அப்போதைய மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சாரியலு, பிரதமர் மோடி முதுகலை பட்டம் … Read more

பிரதமர் மோடி டிகிரி படித்தது உண்மையா.? கேள்வி கேட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம்.!

பிரதமர் மோடி படித்த இளநிலை மற்றும் முதுகலை பட்டங்களை பற்றி தகவல்களை வழங்குமாறு கேட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் படித்த படிப்பு குறித்த சர்ச்சை பிரதமர் மோடியின் தேர்தல் ஆவணங்கள் படி, அவர் குஜராத் பல்கலைக்கழகத்தில் 1978 இல் இளநிலை பட்டம் பெற்றதாகவும், 1983 இல் டெல்லி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றதாகவும் கூறுகின்றன. ஆனால் அவர் குறிப்பிடும் காலங்களில் Entire Political Science என்ற படிப்பே … Read more

ராகுல்காந்தி விவகாரத்தில் வெளிநாடுகளின் ஆதரவு தேவையில்லை -கபில் சிபல்

ராகுல் காந்தி விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீட்டை தாங்கள் விரும்பவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை பெற்று, ராகுல் எம்.பி. பதவியை இழந்திருக்கும் சூழலில், அதுகுறித்து தாங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாக ஜெர்மன் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார். இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் நன்றி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ராகுல் விவகாரத்தில் நீதியை நோக்கி நடைபோட வெளிநாடுகளின் ஊன்றுகோல் தங்களுக்குத் தேவையில்லை என்றும் … Read more

கேரளாவில் வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்: புன்னமடை காயல் கரையோரத்தில் பிரமாண்ட ஏற்பாடு

கேரளா: கேரளாவில் நாளை வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வைக்கம் நூற்றாண்டு விழா நாளை கேரள அரசு சார்பில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் கேரள முதலமைச்சருடன் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். புன்னமடை காயல் கரையோரத்தில் இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு சார்பில் ஒரு லட்சம் பேர் பங்கேற்க இருக்கின்றனர். இரு மாநில முதலமைச்சர்களும் விழாவில் கலந்து கொள்ள இருப்பதால் போலீஸ் … Read more

ரூ.5,500 கோடி மதிப்பில் பாதுகாப்புத் துறை ஒப்பந்தம்

புதுடெல்லி: ராணுவத் தளவாட தயாரிப்புத் தொடர்பாக பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்புத் துறை ரூ.5,498 கோடி மதிப்பில் 10 ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. ஹெலிகாப்டர்களில் பயன்படுத்துவதற்கான 90 மின்னணு போர் சாதனங்கள் தயாரிப்பு, ஆகாஷ் ஏவுகணை அமைப்பின் பராமரிப்பு உட்பட 10 திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த 10 ஒப்பந்தங்களின் மதிப்பு ரூ.5,498 கோடி என்று பாரத் எலக்ட்ரானிக்ஸ் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து பாரத் எலக்ட்ரானிக்ஸ் கூறுகையில், “இந்தியாவை சுயசார்பாக மாற்றும் மத்திய அரசின் முயற்சிக்கும், … Read more

கேரளா மூணாறு அருகே அரிசி கொம்பன் காட்டு யானையை பிடிக்கக்கோரி 2-ம் நாளாக பொதுமக்கள் போராட்டம்

கேரளா: மூணாறு அருகே அரிசி கொம்பன் காட்டு யானையை பிடிக்கக்கோரி 2-ம் நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூணாறு அருகே சுற்றி திரியும் அரிசி கொம்பன் யானையை பிடிக்க கேரளா ஐகோர்ட் தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னகானல் பஞ்சாயத்துக்குட்பட்ட சிங்குகண்டம் பகுதியில் சாலையோரத்தில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ரூ.500 நோட்டு வீசிய டி.கே.சிவகுமார் மீது 3 பிரிவுகளில் வழக்கு

பெங்களூரு: காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் கடந்த 28ம் தேதி மண்டியா மாவட்டத்தில் உள்ள பெவினஹள்ளியில் ‘மக்களின் குரல்’ பேரணியில் பங்கேற்றார். அவரை உற்சாகமூட்டும் வகையில் காங்கிரஸார் மலர்களை தூவி வரவேற்றனர். அப்போது மகிழ்ச்சி அடைந்த டி.கே.சிவகுமார் 500 ரூபாய் நோட்டுகளை மேளக் கலைஞர்கள் மீது வீசினார். இதுகுறித்து புகாரின் அடிப்படையில் மண்டியா மாவட்டத்தின் ஆட்சியர் கோபால கிருஷ்ணா வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து மண்டியா ஊரக போலீஸார் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் மீது 3 … Read more

பெங்களூருவில் 19 வயது பெண்ணை காரில் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள் கைது

பெங்களுரு: பெங்களூருவில் 19 வயது பெண்ணை காரில் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிப்ரவரி 25-ம் தேதி 19 வயது இளம்பெண் தனது நண்பருடன் புகைபிடித்துக் கொண்டிருந்தபோது 4 இளைஞர்கள் தகராறு செய்துள்ளனர். தகராறில் ஈடுப்பட்ட 4 இளைஞர்கள் இளம்பெண்ணை தங்களது காரில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.

கோச்சிங் சென்டர்கள் கலாச்சாரம் | திமுக எம்.பி. கனிமொழி சோமு கேள்வி; மத்திய அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற உயர் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களைக் குறிவைத்து தனியார் கோச்சிங் சென்டர்கள் பணம் பறிப்பது உள்ளிட்ட மாணவர்களைச் சுரண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது பற்றி மாநிலங்களவையில் திமுக எம்.பி., டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஸ் சர்க்கார் அளித்த பதில்: மாணவர்களின் கற்றல் திறனை ஒரே நேரத்தில் மொத்தமாக மதிப்பிடும் நடைமுறைதான் தற்போது நாடு முழுவதும் இருக்கிறது. இந்த நடைமுறைதான் தற்போதைய … Read more

கொசுவர்த்தி சுருளால் ஏற்பட்ட தீ விபத்தில் 1 குழந்தை, 1 பெண் உள்பட 6 பேர் உயிரிழப்பு…!

டெல்லியில் கொசுவர்த்தி சுருள் மெத்தையில் பட்டு தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தீக்காயம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தனர். சாஸ்திரி பார்க் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இரவு கொசுவர்த்தி சுருளை ஏற்றிவைத்துவிட்டு உறங்கிக்கொண்டிருந்தபோது, கொசுவர்த்தி சுருள் மெத்தையில் விழுந்து தீப்பிடித்துள்ளது. நச்சுப்புகையால் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் சுய நினைவை இழந்துள்ளனர். தீ விபத்து மற்றும் மூச்சுத்திணறலால் உறங்கிக்கொண்டிருந்த ஒரு குழந்தை, ஒரு பெண் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 2 பேர் மூச்சுத்திணறல் காரணமாக ஆபத்தான … Read more