கணக்கு தொடங்கிய 5 ஆண்டுகளுக்குள் இபிஎஃப் தொகையை எடுத்தால்…

பட்ஜெட் 2023 மெமோராண்டத்தில், “பல குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு பான் அட்டை இல்லை என்பது கவனிக்கப்படுகிறது. இதனால் பிரிவு 192A இன் கீழ் பல கணக்குகளில் அதிகபட்ச விளிம்பு விகிதத்தில் TDS கழிக்கப்படுகிறது. எனவே, சட்டத்தின் பிரிவு 192A க்கு இரண்டாவது விதியைத் தவிர்க்க முன்மொழியப்பட்டுள்ளது. இதனால் ஒரு நபர் பான் எண்ணை அளிக்கத் தவறினால், திரட்டப்பட்ட நிலுவைத் தொகையை செலுத்துவதில், 20 சதவீதம் என்ற விகிதத்தில் டிடிஎஸ் கழிக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வருமான … Read more

ராஜஸ்தானில் அமலான சுகாதார உரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு: தனியார் மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் பாதிப்பு

புதுடெல்லி: ராஜஸ்தானில் அமலான சுகாதார உரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தனியார் மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ‘சுகாதார உரிமை சட்டம்’ காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் அமலாகி உள்ளது. இதற்கான மசோதா சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அறிமுகமானது. இது கடந்த மார்ச் 21-ல் குரல் வாக் கெடுப்பு மூலம் சட்டமானது. இந்த சட்டத்தின்படி, விபத்துகளில் படுகாயம் அடைந்தும் அல்லது பிற பாதிப்புகளுக்கும் அவசர சிகிச்சை பிரிவுக்கு வரும் அனைவருக்கும் … Read more

Old Pension Scheme: ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி, திட்டத்தில் மாற்றங்கள் செய்ய தயாராகும் அரசு!!

அரசு ஊழியர்களிடையே பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான தேவை அதிகரித்து வருவதால் மத்திய அரசு இதற்காக பல வித ஏற்பாடுகளை செய்து திட்டங்களை தீட்டி வருகிறது. சொல்லப்போனால் இது ஒரு தேர்தல் பிரச்சனையாகவே மாறி வருகிறது. இந்த ஆண்டு பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. பின்னர் 2024ல் மக்களவைத் தேர்தலும் வரவுள்ளது. இதற்கு முன், 3 நடவடிக்கைகள் தொடர்பாக, அரசுக்கும், ஓய்வூதிய ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கும் இடையே பல வித வாக்குவாதங்களும் பேச்சுவார்த்தைகளு நடந்துவருகின்றன.  முதல் வழி … Read more

டெல்லி வாசிர்பூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

டெல்லி: டெல்லி வாசிர்பூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 25 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

அதானி நிறுவனத்தில் ‘திடீர்’ தீ விபத்து..!!

நொய்டாவில் தகவல் மையம் ஒன்றை அதானி நிறுவி வருகிறது. இதற்கான கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த நிறுவனத்தில் வெல்டிங் பணிகள் நடந்த இடத்தில் திடீரென தீப்பிடித்தது. அருகில் இருந்த தெர்மோகோல் மற்றும் பிளாஸ்டிக் ஷீட்டுகளில் தீப்பிடித்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் இந்த தீ … Read more

ஏப். 9 முதுமலை வருகிறார் பிரதமர் மோடி..!!

பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 8-ம் தேதி சென்னை வருகிறார். சென்னை விமானநிலைய புதிய கட்டிடம் திறப்பு விழா, சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் சேவை துவக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்த நிலையில் தொடர்ந்து ஏப்ரல் 9 ஆம் தேதி முதுமலை வருகிறார். ஆஸ்கர் விருது வென்ற தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன் , பெள்ளியை பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடுகிறார். இந்த தகவலை மத்திய மந்திரி பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளார். 50 … Read more

மாநில அரசுகளை பாரபட்சமாக நடத்தும் மத்திய அரசு: 2 நாள் தர்ணாவில் ஈடுபட்ட மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: மாநில அரசுகளை மத்திய அரசு பாரபட்சமாக நடத்துகிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு 29-ம் தேதி மதியம் தர்ணா போராட்டத்தை தொடங்கினார். மகாத்மா காந்தி ஊரக வேலை (100 நாள்), அனைவருக்கும் வீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்காததைக் கண்டித்து 30 மணி நேர போராட்டத்தைத் தொடங்கினார். அவருடன் திரிணமூல் காங்கிரஸ் … Read more

கோவில் கிணற்றின் படிக்கட்டு சரிந்து விழுந்த விபத்து – பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு

மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள கோவிலில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் ராம நவமி கொண்டாட்டம் நடைபெற்றது. படிக்கிணற்றில் வழிபாடு நடத்திய போது படிக்கட்டுகள் எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தன. படிக்கட்டுகளில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்ததனர். இதில் 35 பேர் உயிரிழந்தனர். கிணறு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கியவர்களில் 20 பேரை உயிருடன் மீட்புபடையினர் மீட்டனர். Source link

மணப்பாறை முறுக்கு, மானாமதுரை தேன், ஆத்தூர் வெற்றிலை உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு

டெல்லி: மணப்பாறை முறுக்கு, மானாமதுரை தேன், ஆத்தூர் வெற்றிலை உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் 11 பொருட்களுக்கு ஒன்றிய அரசின் புவிசார் குறியீடு பதிப்பகம் புவிசார் குறியீடு வழங்கியது.

மத்திய பிரதேசத்தில் கோயில் கிணறு இடிந்து விழுந்த விபத்து: பலி 35 ஆக அதிகரிப்பு

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கோயில் கிணற்றின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், படேல் நகரில் பழமையான பாலேஷ்வர் மகாதேவ் கோயில் உள்ளது. இக்கோயிலில் சுமார் 40 அடி ஆழமுள்ள பழங்கால கிணறு உள்ளது. கான்கிரீட் சிலாப் கொண்டு இந்த கிணறு மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று ராமநவமியை முன்னிட்டு இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. … Read more