பிரதமர் மோடி டிகிரி படித்தது உண்மையா.? கேள்வி கேட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம்.!

பிரதமர் மோடி படித்த இளநிலை மற்றும் முதுகலை பட்டங்களை பற்றி தகவல்களை வழங்குமாறு கேட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் படித்த படிப்பு குறித்த சர்ச்சை

பிரதமர் மோடியின் தேர்தல் ஆவணங்கள் படி, அவர் குஜராத் பல்கலைக்கழகத்தில் 1978 இல் இளநிலை பட்டம் பெற்றதாகவும், 1983 இல் டெல்லி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றதாகவும் கூறுகின்றன. ஆனால் அவர் குறிப்பிடும் காலங்களில் Entire Political Science என்ற படிப்பே இல்லை என்றும், மேலும் அத்தகைய படிப்பே இல்லை என்றும், பிரதமர் மோடியைத் தவிர உலகத்தில் வேறு எவருமே அப்படிப்பை படிக்கவில்லை என்றும் எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன.

என்ன வழக்கு.?

இந்தநிலையில் கடந்த ஏப்ரல் 2016 இல், அப்போதைய தலைமை தகவல் ஆணையர் எம் ஸ்ரீதர் ஆச்சார்யுலுவிற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடி பெற்ற பட்டங்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து மோடி பட்டம் படித்ததாக கூறப்பட்ட குஜராத் மற்றும் டெல்லி பல்கலைகழகத்திற்கு தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டர்.

அந்த உத்தரவை எதிர்த்து குஜராத் பல்கலைக்கழகம் அணுகியதை அடுத்து, குஜராத் உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை நிறுத்தி வைத்தது. அப்போது இது குறித்து கூறிய அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்த தகவல்களை ஆணையம் ஏன் மறைக்க விரும்புகிறது என்று வியந்தார்.

அந்தக் கடிதத்தின் அடிப்படையில், பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்த பதிவேடுகளை டெல்லி முதல்வரிடம் அளிக்குமாறு குஜராத் பல்கலைக்கழகத்துக்கு சிஐசி உத்தரவிட்டது. ஆனால் தகவல் ஆணையரின் உத்தரவை நிறுத்தி வைக்குமாறு பல்கலைகழகம் உயர்நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வந்துள்ளது.

அரவிந்த கெஜ்ரிவாலுக்கு அபராதம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு குறித்த தகவல்களை அளிக்க குஜராத் பல்கலைக்கழகத்திற்கு தலைமை தகவல் ஆணையர் (சிஐசி) 2016 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை குஜராத் உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.

கர்நாடகா தேர்தல்; பாஜகவிற்கு காத்திருக்கும் சிக்கல்.! என்ன ஆகும்.?

மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் அந்தத் தொகையை குஜராத் மாநில சட்ட சேவைகள் ஆணையத்திடம் 4 வாரங்களுக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் ரியாக்சன்

இந்த உத்தரவு மற்றும் அபராதம் குறித்து கெஜ்ரிவால் தனது ட்வீட்டர் பதிவில், “தங்கள் பிரதமர் எவ்வளவு படித்தவர் என்பதை அறிய நாட்டிற்கு உரிமை இல்லையா? நீதிமன்றத்தில் அவரது பட்டத்தை வெளியிடுவதை அவர்கள் ஏன் கடுமையாக எதிர்த்தனர்? பட்டம் பார்க்க கேட்பவருக்கு அபராதம் ஏன்?’’ என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.