“10 மாநிலங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் மூன்றில் ஒருவர்” – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் 27 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளதாகவும், பத்து மாநிலங்களில் மூன்றில் ஒருவர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்வதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ‘இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் உயர்ந்திருக்கிறதா? அப்படியானால் அதைக் குறைக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இணையமைச்சர் ராவ் … Read more

இந்திய வீரர் ரோகித் ஷர்மாவின் உருக்கமான ஃப்ளாஷ்பேக்கை பகிர்ந்த, மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஓஜா!

மும்பை: ‘நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் கிரிக்கெட் உபகரணங்களை வாங்குவதற்காக, வீடுவீடாகச் சென்று பால் பாக்கெட்களை விநியோகித்துள்ளார். இன்று ரோகித் இவ்வளவு உயரத்தில் இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. இந்திய வீரர் ரோகித் ஷர்மாவின் உருக்கமான ஃப்ளாஷ்பேக்கை பகிர்ந்த, மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஓஜா.

பான் கார்டு – ஆதார் எண் இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு!

பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக இந்த காலக்கெடுவை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் திட்டம்

புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து, எம்.பி பதவி இழப்புக்கு அவர் ஆளானார். இதையடுத்து, அரசு பங்களாவை காலி செய்யுமாறு மக்களவை செயலகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அரசின் இத்தகைய அடுத்தடுத்த நடவடிக்கை எதிர்க்கட்சிகள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் … Read more

இருசக்கர வாகனத் திருட்டில் கைதான இளைஞன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும்போது தப்பியோட்டம்..!

புதுச்சேரியில் இருசக்கர வாகன திருட்டில் நேற்று கைது செய்யப்பட்ட இளைஞன், மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்து சென்றபோது தப்பியோடினான். வேலைக்கு செல்லாமல், இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டுவந்த அப்துல் காதர், வாகனத் தணிக்கையின்போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டான். அவனிடமிருந்து இரண்டரை லட்ச ரூபாய் மதிப்பிலான 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உடல்நிலை சரியில்லாததால், சிறை காவலர்கள் அவனை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு தப்பியோடினான். Source link

20 மாநிலங்களில் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் மருந்துக்கட்டுப்பாட்டு இயக்குநரக அதிகாரிகள் சோதனை

டெல்லி: 20 மாநிலங்களில் சுமார் 76 மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் மருந்துக்கட்டுப்பாட்டு இயக்குநரக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். தரம் குறைந்த மருந்துகளை தயாரித்ததாக 18 நிறுவனங்களின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மோடி படத்தைக் கிழித்த வழக்கில் குஜராத் காங். எம்.எல்.ஏவுக்கு ரூ.99 அபராதம்!

பிரதமர் நரேந்திர மோடி படத்தைக் கிழித்த காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு ரூ.99 அபராதம் விதித்து குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வேளாண் கல்லூரி மாணவர் போராட்டத்தின்போது துணைவேந்தர் அறைக்குள் நுழைந்து, அவரது மேசையில் இருந்த பிரதமர் மோடியின் புகைப்படத்தை கிழித்தெறிந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ அனந்த் படேல் என்பவருக்கு ரூ.99 அபராதம் விதித்துள்ளது குஜராத் நீதிமன்றம். இந்த வழக்கில் கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் வி.ஏ.தாதால் தீர்ப்பளித்துள்ளார். சட்டப்பிரிவு 447-ன்கீழ் குற்றவியல் அத்துமீறல் என்ற வகையில் … Read more

ஒரு தொடக்கத்தை உருவாக்க அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும்..!!

மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் லக்கன் சிங் யாதவின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் கலந்து கொண்ட ராஷ்டிரிய ஜனதா தளத்தின் எம்.எல்.ஏ. பாய் வீரேந்திரா பேசுகையில் கூறியதாவது: பா.ஜ.க.வை எதிர்த்து போராட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும். 2024ம் ஆண்டு பா.ஜ.க.வுக்கு எதிரான எதிர்க்கட்சி போராட்டத்துக்கு நிதிஷ் குமார் தலைமை தாங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சூனிய வேட்டையின் … Read more

மக்கள்தொகை – காவல் துறையினர் விகிதத்தில் பின்தங்கிய பிஹார், மேற்கு வங்கம்; தமிழகத்திலும் குறைவே

புதுடெல்லி: மக்கள்தொகை – காவல் துறையினர் விகிதாச்சாரத்தில் பிஹாரும், மேற்கு வங்கமும் பின்தங்கி இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு எத்தனை காவல் துறையினர் இருக்க வேண்டும், அதாவது அரசு அனுமதித்துள்ள எண்ணிக்கை எத்தனை, உண்மையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது குறித்த புள்ளி விவரத்தை காவல் துறை ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான அரசு அமைப்பு சேகரித்து வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி சேகரிக்கப்பட்ட … Read more

தொடர் போராட்டங்களை அறிவித்தது காங்கிரஸ்

டெல்லி: நாளை முதல் காங்கிரஸ் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளது என காங். பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார். ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து மாநில தலைநகரங்களிலும் அம்பேத்கர், காந்தி சிலை முன்பு நடத்தப்படும். நாளை முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நாடு முழுவதும் ஜெய் பாரத் சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும். ஏப்ரல் 3ம் தேதி முதல் பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் நடத்தப்பட உள்ளது எனவும் கூறியுள்ளார்.